Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரோமியோ’ பட தியேட்டர் உரிமை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியது

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி யுள்ளது!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், இப்படத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த “ ரோமியோ” வில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி என பல திறமை யான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள் ளனர்.

படத்தின் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் தனது யூடியூப் சீரிஸ் ​​’காதல் டிஸ்ஷன்சிங்’ மற்றும் ‘ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ’-ன் மூன்றாவது எபிசோட் ஆகியவற். றிற்காக புகழ் பெற்றவர்.

‘ரோமியோ’ தெலுங்கில் “லவ் குரு” என்ற பெயரில் வெளியாக உள்ளது.

‘பத்துதல’ படத்தின் அட்டகாசமான காட்சியமைப்பிற்காகப் பாராட் டப்பட்ட ஃபரூக் ஜே பாஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள் ளார். பரத் தனசேகர் இசையமைப் பாளராக அறிமுகமாகிறார். எஸ் கமல நாதன் கலை இயக்குநரா கவும், விஜய் ஆண்டனி படத் தொகுப்பாளராகவும் பணியாற்றி யுள்ளனர்.

Related posts

Withdraw “Agnipath” Project – kamal Haasan

Jai Chandran

துல்கர் சல்மான் வெளியிட்ட “வேலன்” பட ஃபர்ஸ்ட்லுக்

Jai Chandran

Team Valimai wishes Actor Kartikeya.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend