Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கை: இந்து கோயில்கள் புனரமைக்க ரூ 1000 கோடி.. ஸ்டாலின் தந்த 500 வாக்குறுதிகள்..

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. திமுக, அதிமுக, அமமுக, மநீம கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைந்துள்ளது.
திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். முன்ன தாக மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி நினைவிடங் களில் கொண்டு சென்று வைத்து மரியாதை செலுத்தி னார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன், டி.ஆர்.பாலு போன்றவர்கள் சென்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் ஏழைகள் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்தவர்களுக்கான நல திட்டங்கள் என 500 வாக்குறுதிகள் அளிக்கப் பட்டன. அதன் விவரம் வருமாறு:
* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது.
* எரிவாயு (காஸ்) சிலிண்ட ருக்கு ரூ 100 மானியம் அளிக்கப்படும்.
*பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப் படும்.
* கலைஞர் பெயரில் உணவகம் அமைக்கப்படும்.
* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்படும்.
* அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப் படும்.
* மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
*பணியின்போது உயிரழக்கும் காவலர் குடும்பத்துக்கு ரூ 1 கோடி வழங்கப்படும்.
* குடிசை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
* சென்னை உள்ளிட்ட நகரங் களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும்.
* பள்ளி மாணவர்களுக்கு கலையில் ஊட்ட சத்தாக பால் வழங்கப்படும்.
* 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயாமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*பயிற்சி முடித்து காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கு உடனடி யாக பணி வழங்கப்படும்.
*முதல் தலைமுறை பட்ட தாரிக்கு அரசு வேலையில் முன்னுரிமை.
* ஆட்டோ வாங்குவதற்காக தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப் படும்.


* சிறு குறு விவசாயிகள் மின்மோட்டார்கள் வாங்க ரூ 10 ஆயிரம் வழங்கப்படும்.\
* நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பெட்ரோல் விலை லிட்ட ருக்கு ரூ 5 குறைக்கப்படும்.
* டீசல் விலை லிட்டருக்கு 4 குறைக்கப்படும்.
* 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்படும்.
* வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
* கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்ப்படும்.
* வனத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப் படும்.
* பத்திரிகையாளர்கள், ஊடக வியலாலர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும்.
* நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே சட்டம் இயற்றப்படும்.
* மக்களிடம் வாங்கிய மனுக் களுக்கு 100 நாட்களில் தீர்வு கிடைக்கும்.
* லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* தமிழகத்தில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்படும்.
* அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் மக்கள் குறை கேட்கும் முகாம் நடத்தப் படும்.
* சென்னையில் திராவிட இயக்க திடல் கோட்டம் அமைக்கப்படும்.
* கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டு வரும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.
* கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 4 ஆயிரம் நிவாரணம் வழங் கப்படும்.
* ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைக்கப்படும்.
* நியாயவிலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.
* உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
*அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலி ருந்து 40 சதவீதமாக உயர்த்தப் படும்.
* நகர்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்ட வழங்கப்படும்.
*கிராம நத்தத்தில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கப்படும்.
* கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* முக்கியமான மலைக்கோயி கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி செய்யப்படும்.
* கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.


* இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மசூதி, தேவாலயங்கள் புனரமைக்க ரூ 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 60 வயதுக்கு மேற்பட்ட முதியேருக்கு ஓய்வூதியம் ரூ 1500 ஆக உயர்த்தப்படும்.
* தமிழக ஆறுகள் மாசடை யாமல் காக்க தமிழக ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக் கப்படும்.
* இயற்கை ஏரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.
*கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் குடும்பத் திற்கு உரிய இழப்பீடு வழங்கப் படும்.
* ஊட்ட சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவுக்கூடை திட்டம் செயல்படுத்தப்படும்.
*மகளிருக்கு பேறுகால உதவித்தொகை ரூ 24 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* அரசு பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
இதுபோல் 500 தேர்தல் வாக்குறுதிகளை திமுக தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார் மு.க.ஸ்டாலின்.

Related posts

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதா சாகேப் விருது: பிரதமர், முதல்வர் முக்கியஸ்தர்கள் வாழ்த்து..

Jai Chandran

தீர்க்கதரிசி ( பட விமர்சனம்)

Jai Chandran

ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாயும். – நடிகை எச்சரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend