படம்: சியான்கள்
நடிப்பு: கரிகாலன், ரிஷா ஹரிதாஸ், நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாக ராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயண சாமி, இமை ராஜ்குமார்,
தயாரிப்பு: கி.கரிகாலன்
இணை தயாரிப்பு: லில்லி கரிகாலன்
இசை: முத்தமிழ்
ஒளிப்பதிவு: பாபுகுமார் ஐ.இ.
இயக்கம்: வைகறை பாலன்
தேனியில் உள்ள மலை யொட் டிய கிராமத்தில் வாழும் மக்கள் சிலரின் அன்றாட பொழுது சண்டை சச்சரவாக கழிகிறது. அந்த கிராமத்தில் சிறுவயதிலிருந்து நண்பர் களாக வலம் வந்த 7 பெரியவர் கள் இணை பிரியாமல் ஊரில் சுற்றித் திரிகின்றனர். வீட் டுக்கு வீடு வாசப்படிபோல் ஒவ்வொரு பெரிசுக்கும் குடும்பத்தில் ஒரு பிரச்னை-ஒவ்வொரு ஆசை. அந்த ஊரில் வைத்தியம் பார்க்கும் டாக்டர் கரிகாலன் பெரியவர்களுக்கு அணுசரணையாக இருக்கி றார். 7 பெரிசுகளில் இரண்டு பேர் பிள்ளைகளின் தொல் லையால் இறக்கின்றனர். மற்ற 5 பெரியவர்கள் சென்னையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்க வருகின்றனர். வந்த இடத்தில் சாலையை கடக்கும் போது அவர்களில் ஒருவர் காரில் அடிபட்டு படுகாயம் அடைகிறார். அவரை டாக்டரும் அவரது நண்பரும் மருத்துவமனையில் சேர்க் கின்றனர். 10 லட்சம் இருந்தால் ஆப்ரேஷன் செய்து பிழைக்க வைக்க முடியும் என்கின்றனர். அவர்களால் பத்து லட்சம் திரட்ட முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
பெரிசுகள் நடித்த படம் என்று லேசாக சொல்லிவிடமுடியாது ஓவ்வோரு காட்சியிலும் அவ்வளவு அழுத்தம் இருக் கிறது. ஊர்திருவிழாவுக்கு வெட்ட வைத்திருந்த கிடாவை காணோம் என்று ஊரே தேடிக்கொண்டிருக்க அந்த கிடாவை கடத்தி வந்து மட்டன் கறி மசாலா செய்ய பெரிசுகள் ஏழும் போடும் திட்டத்தில் தொடங்கும் சேட்டை பல காட்சிகளில் தொடர்கிறது.
ஊரில் உள்ள ஆண்டிகளை கண்ணடித்து கலாய்ப்பது. ஜீப்பில் செல்லும்போது உடன் வரும் ஆண்டியை கரெக்ட் செய்வது என செம சிலுமிஷங் கள் கலகலக்க வைக்கிறது.
சிக்கன் கறி செய்யும்போது கல்லுக்கு மறைவில் கோழி யை உரித்து அதை அந்தரத்தில் லாவகமாக தூக்கி வீசுவதும் மற்றொரு பெரிசு அதை லபக் கென பிடித்து கூறுபோட்டு கடாயில் மசாலாவை பொரித்து சமைப்பதும் நாவில் எச்சில் ஊற வைக்கிறது.
ஏழு நண்பர்களில் ஒருவர் மருமகள் கையால் அடிவாங்கி யதில் மனம் உடைந்து தூக் கிட்டு சாவதும். இன்னொரு வரை விஷ ஊசி போடு மகன் களே கொல்வதும் இப்படி கூட நடக்குமா என்று அதிர்ச்சி தருகிறது.
நளினிகாந்த் இந்த வயதிலும் டூப் போடாமல் காரில் அடி பட்டு விழும் காட்சியில் நடித்து திடுக்கிட வைக்கிறார். கிளைமாக்ஸில் விமானத்தில் பறக்கும் ஆசை நிறைவேறும் போது அவரது மனைவியின் தண்டட்டியை ஹீரோ கரிகாலன் தருவதும் அதைப் பார்த்ததும் என்ன சொல்லவ தென்று தெரியாமல் மனம் உருகுவதுமாக குணசித்ர நடிப்பை வெளிப்படுத்தி நெஞ்சில் இடம் பிடிக்கிறார் நளினிகாந்த். அதேபோல் நண்பனுக்காக உயிரை விடப் போகிறேன் என்று மொட்டை மாடியில் நின்று கீழே குதிக்கப் போவதாக மிரட்டும் பெரிய வரும் மனதை தொடுகிறார்.
ஹீரோ கரிகாலன் படம் தனது சொந்த தயாரிப்பாக இருந்த போதும் கூடுதல் ஆதாயன் எடுத்துக்கொள்ளாமல் கதை யோடு இசைந்து நடித்திருப் பது பாராட்டத்தக்கது. இயக்குனர் வைகறை செல்வ னும் ஒரு கதாபாத்திரத்தில் தலைகாட்டுகிறார்.

ஹீரோயின் ரிஷா ஹரிதாஸ் அழகாக வெட்கப்பட்டு அழகாக சிரித்து அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார். மேலும், ஹீரோயின் தந்தை இமை ராஜ்குமார், கறியை எடுத்து சாப்பிடும் மாமனாரை கன்னத்தில் அறையும் மருமகள், நளினிகாந்த் மனை வியாக வரும் தண்டட்டி பாட்டி, அவர்களது மகள், குறிப்பாக ஊர்மக்கள் முன்பு தனது உரிமையை அப்பனும், ஊரும் எப்படி பறித்தது என்று ஆக்ரோஷம் பொங்க பேசும் அந்த பாட்டியும் பாத்திரத்தை உணர்ந்து நடித்து அப்ளாஸ் அள்ளுகின்றனர்.

வைகறை செல்வன் இயல்பு மாறாமல் தேனிக்கே ரசிகர் களை அழைத்து சென்று கிராமத்து மக்களோடு மக்க ளாக வாழவைத்த அனுபவத் தை தந்திருக்கிறார். முத்தமிழ் இசையில், ’பெட்டிக்கடை ஈ காதல் தூது செல்லும்’ என்ற வரிகளில் புதிய பரிமாணத்தை மிளிர வைத்திருக்கிறார். கதை, இசை, பாடல் வரிகள், வசன காட்சிகள் என எல்லாவற்றுக் கும் துல்லியமான ஒளிப்பதிவு மூலம் உருவம் கொடுத்திருக் கிறார் ஒளிப்பதிவாளர் பாபு குமார்.
சியான்கள்- நேர்மையான உழைப்பு.

