Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவம் சங்கர் நடிக்கும் ” பீட்ஸா பாய்ஸ்” பட இசை டிரெய்லர் வெளியீடு..

பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! நடந்தது.

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக பீட்சா பாய்ஸ் உருவாகியுள்ளது. சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கதை, இயக்கம் மற்றும் இசைப் பொறுப்புகளை சேகர் கேசவ் சிரின் ஏற்றுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் சிவம் சங்கர். இப்படத்தில் சரத் லோகிதாஸ்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகராஜ் என்ற காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஷோப்ராஜ் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 4 அன்று வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர் சஹானா சங்கர், “எங்கள் மகனின் கனவுக்காகவே இந்த படம் தொடங்கப்பட்டது. தற்பொழுது ஏஐ காரணமாக நிறைய வேலை வாய்ப்புகள் பறிபோகிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை இந்தப் படம் மூலம் தர வேண்டும் என்றும் விரும்பினோம். இது எங்களுடைய முதல் படம். உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்”.

பாடலாசிரியர் மதன் குமார், “இந்த படத்தின் எல்லா சூழ்நிலையிலும் தயாரிப்பாளர்களோடு இருந்தேன். முதல் பாடல் வாய்ப்பு கொடுத்த பிரபு சார், இயக்குநர் சேகர் சாருக்கு நன்றி. பாடல் வரிகள் பிடித்துபோக கூடுதல் வசனகர்த்தாவாகவும் பொறுப்பு தந்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. தமிழ் சினிமாவுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது”.

எடிட்டர் கணேஷ் குமார், “என் தம்பி சிவம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உங்கள் ஆதரவு வேண்டும்”.

நடிகர் ரமேஷ், “வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. காக்கா முட்டை படத்திற்கு பிறகு பீட்சா என்ற படம் நடித்திருப்பது மகிழ்ச்சி. நன்றி”.

தயாரிப்பாளர், நடிகர் தேனப்பன் “கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்தில் விஜய் சேதுபதி அறிமுகமானது போல இந்த படத்தில் சிவம் நடிகராக அறிமுகமாகிறார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் பேரரசு, “பீட்சா பாய்ஸ் படத்தின் டிரெய்லர், பாடல்கள், இசை எல்லாமே நன்றாக வந்துள்ளது. பீட்சா மேற்கத்திய உணவு என்றாலும் நம் ஊர் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி சமைக்க வேண்டும் என்பது போல ஒரு வசனம் இதில் இடம் பெற்றுள்ளது. அதை முக்கியமானதாக கருதுகிறேன். ஏனெனில், இப்போதைய தலைமுறையின் உணவு வழக்கமே வேறொன்றாக மாறிவிட்டது. படக்குழுவினரும் யூத் டீமாக உள்ளது. திருப்பாச்சி படத்தில் எல்லா பாடல்களும் நானே எழுதிய போது எல்லோரும் என்னை திட்டினார்கள். ஆனால், இப்போது இயக்குநர்கள் பாடல் எழுதுவது இசையமைப்பது எல்லாம் வழக்கமாகிவிட்டது. நாயகன், நாயகி இருவரும் பெரிய இடத்திற்கு வருவார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

லைகா புரொடக்சன்ஸ் தமிழ்க்குமரன், “சினிமா என்பது கனவு. அந்த கனவில் வெற்றி பெற பீட்சா பாய்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். பீட்சா படம் பெரிய வெற்றி பெற்றது போலவே இந்த படமும் வெற்றி பெறும். சிறு பட்ஜெட் படங்களுக்கு நல்லது செய்யும் விதமாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விரைவில் நல்ல அறிவிப்புகள் வெளியிட இருக்கிறோம். படம் பெரும் வெற்றி அடைய தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்”.

நடிகர் அருள், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர், மதன் சாருக்கு நன்றி. காமெடி, காதல், ஆக்‌ஷன் என படத்தில் எல்லாமே உள்ளது. நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்”.

நடிகர் ஜிமிகிலி, “பீட்சா பாய்ஸ் படத்தில் எல்லோரும் ஒரு குடும்பமாக பணிபுரிந்து இருக்கிறோம். இந்த படம் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு மோட்டிவேஷன் கிடைக்கும். கண்டிப்பாக படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

நடிகை அல்பியா சிக்கந்தர், “எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. இசையும் நன்றாக உள்ளது. ஹீரோ சிவம் சார் மற்றும் கோ ஸ்டார்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லோருக்குமே நன்றி. இந்த படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்து உள்ளோம். படம் நன்றாக வந்திருக்கிறது. டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்”.

நடிகர் சிவம் சங்கர், ” என்னுடைய நண்பர்கள், சுரேஷ் சார், அப்துல் சார், மது மேம், பாடலாசிரியர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவருக்கும் நன்றி! என்னுடன் நடித்த என்னுடைய நண்பர்கள், ஹீரோயின் என எல்லோருமே நண்பர்களாக தான் வேலை பார்த்தோம். இது போன்ற நல்ல கதையை கொடுத்தால் எனது இயக்குநருக்கு நன்றி! என்னுடைய தயாரிப்பாளர்கள், அம்மா அப்பாவுக்கு நன்றி. படம் டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு தேவை”

உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா, “சிறுபட்ஜெட் படங்களுக்கு பின்னால் எத்தனை பேரின் கனவு, உழைப்பு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் நிறைய சிறுபட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். நல்ல கதை இருந்தால் மக்களும் அதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். கனவுக்கு நம்முடைய முழு உழைப்பை கொடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கருத்தை பீட்சா பாய்ஸ் படம் சொல்கிறது. நிச்சயம் பேசப்படும் படமாக இது இருக்கும். டிசம்பர் 4 அன்று நீங்களும் படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும். விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த தமிழ்க்குமரன் சார், தேனப்பன் சார் மற்றும் பேரரசு சாருக்கு நன்றி. தேனப்பன் சார் ஒரு படத்தில் நடித்தாலே ஹிட் என்ற செண்டிமெண்ட் உள்ளது. அதுபோல அவர் கலந்து கொண்ட இந்தப் படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன்”.

இசையமைப்பாளர் ஸ்ரீ சாஸ்தா, “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஹீரோ, ஹீரோயின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். டிசம்பர் 4 அன்று திரைப்படம் வெளியாகிறது”.

இயக்குநர் சேகர் கேசவ் ஷிரின், “என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்பொழுது வருகிற படங்கள் எல்லாம் வன்முறை மற்றும் கிளாமர் அதிகம் உள்ளதாக இருக்கிறது. ஆனால், பீட்சா பாய்ஸ் திரைப்படம் அப்படி இல்லை. அம்மா, அப்பா தன் பிள்ளைகளிடம் இந்த படத்திற்கு போய் பார்த்து வா என்று சொல்லும் அளவிற்கு நல்ல கருத்தோடு இருக்கும். பீட்சா எப்படி விதவிதமாக இருக்குமோ அப்படி இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கும். சிறுபட்ஜெட் படங்களுக்கு மீடியா மற்றும் மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும். தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்”.

தயாரிப்பாளர் சங்கர், ” இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. என்னுடைய அம்மா, அப்பா என் மனைவியின் அம்மா, அப்பா என் சகோதரி மற்றும் படக்குழுவினர் அனைவருடைய ஒத்துழைப்புக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் மற்றும் மீடியா ஆதரவு எங்களுக்கு நிச்சயம் தேவை”.

Related posts

ரோமியோ’ பட தியேட்டர் உரிமை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியது

Jai Chandran

பிரசாந்த் – ஹரி இணையும் அதிரடி புதுப்படம்

Jai Chandran

சுஷாந்த் தற்கொலை வழக்கில் நடிகைக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend