வெண்ணிலா கபடி குழு, ஈஸ்வரன் படங்களை இயக்கிய சுசீந்திரன் தாயார் மறைவுக்கு நடிகர் விஷால் அனுதாபம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
சிறந்த படங்களை இயக்கி கொண்டிருக்கும் எனது நண்பர் டைரக்டர் சுசீந்திரன் அவர்களது தாயார் ஜெயலக்ஷ்மி அவர்கள் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் அவரின் தாயார் மறைவு, மிக பெரிய இழப்பு ஆகும். அவருக்கும், அவரது சகோதரர் தயாரிப்பாளர் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தும் கொள்கிறேன். மேலும் அவரது தாயார் ஆன்மா சாந்தியடையவும் வேண்டிக் கொள்கிறேன் . RIP!
இவ்வாறு விஷால் கூறி உள்ளார்.