படம்: ஐடென்டிட்டி
நடிப்பு: டொவினோ தாமஸ், திரிஷா, வினை ராய்
தயாரிப்பு: பாரகம் மூவிஸ்
இசை பிஜாய்
ஒளிப்பதிவு: அகில் ஜார்ஜ்
இயக்கம்:அகில் பால் மற்றும் அனஸ் கான்
பி ஆர் ஒ: சதீஷ் S2
பெண்கள் ஆடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டுகிறான் ஒரு மர்ம மனிதன். இது பற்றி துப்பறிய பறப்படுகிறார் திரிஷா. ஒரு கட்டத்தில் மர்ம மனிதன் கொல்லப்படுகிறான். கொலையாளியை திரிஷா பார்க்கிறார் ஆனால் விபத்து ஒன்றில் அவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டு அதனால் எதையும் தீர்மானமாக சொல்ல முடியாத சூழலுக்கு உள்ளாகிறார். திரிஷா கூறும் அடையாளங்களை வைத்து கொலைக்காரனை வரையும் போது அது ஹீரோ டொவினோ தாமஸ் உருவம் போல் காட்டுகிறது. மர்ம மனிதன் யார்? உண்மையிலேயே கொலையாளி இறந்து விட்டானா, போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் உடைத்து பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
மலையாளத்திலிருந்து தமிழில் படம் டப்பிங் ஆகி வந்திருக்கிறது. மலையாளத்தில் சிபிஐ டைரி குறிப்பு முதல் இன்று வரை பல்வேறு சஸ்பென்ஸ் திரில்லர் க்ரைம் படங்கள் வந்திருக்கின்றன எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்டு வித்தியாசமான கதை கரு கொண்டதாகவே அமைந்திருக்கிறது.
ஐடென்டிட்டி படமும் மாறுபட்ட திரில்லர் படம் என்பதில் சந்தேகம் இல்லை. கதாபாத்திரங்களை யார் யார் என்று அறிமுகப்படுத்தி காட்சிகளை நகர்த்தும் விதம் ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் திரைக்கதையில் சஸ்பென்ஸ் உடைபட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு குழப்படிகள் நடந்திருக்கிறது.
உண்மையான கொலைகாரன் டொவினோ தாமசா, வினய் ராயா அல்லது வேறு யாருமா என்பது தெரிய வரும்போது யூகமாக இவர் தான் வில்லன் என்று எண்ணிய விடை ஓரளவுக்கு கிடைக்கிறது.
விமானத்தில் வினய் ராய்க்கும் டொமவினோ தாமஸுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சி அதிரடி காட்டுகிறது
திரிஷாவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்திருக்கிறார்.
இயக்குனர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் க்ரைம் சஸ்பென்ஸ் இரண்டையும் ஒன்றாக கலந்து இன்ட்ரஸ்டிங்கான ஒரு படத்தை தந்திருக்கிறார்கள்.
ஐடென்டிட்டி – திரில்