சூப்பர்ஸ்டார் ரஜினிகாநத் நடிப்பில் ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களுக்கு பிறகு தற்போது ‘வேட்டையன்’ வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். சூர்யா நடித்த ’ஜெய் பீம்’ படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல்ராஜா வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி உள்ளது. இந்நிலையில் வேட்டையன் பட ப்ரொமோஷன் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தின் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார்.
வேட்டையன் படபிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. படப்பிடிப்பை முடித்து விட்டு சென்ற மாதம் 28ம் தேதி சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேள்விகேட்கப்பட்டது அதற்கு அவர், ” நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு சிரித்தபடி காரில் இருக்கின்றார். அப்போது ரஜினி உற்சாகத்துடன் இருந்ததைக் கண்டு ரசிகர்கள். உற்சாகத்தில் இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் விரைவில் வெளிவரவிருக்கும் ரஜினியின் வேட்டையன் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் ரஜினிகாந்த்துக்கு திடீரென்று இன்று அதிகாலை உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் அவதிபட்டார் . உடனடியாக அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.
ரஜினிக்கு அடி வயிறு வீக்கம், லேசான நெஞ்சு மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டன
ரஜினிகாந்திற்கு உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது,’ அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவருக்கு எதுவும் அறுவை சிகிச்சை நடக்கவில்லை ‘ மேலும் ரஜினி குடும்பத்தினர் தெரிவிக்கும்போது ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருக்கிறது அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் ரஜினிகாந்த் நடித்தபோது அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறதுக். இதையடுத்து மருத்துவர்களிடம் ஆலோசித்து விட்டுத் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
ரஜினிக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரை இதய சிகிச்சை நிபுணர் பரிசோதித்தார். இதையடுத்து ரஜினிகாந்துக்கு இதய சிகிச்சை அளிப்பது பற்றி டாக்டர்கள் ஆலோசிக்கின்றனர். லேசான இதை அடைப்பு ஏதாவது இருந்தால் அடைப்பை நீக்கும் ஸ்டண்ட் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
வேட்டையன் பட.ம் அக்டோபர் 10ல் ரிலீஸ் ஆகும் நிலையில், ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ரஜினி விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.