Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தாவூத் (பட விமர்சனம்)

படம் : தாவூத்

நடிப்பு: லிங்கா, சாரா ஆச்சர், திலீபன்,
ராதாரவி, சாய் தீனா,
ஸாரா, வையாபுரி
சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக்,ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன்

தயாரிப்பு: எஸ் உமா மகேஷ்வரி

இசை: ராக்கேஷ் அம்பிகாபதி

ஒளிப்பதிவு: சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த்

இயக்கம்: பிரசாந்த் ராமன்

பி ஆர் ஓ: புவன் செல்வராஜ்

வெளிநாட்டு போதை மருந்தை சப்ளை செய்யும் ரவுடிகள் மூர்த்தி (சாய் தீனா), விசாகம் (அபிஷேக் ) இடையே மோதல் ஏற்படுகிறது. சப்ளை செய்வதில் சிறிது காலதாமதமானால் ஆளையே கொல்லும் கூட்ட தலைவன் தாவூத். இவர்களை சுத்துபோட்டு போலீஸ் துரத்துகிறது. இதனால் புது ஆளை வைத்து போதை மருந்து கடத்த திட்டமிடுகின் றனர். இதன் கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பமாக அமைகிறது.

ஹீரோ லிங்கா வாடகை கார் டிரைவராக நடித்திருக்கிறார். ரவுடி என்றாலே பயந்து நடுங்கும் லிங்கா ஒரு கட்டத்தில் அந்த ரவுடி கூடத்துக்கே கடத்தல் வேலைக்கு உதவ ஒப்புக் கொள்வது, அவர்களுக்கே தண்ணி காட்டுவது என கில்லாடித்தனமான வீழ செய்து. திடீர் திருப்பத்தை தனது காட்சிகளுக்கு சர்ப்ரைஸ் தருகிறார்.

கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்து ரவுடி கூட்டத்தையே நடுங்க
வைக்கும் அந்த தாவூத் யார் என்ற ஆவல் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அதிகரிக் கிறது. அந்த தாவூத் யார் என்று காட்டாமலே டைரக்டர் சஸ்பென்ஸ் வைத்திருப்பது இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுத்திருக்கி றார்கள் என்று தோன்று கிறது.

சாரா அக்சர் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். விதவிதமாக காட்டியூம் அணிந்து கிளாமர் கேர்ளாக வருகிறார்.யாருக்கு ஜோடி என்றுதான் புரியவில்லை.

காமெடி நடிகர் ஸாரா
நக்கல் நய்யாண்டி சிரிப்பும், டபுள் மீனிங் டயலாக் முகசுழிப்பும் ஏற்படுத்துகிறது.

ராதாரவி போலீஸ் கமிஷனராகஅதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும் திலீபன் சாய் தீனா, , வையாபுரி
சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக்,ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் நடித்துள்ளனர்.

ராக்கேஷ் அம்பிகாபதி இசை, சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு ஓ கே.

பாம்பே கடத்தல்மன்னன் தாவூத்தின் தகிடு தித்தங்களை இயக்குனர் பிரசாந்த் ராமன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

தாவூத் – ஆக்ஷன் சஸ்பென்ஸ்..

Review By .

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

Related posts

Director @hariuthraa Strikes With LIPSTICK

Jai Chandran

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட ஐம்பதடி உயர போஸ்டர்

Jai Chandran

‘கான் சிட்டி’ பட நன்றி அறிவிப்பு விழாவில் நடிகை பரபரப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend