Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள்

ரஜினிகாந்துக்கு ரத்த நாள சிகிச்சை அளிக்கப்பட்டது

சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களுக்கு பிறகு தற்போது ‘வேட்டையன்’ வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். சூர்யா நடித்த ’ஜெய் பீம்’ படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல்ராஜா வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி உள்ளது.

இந்நிலையில் வேட்டையன் பட ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தின் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார்.

வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரானநிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப் பட்டினத்தில் நடந்து வந்தது. படப்பிடிப்பை முடித்து விட்டு சென்ற மாதம் 28ம் தேதி சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர் களுக்கு பேட்டி அளித்தபோது திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேள்வி  கேட்கப்பட்டது அதற்கு அவர், “நோ கமெண்ட்ஸ்” என்று கூறிவிட்டு சிரித்தபடி காரில் ஏறிச் சென்றார்.
அப்போது ரஜினி உற்சாகத்துடன் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

விரைவில் வேட்டையன் ரிலீசுகாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் காத்துக்கொண்டி ருக்கும் நிலையில் ரஜினிகாந்த்துக்கு திடீரென்று உடல்நல குறைவு இன்று அதிகாலை ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் அவதிபட்டார் . உடனடி யாக அவரை சென்னை யில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு அடி வயிறு வீக்கம், லேசான நெஞ்சு மற்றும் முதுகு வலி முதுகுவலி போன்ற பிரச்சனைகள் இருந்த தாக கூறப்படுகிறது.. சில மருத்துவ பரிசோத னைகள் எடுக்கப்பட்டன.

பின்னர் ரஜினிகாந் துக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட வீக்கத்துக்காக ரத்த நாள  சிகிச்சையை டாக்டர்கள் அளித்தனர்.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது,’ அவரது உடல் நிலை சீராக உள்ளது’ என்றனர். மேலும் ரஜினி குடும்பத்தினர் தெரிவிக்கும் போது ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் ரஜினிகாந்த் நடித்த போது அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரி கிறது. இதையடுத்து மருத்து வர்களிடம் ஆலோசித்து விட்டுத் தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

வேட்டையன் பட.ம் அக்டோபர் 10ல் ரிலீஸ் கும் நிலையில், ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ரஜினி விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்துக்கு ரத்த நாள சிகிச்சை அளித்தபிறகு அவரது உடல்நிலை சீராகி வருகிறது.  இதை எடுத்து தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார்.

ரஜினிகாந்த் மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டதை அடுத்து  அவர் விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் சரத்குமார் உள்ளிட்ட திரை உலகினர் பலர் ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின் றனர்.

Related posts

சந்திரபாபு – குமாரசாமிக்கு மகள் திருமண அழைப்பு தந்த சரத் – ராதிகா

Jai Chandran

Gautham Karthik-Sarath Kumar starrer action crime-thriller

Jai Chandran

‘அன்பில் அவன்’ பட ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend