Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (பட விமர்சனம் )

படம்: விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

நடிப்பு: சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா, நிர்மலா தேவி, ரவீனா டாண்டன்

தயாரிப்பு: சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி

எழுத்து: இயக்கம்:வெங்கி அட்லூரி

பிஆர்ஓ : யுவராஜ்

கதை : பெரிய நிறுவனம் நடத்தும்  சஞ்சய் விஸ்வநாத்  ( சூர்யா) 40 வயது கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ளும்படி தாயார் அவ்வப்போது  வற்புறுத்துகிறார். குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று அவர் கேட்கும் போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று அந்த குழந்தையை தனது தாயிடம் தந்து வளர்க்க சொல்கிறார். அவரது செயலைக் கண்டு தாய் அதிர்ச்சி அடையும் நிலையில்  குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கிறது. பெற்ற தாய் இருந்தால்தான் குழந்தையின் உடலை சரி செய்ய முடியும் என்று டாக்டர்கள் அறிவுறுத்த வாடகை தாய் மேடியை  ( மமீதா பைஜூ அழைத்து வருகிறார் சஞ்சய். குழந்தைக்கு உடல்நிலை சரியான பின்பும் வாடகைத்தாய் குழந்தையுடன் தங்கி இருக்கும் நிலையில் அவருக்கு பணத்தை கொடுத்து திரும்பிச் செல்ல சொல்கிறார் சஞ்சய். ஆனால் சஞ்சய் மீது மேடிக்கு காதல் வருகிறது. தன்னைவிட  20 வயது குறைந்த  இளம்பெண்ணை மணக்க சஞ்சய் மறுக்கிறார். இதையடுத்து அப்பெண் போராட்டம் தொடங்குகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது சுவாரஸ்யமான ஒரு ஹை கிளாஸ் காதல் கதையாக மாறுகிறது விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

குடும்ப பாங்கான படத்தில் சூர்யா நடித்து வெகு நாள் ஆகிறது.  கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமியாக  ஹை லுக்கில் நடித்த சூர்யா தற்போது அதைவிட ஒரு ஹை லுக்கில் சஞ்சய் விஸ்வநாத்  கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார். கோட்டு சூட்டு போட்டு படம் முழுக்க பந்தாவான தோற்றத்தில் இருக்கிறார்.

தாய் ராதிகா மீது சூர்யா காட்டும் பாசம் நெகிழ வைத்தாலும் அவருக்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத் தந்து அதிர்ச்சி சம்பவம்  செய்கிறார் சூர்யா.

குடும்ப செண்டிமெண்ட் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு திருப்தி தரும் வகையில் இரண்டு அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் சூர்யா வெளுத்து கட்டியிருக்கிறார்

வாடகை தாயாக மமீதா பைஜூ நடித்திருக்கிறார்.துடுக்குத்தனத்தில் கொடிகட்டி பறக்கும் மமீதா.  சூர்யாவை நக்கலடிப்பது, சரியான நேரத்தில் சிக்கலில் சிக்க விடுவது என  காட்சிகளை சுவாரஸ்யமாக பறக்க விட்டிருக்கிறார். அதேசமயம் சூர்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்துவதும் அவர் மீது ஒருவித செண்டிமெண்ட்டை அரங்கில் படர விடுகிறது.

சூர்யாவின் தாயாக வரும் ராதிகா ஸ்வீட் சாப்பிடுவதற்காக குழந்தை போல் சூர்யாவுடன் சுவீட் கேட்டு கெஞ்சுவதும்  பின்னர் அவரே சூர்யா திருமணம் செய்து கொள்ள மறுப்பது எண்ணி வருந்துவதுமாக மாறுபட்ட நடிப்பில் கவர்கிறார்

நீண்ட வருடங்களுக்கு பிறகு ரவீனா டாண்டன் தமிழில் தலை காட்டியிருக்கிறார்.

சித்தாரா என்டர்டெயின் மென்ட்ஸ் அண்ட் பார்ச்சூன் போர் சினிமாஸ், நிறுவனங்கள் சார்பில் சார்பில் சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி தற்போது சூர்யா நடிப்பில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார்.  பணக்கார வீட்டு கதையாக இருந்தாலும்  அம்மா சென்டிமென்ட், குழந்தை சென்டிமென்ட், காதல் செண்டிமெண்ட், மனைவி சென்டிமென்ட் என மனதை தொடும் காட்சிகளாக அமைத்து துள்ளலான  திரைக்கதையில்  படத்தை இயக்கியிருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசை பாடலையும் காட்சிகளையும் வேகப்படுத் துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி  ஹை கிளாஸ் காட்சிகளாக ஒவ்வொரு சீனையும் செதுக்கி கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு பளபள வென்று பட்டை தீட்டியிருக்கிறார்

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் – குடும்ப கொண்டாட்டம்.

Review By

K. Jayachandhiran

Trending cinemas now.com

 

 

Related posts

எஸ்.பி.பி.க்கு புது பாடல் உருவாக்கிய டாக்டர்

Jai Chandran

Kazhumaram First Look Released by JD, Jerry

Jai Chandran

Jeyaram directorial “Yennanga Sir Unga Sattam

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend