Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரவி தேஜாவின், “இருமுடி” பட தமிழ் தெலுங்கு ட்ரெய்லர் வெளியீடு..

: *மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!*

*உணர்வுப்பூர்வமான ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு தயாராகுங்கள்!*

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் திரையரங்க டிரெய்லர்  தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று வெளியானது.

ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளை மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்ளும் அவர், தனது குடும்பத்தினரிடம் மட்டுமின்றி தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தனது மகளாகவே கருதி அன்பு செலுத்துகிறார். அவர்களில் யாருக்காவது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாக்க ஆக்ரோஷத்தின் எல்லைக்கே செல்ல தயாராக இருக்கிறார் என படத்தின் மையக்கதையை தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் தெளிவாகக் காட்டுகிறது.

அதேவேளையில், மதுப்பழக்கம் அவரது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ஆண்டுதோறும் அவர் ஐயப்ப மாலை அணிந்து விரதம் மேற்கொள்கிறார். அந்த காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட, அமைதியான மனிதராக மாறுகிறார். இந்நிலையில், கிராமத்தில் அடுத்தடுத்து சில பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரவி தேஜாவால் முடிந்ததா என்பதே படத்தின் கதை.

குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களை சிவா நிர்வாணா வித்தியாசமான முறையில் இணைத்து ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார்.  ரவி தேஜாவின் மகள் தனது தந்தையின் கோபத்தைப் பார்த்து தனக்கே பயமாக இருக்கிறது என்று கூறும் தருணம் டிரெய்லரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கதாநாயகனின் உணர்வுப்பூர்வமான சிக்கலான தன்மையை இந்தக் காட்சி அழுத்தமாக வெளிப்படுத்தும் அதேசமயம், குடும்ப உணர்வுகளை வலுவாக காட்சிப்படுத்துவதில் சிவா நிர்வாணாவின் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு காட்சியிலும் ரவி தேஜா கதாபாத்திரத்தை முழுமையாக தன்னுடையதாக மாற்றியுள்ளார். அன்பான குடும்பத் தலைவராகவும், அநீதியை எதிர்கொள்ளும்போது தீவிரமான ஆக்ரோஷம் கொண்ட மனிதராகவும் அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். மதுவுக்கு அடிமையான அவரது கதாபாத்திரம் கதைக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது. இதுமட்டுமல்லாது, அவரது ஆக்ரோஷமான குணத்திற்கும், ஐயப்ப மாலை அணிந்த பிறகு அவர் வெளிப்படுத்தும் அமைதியான குணத்திற்கும் இடையேயான முரண்பாடு கதாபாத்திரத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘மல்லெபுல பல்லக்கி’ பாடலின் சிறிய பகுதி டிரெய்லரின் இறுதியில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கும் ரவி தேஜாவின் மனைவி கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர் சிறப்பாக நடித்துள்ளார். தந்தை, மகள் உறவின் அன்பை பேபி நக்‌ஷத்ரா அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.சாய் குமார், குரு சுவாமியாகவும், நடிகை ஸ்வாசிகா எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த திரையரங்க டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்னும் 9 நாட்களில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘இருமுடி’ தனது டிரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில், உணர்வுகளின் ரோலர்கோஸ்டர் பயணமாக ‘இருமுடி’ அமையும் என டிரெய்லர் உறுதியளிக்கிறது.

*நடிகர்கள்:* மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசலா லக்ஷ்மண், ராஜ்குமார் கசிரெட்டி, ரமண பார்கவ், கிஷோர் காஞ்சேரபாலெம், கார்த்திக் அடுசுமல்லி மற்றும் மகேஷ்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சிவா நிர்வாணா,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா,
தயாரிப்பு வடிவமைப்பு: சாஹி சுரேஷ்,
படத்தொகுப்பு: பிரவீன் புடி,
ஸ்கிரிப்ட் ஒருங்கிணைப்பாளர்: நரேஷ் பாபு பி,
இணை இயக்குநர்: சுரேஷ்,
மேக்கப்: ஸ்ரீனிவாஸ் ராஜு,
ஆடை வடிவமைப்பு: ராஜேஷ்,
போஸ்டர் வடிவமைப்பு: யெல்லோ டூத்,
மக்கள் தொடர்பு: வம்சி சேகர்
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

Related posts

இல்லம் தோறும் வள்ளுவர் சிலை: விஜய்சேதுபதி பெற்றார்

Jai Chandran

Chella kutties #Bagheera – Trailer from October 8th..

Jai Chandran

மார்கன் பட விழாவில் விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend