Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லவ்வர் (பட.விமர்சனம்)

படம்: லவ்வர்

நடிப்பு: மணிகண்டன்,   ஶ்ரீ  கவுரி பிரியா,  கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார்,  ரினி நிகிலா, அருணாசலேஸ்வரன்

தயாரிப்பு: மில்லியன் டாலர்  ஸ்டுடியோஸ், எம் ஆர் பை என்டர்டெயின்மென்ட் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

இயக்கம்: பிரபு ராம் வியாஸ்

ரிலீஸ்: சக்தி ஃபிலிம் பேக்டரி

பி ஆர் ஒ: யுவராஜ்

அருண் (மணிகண்டன்),  திவ்யா (ஶ்ரீ கவுரி பிரியா)  இருவரும் ஆறு வருடமாக காதலிக்கிறார்கள். அவர்களுக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வருகிறது, அவ்வப் போது  தீர்கிறது . ஆனாலும் இருவர் மனமும் காதலில் லியித்தி ருக்கிறது.  ஒருமுறை தன் வீட்டுக்கு திவ்யாவை அருண் அழைத்துச் செல்ல அங்கு அருணின் தந்தைக்கும் அருணின் தாயாருக்கும் திடீர்  சண்டை நடக் கிறது.  அதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள் திவ்யா.  ஏற்கனவே  கோபக்காரனாக இருப்பதால் அருண்   மீது ஒரு இனம் புரியாத வெறுப்பில் இருக்கும்  திவ்யா வுக்கு  அவனது குடும்பத்திலும்  சிக்கல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். ஒரு கட்டத்தில்  அருணை விட்டு பிரிய முடிவு செய்து பிரேக் அப் சொல்கி றாள் திவ்யா.  அருணால் அதை ஏற்க முடிய வில்லை. மீண்டும் மீண்டும் திவ்யாவை சந்தித்து  மன்னிப்பு கேட்டு தன் காதலை ஏற்கும்படி கெஞ்சுகிறான்  அவள் ஏற்க மறுத்தால் மிஞ்சுகிறான் .  மீண்டும் கெஞ்சுகிறான், மீண்டும் அவள் மறுத்தால் சாகப்போவதாக மிரட்டுகிறான். என்ன செய்வ தென்று புரியாமல் தவிக்கும் திவ்யா.  நீயும் உன் தந்தையைப் போல் தான் இருக்கிறாய் என்று சுடுசொல் பேசுகிறாள்.  அதைக் கேட்டு மனம் நொந்துப்போகும் அருண்  அவளை விட்டு பிரிந்து செல்கிறான். வருடங்கள் உருண் டோடுகின்றன. வேலை இன்றி சுற்றித் திரிந்த அருண் சொந்த. மாக  ஒரு காபி ஷாப் வைத்து வாழ்வில் உயர்கிறான்.   அருண்  நடத்தும் காபி ஷாப் என்று தெரியாமல் திவ்யா அங்கு வருகிறாள். அவளைக் கண்டு அருண் என்ன செய்கிறான்?  மீண்டும் அவளிடம் காதலை கேட்டு  கெஞ்சுகிறானா? அல்லது காதலை உதறி விட்டுச் செல்கிறானா ?  என்பதுதான் கிளைமாக்ஸ்.

குட் நைட் உள்ளிட்ட படங்களில் நல்ல பிள்ளையாக வந்த மணி கண்டன் இப்படத்தில் தீவிரமான ஒரு காதலனாக நடித்திருக்கிறார். அருண் என்ற அவரது கதாபாத் திரம் தொடக்கம் முதல் இறுதி வரை படத்தை எங்கேஜாக வைக்கிறது.
திவ்யாவாக நடித்திருக்கும் ஶ்ரீகவுரி இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். மிகவும் கடினமான காதலி வேடம் தனது முழு ஈடுபாட் டையும் செலுத்தி நடித்திருக்கிறார்.

மென்மையாகத் தொடங்கும் மணிகண்டன் ஶ்ரீ கௌரி காதலில் அவ்வப்போது விரிசல்கள் விழுவது இந்தக் கால காதலை கண்முன் நிறுத்துகிறது. நட்பு என்ற பெயரில் கவுரி ஆண் நண்பர்களுடன் பழகினால் அது மணிகண்டனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவனிடம் எதற்கு பேசுகிறாய் என்று கவுரியிடம் கோபிக்கிறார் . அதற்கு பதிலடியாக “பேசினால் என்ன”  என்று கவுரி கோபிக்கிறார்.
இதனால் மணிகண்டனுக்கு தெரியாமல் தனது அலுவலக நண்பருடன் பழகுகிறார் . சொல்லாமல் பழகினாலும் தப்பு சொல்லிவிட்டு பழகினாலும் தப்பு என்று மணிகண்டன் ஒவ்வொன் றையும் தவறான கண்ணோட்டத் துடன் பார்த்து கவுரி மீது ஒவ்வொரு முறை பாயும் போதும் அவரது சந்தேகத்தனம்  தாண்டவ மாடுகிறது.

சைக்கோ தனமான ஒரு காதலன் என்று எண்ணத் தோன்றம் அளவுக்கு மணிகண்டன் அந்த கதாபாத்திரத்தில் மூழ்கிவிடு கிறார்.

நெகடிவ் ஷேட் வேடம்  அதனால் தனது ஹீரோ இமேஜிக்கு பங்கம் வருமோ என்று கொஞ்சமும் யோசிக்காமல் தன்னால் எந்த வேடத்தையும்,  100க்கு 100 சதம் பெர்பெக்டாக தர முடியும். என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக் கிறார்.  நடிப்புக்கு தீனி போடும் வேடம் என்பதை  தனது நடிப்பால் வெளிப்படுத்தி மீண்டும் ரசிகர்களுக்கு   தீனி போட்டிருக் கிறார் மணிகண்டன்.

மணிகண்டன் ஶ்ரீ கவுரி போன்று இப்படியும் சில காதலர்கள் சமூகத்தில்  இருப்பது நிஜம்தான்.
மணிகண்டனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியாமல் அவரிடம் இருந்து காதலை பிரேக் அப் செய்து கொள்ளும் கவுரி  மீண்டும் மணிகண்டன் உடன் பேசுவதெல்லாம் அடுத்து மணிகண்டனின் ஆட்டம் எப்படி இருக்குமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.

தனது நண்பர் மற்றும் தோழி களுடன் கவுரி சுற்றுலா செல்ல முடிவு செய்ய அந்த நேரம் பார்த்து அங்கு வரும் மணிகண்டனையும் தன்னுடன் வருகிறாயா என்று கேட்க  முதலில் வரவில்லை என்று சொல்லும் மணிகண்டன் திடீரென்று நானும் வருகிறேன் என்று சொன்னதும் அரங்கில் அச்சம் கலந்த ஒரு நிசப்தம் நிலவுகிறது.. இதற்குப் பிறகு மணியின் இன்னொரு சைக்கோ காதல் ஆட்டம் இருக்கப் போகிறது என்ற கணிப்பு தவறவில்லை.

மணிகண்டன் நடிப்பு  எப்படி என்று கேட்டால்,  செம்மையா ஒரு  ஆட்டம் ஆடி முடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மணிகண்டன் தாயிடம் தான் மணியின் காதலை பிரேக் அப் செய்து விட்டதாக ஶ்ரீ கவுரி சொல்லும்போது கதறியபடி கண்ணீர் பெருக்கெடுக்க அழும்போது காதல்.பிரிவின் வலியை கண்முன் நிறுத்துகிறார்.

கண்ணா ரவி ஜென்ட்டிலான ஒரு கதாபாத்திரத்தில் பதற்றமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக் கிறார்.

பருத்தி வீரன் சரவணன் கதாபாத் திரம்  அக்னி. நட்சத்திரம் விஜய குமாரை நினைவுக்கு கொண்டு வருகிறது.  மணிகண்டனின் தாயாக வரும் கீதா கைலாசம்  அம்மாவின் அன்பை கண்முன் நிறுத்துகிறது.

மில்லியன் டாலர்  ஸ்டுடியோஸ், எம் ஆர் பை என்டர்டெயின்மென்ட் சார்பில்  நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரித்திருக் கிறார்கள்

ஷான் ரோல்டன்.இசை காதலின்  மென்மையையும், காதல் பிரிவின் வலியையும் நெஞ்சுக்குள்  பரவச்  செய்கிறது.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா  கேமிரா வித்தை  காட்டாமல்  ஸ்கிரிப்ட்டின் எழுத்து வடிவத்தை வாழ்க்கை வடிவமாக்கி இருக்கிறது.

இயக்குனர்  பிரபு ராம் வியாஸ் காதல் உண்மை ரூபத்தை  கண்ணின் கருவிழிக்குள் ஊடுருவச்  செய்து இதயத்துக்குள்  பதியம் போடுகிறார்.

படத்தில் எந்நேரமும் மணிகண்டன் புகையும் கையுமாக மதுவும் கிளாசுமாக  வரும் காட்சிகளை குறைத்திருக்கலாம்.

லவ்வர் – ஒரு காதலன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான அக்மார்க் முத்திரை..

 

 

 

Related posts

இணையத்தை கலக்கும் தனுஷின் நானே வருவேன்பட பாடல்

Jai Chandran

ஏற்கும் வேடத்தில் முத்திரை குறிக் கோள்.. ’தடம்’  வித்யா பிரதீப்!

Jai Chandran

Naga Chaitanya, Chandoo Mondeti, Bunny Vas Meet Fishermen Families

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend