Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஐ ஆம் கேம் ( பட விமர்சனம்)

படம்: ஐ ஆம் கேம்

நடிப்பு: துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினை போர்ட், கதிர்

தயாரிப்பு: துல்கர் சல்மான் & ஜோம் வர்கீஸ்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலித்

இயக்கம்:  நஹாஸ் ஹிதாயத்

பிஆர்ஓ : யுவராஜ்

கதை : கோடீஸ்வரன்  மகனாக இருந்தாலும் டான் ஜான் (துல்கர் சல்மான்) சூதாட்டத்துக்கு அடிமையாக இருக்கிறார். பணமெல்லாம் இழந்த நிலையில் விபத்தில்.சிக்குகிறார் இதில் அவரது வலது கை துண்டுகிறது  மருத்துவர்கள் அவருக்கு வேறு கை பொருத்துகிறார்கள். அந்த கை டான் ஜான் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஒருவரை கொல்ல துடிக்கிறது. அது ஏன்? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன? என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

துல்கர் சல்மானுக்கு இது ஜாக்பாட் காலம் என்று தெரிகிறது. ஏற்கனவே அவர் நடித்த லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் அவரை வெற்றி நாயகனாக நிலைநிறுத்தி இருக்கிறது அந்த பட்டியலில் இந்த படமும் இடம்பெற வாய்ப்பிருக்கிறது.

டான் ஜான் என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் இதுவரை இல்லாத அளவுக்கு  ஆக்சன் ஹீரோவாக உருவாகி இருக்கிறார்.

விபத்தில் இழந்த கைக்கு பதிலாக மாற்றுகை பொருத்தப்படும் போது இது சாத்தியமா என் கேள்வி எழ, அதைவிட ஆச்சரியமாக அந்த கை துல்கர் சல்மானின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனக்குத்தானே இயங்குவது இன்னொரு சர்ப்ரைஸ்.

தனது கட்டளைக்கு பணியாமல் தன்னுடைய கையே அதன் இஷ்டத்திற்கு தாக்குவது, செயல்படுவது எல்லாமே குழந்தைகளை கைதட்டி சிரிக்க வைக்கும். அதற்கான நடிப்பை துல்கர் சல்மான் மிக அற்புதமாக வழங்கி இருக்கிறார். தன்னுடைய கையே தன்னை தாக்குவது, அதனிடம் மல்லு கட்டுவது என துல்கரின் நடிப்பு அலம்பல் படத்தின் முதல் பாதியை நகைச்சுவையாக நகர்த்துகிறது. ஏன் இந்த கை துல்கரின் செயல்பாட்டை மீறி செயல்படுகிறது என்பதற்கான பின்னணி கதை  சஸ்பென்சாக இங்கு இருக்கட்டும்.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாக கதிர், ஆண்டனி வர்கிஸ் நடிக்க,  கிரிக்கெட் அணி நடத்தும் மோசடி முதலாளியாக மிஷ்கின்  நடிப்பு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்.

பிசியோதெரபி டாக்டpராக வரும் கயாடு லோஹர்  தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

துல்கர் சல்மான் & ஜோம் வர்கீஸ் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஜேக்ஸ் பிஜாய் இசை ஓகே. ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு கலர்ஃபுல்.

கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஆக்சன் படமாக  இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியிருப்பது புது அனுபவம்.

இந்த படத்தை பார்க்கும்போது  சிறுவயதில் படித்த இடது கை மாயாவி, இரும்புக்கை மாயாவி போன்ற கதை புத்தகங்கள்  ஞாபகங்கள் வருகிறது.

ஐ ஆம் கேம் – குழந்தைகளுடன் பார்க்கலாம்..

Review by.

K.Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

Related posts

உலக AI மரபை தலைகீழாக மாற்றிய பெர்பெலக்சிட்டி (Perplexity)

Jai Chandran

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*

Jai Chandran

ரிலீசுக்கு முன்பே மகிழ்ச்சியில் “ஏழு கடல் ஏழு மலை” டீம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend