Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மகுடம் (பட விமர்சனம் )

படம்: மகுடம்

நடிப்பு: விஷால் (இரட்டை வேடம்), அஞ்சலி, துஷாரா விஜயன், ஜெயபிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா

தயாரிப்பு: சூப்பர் குட் பிலிம்ஸ்

இசை: ஜீவி பிரகாஷ்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன், அபிநந்தன்

இயக்கம்: விஷால்

பிஆர்ஓ : ரியாஸ் கே அஹமத், பாரஸ்

கதை : மெடிக்கல் ரெப் கிருபாகரன் (விஷால்) தனது மனைவி மகன், மகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். கார் வாங்க வேண்டுமென்பது அவர்களின் கனவு. அதன்படி ஒரு கார் வாங்குகிறார்கள். அந்த காரில் சுற்றுலா செல்லும்போது திடீரென்று ஒரு கூட்டம் அவர்களை தாக்குகிறது. மனைவி மற்றும் ஒரு குழந்தையை கிருபா இழக்கிறார். பின்னர்தான் தெரிகிறது இவர் ஒரு பெரிய தாதாவின் மகன் என்பது. அந்த தாதா யார்? இவர்களது எதிரிகள் யார்? என்பதற்கு தோட்டாமழை பொழிந்து பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

தொடக்க காட்சிகளில் மெடிக்கல் ரெப்பாக வரும் விஷால் தனது மாமனார் தம்பி ராமையாவிடம் தனக்கு கார் இருப்பதாக கூறிவிட்டு இல்லாத காரை இருப்பதுபோல் காட்டுவதற்காக செய்யும் சேட்டைகள் கலகலப்பு. இப்படியே சில காட்சிகள் ஜாலியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று விஷால் குடும்பத்தின் மீது ரவுடிகள் சூழ்ந்து நின்று சுட்டு வீழ்த்தும் போது, இதன்பிறகு தான் விஷாலின் அதிரடி ஆக்ஷனே ஆரம்பமாகப் போகிறது என்பதை உணர முடிகிறது.

விஷாலை இதுவரை பார்க்காத ஒரு வயதான கெட்டப்பில் பார்க்கும்போது இவர் விஷால் தானா என்ற சந்தேகம் வந்து விடுகிறது. நடிப்பில் கொஞ்சம் செயற்கைதனம் இருந்தாலும் ஆக்சன் காட்சிகளில் அதிர விடுகிறார். கிளைமாக்சில் இளையராஜா பாடல் கேட்டபடி நடனம் ஆடி செய்யும் ஸ்டண்ட் காட்சியை ஒரு சிலர் ரசித்தாலும் துப்பாக்கி தோட்டாக்களும் கத்தியும் உடலை துளைக்கும் போது ஒரு மனிதனால் எப்படி நடனம் ஆட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

வழக்கமாக வில்லத்தனத்தை செய்துவிட்டு நகர்ந்துவிடும் ஜான் விஜய் இப்படத்தில் தன்னால் உணர்ச்சி பொங்க நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருப்பது அவருக்கு மாறுபட்ட கதாபாத்திரங்கள் இனி தேடித்தரும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு  அஞ்சலி மீன் விற்கும் பெண்ணாக  சவுண்ட் விட்டு நடித்திருக்கிறார். ஆனால் குண்டான உடல் தோற்றத்தை ஸ்லிம்மாக மெயின்டெய்ன் செய்யாதது ஏனோ என எண்ண வைக்கிறார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது. திரைக்கதை அமைத்து நடிகர் விஷால் முதன்முறையாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகள் நெஞ்சில் இடம் பிடிப்பது போல் சென்றாலும் இதோ பார் என்னுடைய ஆக்ஷனை என்று இரண்டாம் பாதியை இஷ்டத்துக்கு இயக்கி கதற விடுகிறார்.

ஜிவி பிரகாஷ் இசையில் நச்சிந்தி பாடலுக்கு விஷால் அஞ்சலி போடும் ஆட்டம், பி அண்ட் சி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்
அதிரடி ஆக்சன் களேபரத்தில் கூட அசராமல் காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன்.

மகுடம் – சண்டை பிரியர்களுக்கு…

Review by
K Jayachandhiran
trending cinemas now.com

Related posts

“பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

Jai Chandran

Vijayantony ‘s KodiyilOruvan Sneak Peek

Jai Chandran

பேன்டசி படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு  தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend