Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பெத்லேகம் குடும்ப யூனிட் (பட விமர்சனம்) 

படம்: பெத்லேகம் குடும்ப யூனிட்

நடிப்பு: நிவின் பாலி, மமிதா பைஜு,  சங்கீத் பிரதாப்,  பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் ஸ்ரிந்தா,  ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ்

தயாரிப்பு: திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில், ஷ்யாம் புஷ்கரன்

இசை:  விஷ்ணு விஜய்

ஒளிப்பதிவு :அஜ்மல் சாபு

இயக்கம்:கிரிஷ் AD

பி ஆர் ஓ : யுவராஜ்

கதை :  காதல் தோல்வியால் மனமுடைந்த  ஜஸ்டின் (நிவின் பாலி ) திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அவர் வீட்டிற்கு எதிரில் சோகமே உருவாக குடியேறுகிறார் இளம் பெண் ஆஸ்லி  (மமீதா பைஜூ ). ஒரு கட்டத்தில் ஜஸ்டின் மீது ஆஸ்லிக்கு காதல் மலர்கிறது. நீண்ட மறுப்புக்கு பிறகு ஜஸ்டினும் ஆஸ்லியை காதலிக்கிறார். இந்த விஷயம் தெரிந்து ஆஸ்லி குடும்பத்தினர்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்

நிவின் பாலி இன்னொரு மம்முட்டியாக மாறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மம்முட்டி தன் வயதை விட குறைந்த பெண் காதலிக்கும் போது என்னவெல்லாம் அந்த பெண்ணுக்கு அட்வைஸ் செய்து அந்த காதலை  ஏற்க மறுப்பாரோ அதே பாணியில் நிவின் பாலி மமீதாவின் காதலை ஏற்காமல்  அவருக்கு அட்வைஸ் செய்ய முனைவதும் ஒரு கட்டத்தில் வேறுவழியில்லாமல் அவரது காதலை ஏற்பதும் படத்தின் உயிர் நாடி

மமீதா பைஜூ ஏற்கனவே சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் மூலம் ரசிகர்கள் மனதை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து விட்டார். அந்த இமேஜ் மறைவதற்குள் மமீதாவின்  நடிப்பை மீண்டும் ஒருமுறை  வலியுறுத்தும் வகையில் வந்திருக்கிறது பெத்லேகம் குடும்ப யூனிட்.

தன்னைவிட வயதில் குறைந்த மமீதா தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் நிவின் பாலி அவரிடமிருந்து விலக பார்ப்பதும்  ஆனால் நிவின் பாலியின் பழைய காதல் கதையை கேட்டு எப்படியாவது அவரை காதலனாக அடைய வேண்டும் என்று மமீதா வளைத்து வளைத்து  காதலிப்பதும்…  இவர் தமிழுக்கு கிடைத்த இன்னொரு ரேவதி!

படத்தில் சங்கீத் பிரதாப்,  பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் ஸ்ரிந்தா,  ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் என முழுக்க முழுக்க மலையாள நடிகர்கள் நடித்திருந்தாலும்  எல்லோருமே தங்களது இயல்பான நடிப்பின் மூலம் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி மனதில் இடம் பிடிப்பது அழகோ அழகு.

திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில், ஷ்யாம் புஷ்கரன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

விஷ்ணு விஜய் இசையும், அஜ்மல் சாபு ஒளிப்பதிவும் காட்சிகளை ஓவர் டேக் செய்யாமல் இயல்பாக மனதில் பதிய வைக்கிறது

இதுபோல் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் இந்த கதையை மீண்டும் ஒரு பிரஷ்ஷான கதையாக தனது திரைக்கதை மூலம் வடிவமைத்திருக்கும் இயக்குனர் கிரிஷ் ஏ டி நேர்த்தியான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

பெத்லேகம் குடும்ப யூனிட் – காதல் கதை தான் ஆனால் குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Review by

K Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

 

Related posts

Sathuranka Vettai 2 theatrical release on Janaury 22.

Jai Chandran

மஹாவீர்யர் (மலையாள பட விமர்சனம்)

Jai Chandran

பட தயாரிப்பாளர் ராஜா திருமணத்தில் ராதாரவி, வீரப்பன் மகள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend