Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஏன் என்னை ஏதோ செய்தாய் (பட விமர்சனம் )

படம்: ஏன் என்னை ஏதோ செய்தாய்

நடிப்பு: டி ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி,  ரெஜின் ரோஸ், ஆலம் ஷா,,  நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ்

தயாரிப்பு:: டி ஆண்டனி

இசை: ஜெயிக்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன், ஜோய் ரெடா

ஒளிப்பதிவு: பியாட்ரோ வில்லனி

இயக்கம்: டி ஆண்டனி

பிஆர்ஓ : சதீஷ் (AIM )

கதை: கார்த்திக் குடும்ப சூழல் காரணமாக தனியாக வசிக்கிறான். தனி ஆளாக இருக்கும் கார்த்திக் தனக்கு பிடித்த பெண்களுடன் பொழுதை கழிக்கிறான். அப்படி வரும் பெண்களில் மது என்ற பெண்ணை கார்த்திக்கிற்கு மனதளவில் பிடித்து விட அவர் மீது காதல் கொள்கிறான். அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்யும் நிலையில் என்னென்ன பிரச்னைகளை கார்த்திக் எதிர்கொள்கிறான் என்பதை வாழ்க்கையின் எதார்த்தமாக கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

சில நேரங்களில் சில மனிதர்கள், அவன் அவள் அது என்று 80ஸ் காலகட்டங்களில்  ஒரு சில அவார்டு படங்கள் திரைக்கு வரும்  அந்த பாணியில்  வந்திருக்கிறது ஏன் என்னை ஏதோ செய்தாய்.

ஹீரோ டி ஆண்டனி படத்தை எடிட்டிங் செய்து இயக்கியும் இருக்கிறார். அதனால் அவர் என்ன பாணியில் கதையை கொண்டு செல்ல வேண்டுமோ அந்த பாணியில் கொண்டு சென்றிருக்கிறார்.

தன் வீட்டிற்கு கால் கேர்ள் ஆக வரும் மதுமிதா தாஸ் மீது காதல் கொண்டு தொடர்ந்து அவரையே வரவழைத்து பேசி அவரை தனது காதல் வலையில் வீழ்த்துவது நயம்.

ஆண்டனியுடன் லிவிங் டு கெதர் பாணியில் மதுமிதா தாஸ் ஒரே வீட்டில் இருக்க ஒப்புக்கொள்வது இன்றைய பேஷனாக இருந்தாலும் அப்படி இருக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் இந்த காதல் நீடிக்காது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மதுமிதா தாசிடம் ஆண்டனி கூறும்போது மதுமிதா தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதாக கூறுவது எதிர்பாராத ஷாக்.

வங்காளத்தில் இருந்து சில நடிகைகள் ஏற்கனவே தமிழுக்கு வந்திருக்கிறார்கள் அந்த வரிசையில் வங்காள நடிகையாக வந்திருக்கிறார் மதுமிதா தாஸ். அழகு சிலை போல் இருக்கும் அவரை டி ஆண்டனி  கவர்ச்சி ஹீரோயினாக பயன்படுத்தியிருந்தால் படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இருந்திருக்கும்.

படத்தில் பெரும்பாலும் ஆங்கில உரையாடல்களே இடம்பெறுகிறது..  குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் வசனம் பேசும்போது அந்த காட்சிகளில் தமிழில் சப்டைட்டில் போட்டிருக்கலாம்.

டி ஆண்டனி ஹீரோவாக நடித்திருப்பதுடன் படத்தை இயக்கி எடிட்டிங்கும் செய்திருக்கிறார். உணர்வுபூர்வமாக ஒரு கதையை சொல்ல. முயன்றிருக்கிறார். வசனங்கள் அதிகமாக இருப்பதால்  நீண்ட நேரம் படம் திரையில் ஓடுவது போல் உணரப்படுவதால்  காட்சிகளை குறைத்தால் கூடுதல் வேகம் கிடைக்கும். படத்தில் வரும் சில கெட்ட வார்த்தை வசனங்களை தவிர்த்திருக்கலாம்

ஜெயிக்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன், ஜோய் ரெடா இசை அமைத்துள்ளனர் பியாட்ரோ வில்லனி ஒளிப்பதிவு தெளிவு

ஏன் என்னை ஏதோ செய்தாய்  – மாறுபட்ட படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்.

Review by

K Jayachandhiran

Trending cinemas now. com

 

 

 

 

Related posts

KaathadiMegam Audio Rights bagged by Starmusicindia

Jai Chandran

Grandma First Look

Jai Chandran

Varalatchumi’s KANNITHEEVU Teaser

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend