தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாவட்ட நாடக நடிகர்களுக்கு தேர்தல் காலங்களில் மாதிரி நடத்தை விதி மாறாமல் (Model code of conduct) புராண நாடகங்கள், கோவில் திருவிழாக்களில் தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் நாடக கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது, அதனை ஏற்று தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் தேர்தல் காலங்களில் நாடகங்கள் இரவு நேரத்தில் நடத்த அனுமதி ஆணை வழங்கியுள்ளார்.