Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் (விமர்சனம் )

படம் (வெப் சீரிஸ் ): ஆக்டோபஸ்

நடிப்பு: அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன், வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர்

தயாரிப்பு: லிசா பி சந்திரன், ஆதித்யா ஜெ ராஜு

இசை: தீபன் சக்கரவர்த்தி

ஒளிப்பதிவு: கண்ணா ஆர்

இயக்கம்: ஜெயச்சந்திரா அஸ்மி

ரிலீஸ்: ZEE5 OTT தளம்

பிஆர்ஓ : சதீஷ் (AIM)

கதை: அன்பு நகர் பகுதியில் மனைவி நிகிதாவுடன் ( சித்து குமரேசன் ) புதிதாக குடியேறுகிறார் வருண்( அஸ்வின் குமார்) மனைவியை அக்கம் பக்கத்தினர் பார்க்கும் வகையில் அடித்து துன்புறுத்துகிறார். யாராவது தட்டி கேட்டால் அவர்களை மிரட்டுகிறார். ஒரு சமயம் வருண் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்கிறது. அதன் பிறகு நிகிதா காணாமல் போகிறார். அவரை வருண் கொலை செய்து விட்டதாக அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் செய்கின்றனர். வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது. அதன்பிறகு நடப்பது என்ன? என்பது எதிர்பார்க்காத திருப்பங்களாக அமைகிறது.

ZEE5 ஓடிடி தளம் ஏற்கனவே பல்வேறு வெற்றிகரமான வெப் சீரிஸ்களை வழங்கி இருக்கிறது. அந்த வரிசையில் இடம் பிடிக்கும் வகையில் ஆக்டோபஸ் வெப் சீரிஸ் உருவாகியிருக்கிறது.

அன்பு நகர் தெருவில் அஸ்வின் குமார் தனது மனைவி சித்து உடன் குடியேறும்போது அந்தப் பகுதியே ஒரு க்ரைம் திரில்லர் பகுதியாக மாறப் போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை.
படிப்படியாக மனைவி சித்துவை அஸ்வின் குமார் அடித்தும், நெருப்பால் சுட்டும் காயங்கள் ஏற்படுத்தி அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தட்டி கேட்கும் போது “என் மனைவியை நான் அடிப்பேன். நீங்கள் யார் கேட்பதற்கு?’ என்று தெனாவட்டாக பதில் சொல்லும்போது அக்கம் பக்கத்தினருக்கு ஏற்படும் கோபம் வெப்சீரிசை பார்க்கும் ரசிகர்களுக்கும் ஏற்படுகிறது.

கணவன் எவ்வளவு கொடுமைக்காரனாக இருந்தாலும் அவனை விட்டுக் கொடுக்காமல் மனைவி சித்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கணவனுக்காக பரிந்து பேசும்போது , இவர் ஏன் தன் கணவன் செய்யும் கொடுமைகளை மறைக்கிறார் என்ற பதட்டம் ஏற்படுகிறது.

எதிர் வீட்டில் வசிக்கும் இளம்பெண் அர்ச்சனா, தனது மனைவி சித்துவை அஸ்வின் கொடுமைப்படுத்து வதைக் கண்டு கோபப்பட்டு பொங்குவதும், ஒரு கட்டத்தில் அவரை வழிமறித்து எச்சரிப்பதும், இவரை அஸ்வின் குமார் என்ன செய்யப் போகிறாரோ என்ற பயம் பரவுகிறது.

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் கதை இவ்வளவுதானா என்று கேட்டால் இது ஒரு பகுதிதான் இந்த கதைக்கு இன்னொரு பகுதி இதே தொடரில் இருக்கிறது. “அதை யாரும் இப்போதைக்கு வெளிப்படுத்த வேண்டாம்” என்று ஒரு கோரிக்கையும் வைத்து புதிதாக பார்ப்பவர்களுக்கு அந்த சஸ்பென்சை புதிதாகவே தர கேட்டுக் கொண்டிருப்பதால் அது பற்றி இங்கு மூச்சு விடப் போவதில்லை..

வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கரன் என்ற மற்றொரு காதல் ஜோடியும் தொடரில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களுடன் அப்பா, அம்மா, பாட்டி ரோல்களில் மேலும் பலர் நடித்திருக்கிறார்கள்.

லிசா பி சந்திரன், ஆதித்யா ஜெ ராஜு தயாரித்திருக்கிறார்கள் தீபன் சக்கரவர்த்தி அழுத்தமான இசை வழங்கியிருக்கிறார். எதார்த்தமான ஒளிப்பதிவின் மூலம் கண்ணா ஆர் ரசிகர்களை சம்பவம் நடக்கும் தெரு அருகிலேயே கொண்டு சென்று நிறுத்துகிறார்

இயக்குனர் ஜெயச்சந்திரா அஸ்மி ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி அதை சமுதாய முக்கிய பிரச்சினையோடு முடிச்சு போட்டு, யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் தான் என்பதை ஆணித்தனமாக சொல்லியிருப்பது இதுவரை இப்படிப்பட்ட வில்லன்களை எந்த இயக்குனர்களும் கைது செய்தது இல்லையே ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணிச்சலான கிளைமாக்ஸ் அமைத்த இயக்குனருக்கு இளவட்டங்களின் ஆதரவு பெருவாரியாக கிடைக்கும்.

ZEE5 OTT தளம் ஆக்டோபஸ் வெப்சீரிஸை வெளியிட்டிருக்கிறது.

ஆக்டோபஸ் -சமுதாய சீர்கேட்டை சட்டம் என்ற சவுக்கால் அடித்து துவம்சம் செய்கிறது.

Review By
K. jayachandhiran
www.trendingcinemasnow.com

Related posts

சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும்: கவின் பேச்சு

Jai Chandran

Moonu Muppathi Moonu is All set to Release on December 3rd

Jai Chandran

ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend