படம்: ஹே சினாமிகா
நடிப்பு: துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி, யோகிபாபு, மிர்ச்சி விஜய்,
தயாரிப்பு: ஜியோ ஸ்டுடியோஸ்
இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: ப்ரீதா ஜெயராமன்
இயக்கம்:பிருந்தா
பி.ஆர்.ஓ: நிகில் முருகன்
யாழன் (துல்கர்), மோனா (அதிதிராவ்) காதலித்து திருமணம் செய்கின்றனர். மோனா வேலைக்கு சென்றுவர யாழன் ஹவுஸ் ஹஸ்பெண் டாக இருக்கிறான். ஒன்றிரண்டு வருடங்களுக்கு பிறகு மோனா வுக்கு யாழன் நிறைய பேசுவது எரிச்சலை மூட்டுகிறது. எப்படியாவது யாழனை விட்டு விலகி தன் இஷ்டம்போல் வாழ எண்ணுகிறாள். பாண்டிச் சேரியில் ஒரு வருடம் தங்கி வேலை செய்யும் ப்ராஜக்ட் ஒன்றை வாங்கிக்கொண்டு யாழனை விட்டு செல்கிறாள் மோனா. ஆனால் சில தினங் களில் யாழன் அவளை தேடி பாண்டிச்சேரி வந்துவிடுகி றான். இதனால் அதிர்ச்சி அடையும் மோனா பக்கத்து வீட்டில் உள்ள டாக்டர் மலர் விழியிடம் (காஜல் அகர்வால்) தங்கள் இருவரையும் பிரித்து வைக்க கேட்பதுடன் யாழனை நீங்கள் காதலிப்பது போல் நடியுங்கள் அந்த காரணத்தை வைத்து யாழனை விவாகரத்து செய்து விடுகிறேன் என்கிறாள். அதற்கு ஒப்புக்கொள்ளும் மலர்விழி யாழனை காதலிப் பதுபோல் நடிக்கிறார். சில நாட்களில் யாழனின் நற்குணத்தை கண்டு அவனை மலர்விழி நிஜமாகவே காதலிக்க தொடங்குகிறாள். அதைக்கண்டு மோனா பொறாமை அடைகிறாள். இந்த உண்மைகள் யாழனுக்கு தெரிய வர அதிர்ச்சி அடைகி றான். அவன் எடுக்கும் முடிவு மோனாவுக்கு அதிர்ச்சியாக அமைகிறது. இதன் முடிவு என்பதை படம் விளக்குகிறது.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றாலும் துல்கர் தனது ஹீரோ இமேஜ் பார்க்காமல் நடித்திருக்கிறார். மற்ற ஹீரோக்கள் இந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே.
துல்கருக்கு நிறைய வசனம் பேச வேண்டிய கட்டாயம், தடுமாற்றம் இல்லாமல் பேசி கவர்கிறார்.
மனைவி ரகுல் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியாக நடித்திருக்கும் துல்கர் ஒரு கட்டத்தில் அவர் தனது பேச்சை வெறுப்பதும் தன்னை விட்டே பிரிய நினக்கிறார் என்று தெரிந் ததும் ஷாக்காகி அதிதியை விவாகரத்து செய்ய முடிவு செய்வதுமாக கொஞ்சம் ஹீரோயிசம் காட்டுகிறார்.
அதிதிக்கு நடிப்பை கொட்டி நடிக்க வேண்டிய பாத்திரம் . தொடக்கத்தில் ஜாலியாக நடித்துவிட்டு செல்லும் அதிதி, துல்கர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்ற பயத்தில் கோர்ட்டில் தனது தவறை மன்னிக்கும்படி கண்ணீர் விட்டு கதறி அழும் போது உருக வைக்கிறார்.
காஜல் அகர்வால் தனது பாத்திரத்தை நிதானமாக நடித்து நிறைவு செய்கிறார். ஆனால் வழக்கமான கிளாமர் மிஸ்ஸிங். கன்னம் ரெண்டும் பண்ணுபோல் ஊதி ஆளே மாறிவிட்டார். அதிதி, காஜல் இரண்டுபேரை காட்டிலும் துல்கர்தான் இளமை யாக தெரிகிறார்.
படத்தில் காட்சிகள் ஒவ்வொன் றையும் ஓவியம் போல் படமாக்கியிருக்கிறார் ப்ரீதா ஜெயராமன் .
கோவிந்த் வசந்தா இசையில் ஏ.ஆர்.ரகுமான் நெடி அதிகம்.
படத்தை பாரதி கவிதை, வசனங்களுடன் பட்டை தீட்டியிருக்கிறார் மதன் கார்க்கி.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடனம் அமைத்திருக்கும் பிருந்தா மாஸ்டர் முதன்முறை யாக படத்தை இயக்கி இருக்கிறார். கதையில் தெளி வான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு தெளிந்த நீரோடையாக கடைசிவரை இயக்கி உள்ளார். மணிரத்னம் பாணியிலான டச் பல இடங் களில் வெளிப்படுகிறது.
ஹே சினாமிகா – காதல் கவிதை.