Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விக்ரம் (பட விமர்சனம்)

படம்: விக்ரம்

நடிப்பு: கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா (சிறப்பு தோற்றம்), நரேன், அருள்தாஸ், சம்பத்ராம், ஹரீஸ்ஃபெராடி, கோகுல்நாத், அருணோதயன், அனீஷ் பத்மநாபன், ஜாபர் சாதிக், மைனா நந்தினி, மஹேஸ்வரி

தயாரிப்பு: கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன்

இசை : அனிருத்

ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன்

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

பி ஆர் ஓ: டைமண்ட் பாபு

வெளியீடு: ரெட் ஜெயன்ட்

போதை மருந்து தயாரிக்கும் பல கோடி மதிப்பிலான மூலப் பொருள் கொண்ட இரண்டு கன்டெயினர்களை போதை தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி விக்ரம் (கமல் ஹாசன்) கடத்தி மறைத்து வைக்கிறார். பின்னர் அவரே கொலை செய்யப்பட்டுவிட்டது போல் தலைமறை வாக இருந்து தன் மகனை கொன்றவர் களை பழிவாங்குகிறார். இவ்வளவு அதிரடிகளையும் விக்ரம்தான் செய்கிறார் என்பது ஒருகட்டத்தில் போதை மருந்து கடத்தல் தலைவன் சந்தனத்துக்கு (விஜய்சேதுபதி)  தெரியவர அவன் விக்ரமை தன் வழிக்கு கொண்டு வர திட்டமிடுகிறான். விக்ரமின் பேரக் குழந்தையை கடத்த முயல்கிறான். போதை மருந்து கன்டெய்னர்களை கண்டு பிடிக்காவிட்டால் தன் குடும்பத் தையே ரோலக்ஸ் (சூர்யா) தீர்த்து கட்டிவிடுவான் என்ற பயத்தால் விக்ரமுடன் கடுமையாக மோதுகிறான் சந்தனம். இதன் முடிவு என்ன என்பதை அதிரடி ஆக்‌ஷனுடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.

கே ஜி எஃப்2 தந்த அதிர்வுடன் இருக்கும் ரசிகர்களை அதிலிருந்து மீட்டு தனது பிரம்மாண்ட பீரங்கிவேட்டு கிளைமாக் ஸின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறது விக்ரம். அதற்கு கமல், லோகேஷ் கனகராஜ் இருவரின் கூட்டணி மிக முக்கிய காரணம்.

சில பல வருடங்களுக்கு பிறகு கமல் திரையில் தோன்றுவது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அது ஏமாற்றமில்லாததாக அமைந்திருக் கிறது.

எவயதான தோற்றத்தில் வந்தாலும் இன்னும் இளமை துடிப்புடன்தான் இருக்கிறேன் என்பதை “பத்தல பத்தல ” பாடலில் தரும் நடன அசைவில் உணர்த்துகிறார். ரசிகர்களின் ஆரவாரம் அரங்கை உலுக்குகிறது.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கமலை குண்டு வீசி கொல்வதுபோல் காட்டி இடைவேளைக்கு பிறகு மீண்டும் கமல் என்ட்ரி தரும்போது மற்றொரு ஆரவாரம் காதை பிளக்கிறது.

கிளைமாக்ஸில் கமலும், விஜய்சேதுபதியும் மோதுவது மதம்பிடித்த இரண்டு யானைகள் மோதுவதுபோல் திணறலை ஏற்படுத்துகிறது.

கே ஜி எஃப் 2ன் பெரியண்ணன் துப்பக்கியை தூக்கி சாப்பிடும்படியாக பிரங்கி தாக்குதல் நடத்தி உலகநாயகன் உச்சத்தை தொடுகிறார்.

கமலுக்கு அடுத்து தனது கதாபாத்திரத் தில் ஸ்கோர் செய்கிறார் விஜய்சேதுபதி. தங்க பற்களில் போதை மருந்தை அழுத்திவைத்து கோபாவேசத்துடன் சண்டை போடுவதும், கிளைமாக்ஸில் கமலை துவம்சம் செய்து அவரது கழுத்தில் கைகளை இறுக்கி இழுத்துவரும்போதும் பயமுறுத்துகிறார்.

படத்தின் முதல்பாதி முழுவதும் ஸ்கிரீனை ஆக்ரமிக்கிறார் பஹத் பாசில். நுணுக்கமாக புலன் விசாரணை செய்து கமல் கொல்லப்படவில்லை என்பதை கண்டுபிடித்து இரண்டாம் பாதிக்கு அழுத்தமான ஓபனிங் தருகிறார்.

நரேன், சந்தானபாரதி, அருள்தாஸ், சம்பத்ராம், ஹரீஸ்ஃபெராடி, கோகுல்நாத், அருணோதயன், அனீஷ் பத்மநாபன், ஜாபர் சாதிக், மைனா நந்தினி, மஹேஸ்வரி ஆகியோரும் கதாபாத்திரங் களோடு ஒன்றிப்போயிருக்கின்றனர்.

கிளைமாக்ஸ் முடிந்துவிட்டது என்று நினைத்தால் திடீரென்று என்ட்ரி தரும் சூர்யா, ரத்தம் கொப்பளிக்க மிரட்டி விக்ரம்3 ம் பாகத்துக்கு லீட் கொடுத்து விட்டு ஆவலை ஏற்படுத்தியிருக்கிறார்.

சில இடங்களில் லாஜிக் மீறல் இருந்தாலும் அதெல்லாம் கடலில் கரைந்த பெருங்காயமாகிவிடுகிறது.

கமல்ஹாசன், ஆர். மகேந்திரன் தயாரித் திருக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.கைதி,  மாஸ்டரில் உள்ள கடத்தல் கதை சாயல் இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகள் அந்த சாயலை விழுங்கி ஏப்பம்விட்டு விடு கிறது.

தொடக்கம் முதல் இறுதிவரை இடைவெளியில்லாமல் இடிமுழக்க இசையால் அரங்கை பரபரப்பு குறையாமல் கட்டிப்போட்டிருக்கிறார் இசை அமைப்பளர் அனிருத்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்துக்கு காட்சிகளை மிரட்டியிருக்கிறது.

விக்ரம்- கமல், லோகேஷ் கூட்டணியின் மிரட்டல்.

Related posts

உலக சினிமா, இயக்குனரின் படங்களை தான் கொண்டாடுகிறது- சாமி

Jai Chandran

’தனி ஒருவன்’ வில்லன் நடிகர் அனில் முரளி காலமானார்..

Jai Chandran

VELS UNIVERSITY Student is Representing INDIA in the Tokyo Olympics

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend