Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டங்கி (இந்தி பட விமர்சனம்)

படம்: டங்கி

நடிப்பு: ஷாருக்கான், டாப்சி பன்னு, விக்கி கவுசல், பொம்மன் இராணி

தயாரிப்பு: கவுரிகான், ராஜ்குமார் இரானி, ஜோதி தேஷ்பாண்டே

இசை: அமன் பந்த்

ஒளிப்பதிவு: சி.கே.முரளிதரன்,. மனுஷ் நந்தன், அமித்ராய்,.குமார். பங்கஜ்

இயக்கம்: ராஜ்குமார் இரானி

வெளியீடு: ஶ்ரீ கோகுலம்  மூவிஸ், சக்தி பிலிம் பேக்டரி

பி ஆர்.ஓ: யுவராஜ்

 

இந்த உலகம் பிறந்தபோது எல்லாம் ஒரே நாடாக இருந்தது. அதை மனிதன் பிரித்து எல்லை கோடுகள் உருவாக்கி தன் நாடு என சொந்தம் கொண்டாடியபிறகு இன்று மக்கள் வாழ்க்கை நடத்த போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஹார்டி சிங் தில்லியான் ( ஷாருக் கான்) அவரது காதலி  மனு ரத்தாவா ( டாப்சி) .மற்றும் அவர்களது.நண்பர்கள் ஒவ்வொரு லட்சியத்துடன் லண்டன் செல்ல முடிவு செய்கின்றனர். லண்டன் செல்ல வேண்டுமென்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். விசா வாங்கும்போது நடக்கும் ஆங்கில டெஸ்ட்டில் பாஸானால்தான் விசா என்ற நிலையில்  ஹார்டி,  மனு உள்ளிட் டவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து ஆங்கிலம் கற்கின்றனர். ஆனால் சரளமாக  ஆங்கிலம் பேச முடியவில்லை. விசாவுக்காக செல்லும்போது அங்கு கேட்கும்.கேள்விக்கு பதில் அளிக்காமல் சொதப்பி  பெயில் ஆகின்றனர். அப்போதுதான் டங்கி எனப்படும்  சட்ட விரோதமாக மாற்றுப்பாதையில் லண்டன் செல்லும்.ஐடியா கிடைக்க அதில் தீவிரம் காட்டி ஹார்டி, மனு மற்றும் நண்பர்கள் புறப்படுகின்றனர். ஒவ்வொரு நாட்டு எல்லையை கடப்பதற்குள் தாக்குதல்களை எதிர்கொள்வதால். சிலரை இழக்க வேண்டிய சூழலும்  ஏற்படுகிறது. பல போராட்டங்களை கடந்து லண்டன் செல்கின்றனர். அங்கு போலீஸ்.கையில் சிக்குகின்றனர். அதன்பிறகு நடப்பது என்ன என்பதை உணர்ச்சி பொங்க கிளைமாக்ஸ் கூறுகிறது.

ஜவான் படத்தில் ஸ்டைலாக அசத்திய ஷாருக்கான் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்டு பஞ்சாப்வாசியாக மாறி இருக் கிறார். லண்டன் சென்று சம்பாதித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற கனவுடன் ஷாருக், டாப்சி மற்றும்  நண்பர்கள் ஆங்கிலம்.கற்க கோச்சிங் சென்டர் சென்று அடிக்கும் ரகளை அரங்கை சிரிப்பு களமாக்குகிறது. கரும்பலகையில் எழுதிய ஆங்கில. வாசகத்தை மனப்பாடம் செய்து. பேசி கோச்சிங் மாஸ்டரை அசத்தும் போது ஒரு நிமிடம் ரசிகர்களையும் அசர வைத்த விடுகின்றனர்.

இதெல்லாம் ஒத்து வராது டங்கி ரூட் தான் சரி என்று சட்ட விரோத மாக மாற்று வழியில் லண்டன் செல்ல ஷாருக், டாப்சி கோஷ்டி முடிவு செய்து பயணத்தை  தொடங்கும்போது இவர்கள் பயணம் எளிதாக இருக்கப் போவதில்லை என்று யூகிக்க .முடிகிறது அதற்கேற்ப  எல்லை பகுதியில் இராணுவத்தினரிடம் சிக்கிபடும் அவஸ்தை மனதை கனமாக்குகிறது.

எல்லை அதிகாரி.ஒருவன் டாப்சி யிடம் தவறாக நடக்க முயல அவனை ஷாருக் வாயை பொத்தி அடித்து சாகடிப்பது த்ரில். ஒரு வழியாக லண்டன் வந்து சேர்ந்த ஷாருக் ஆனந்தத்தில் துள்ளி குதிபதும்  ஆனாலும் சட்ட விரோத  என்ட்ரி  என்பதால் அவர்கள் மீண்டும்.போலீசில் சிக்கி கோர்ட்டில் நிறுத்தப்படுவதும் இவர்கள் கதி என்னவாகுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்து கிறது.

நாம் அவர்கள் நாட்டுக்கு சென் றால் அவர்கள் நாட்டு மொழி  ஆங்கிலம் தெரிய  வேண்டுமென் கிறார்கள் ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது நம் மொழி  கற்றுக்கொண்டா வந்தார்கள் என்று  ஷாருக் கோஷ்டி. கேட்கும் கேள்வியில் ஆயிரம் அர்த்தம் உள்ளது. அரங்கில் அப்ளாஷ் பெறுகிறது.

ஷாருக்- டாப்சி காதல்.ஒரு கவிதையாக கிளைமாக்ஸ் வரை தொடர்ந்து கண்களை பனிக்கச் செல்கிறது. டாப்சியின் மெச்சூர்டான நடிப்பு அவரை இன்னொரு கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

கவுரிகான், ராஜ்குமார் இரானி, ஜோதி தேஷ்பாண்டே படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அமன் பந்த் இசை ஒட்டு மொத்த காட்சிகளையும் தோளோடு தாங்கி.இருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள்.சி.கே.முரளிதரன்,. மனுஷ் நந்தன், அமித்ராய் குமார். பங்கஜ் என 4 பேர் லண்டன் அழகையும் பஞ்சாப்.கிராம. அழகையும் கண்களுக்குள்  குவிக்கின்றனர்.

ராஜ்குமார்.இரானி படங்கள் என்றாலே எப்போதும்  கவனத்தை ஈர்க்கும் . இந்த படமும் அப்படித் தான். ஒரு மொழி உயிர்களையும், உறவுகளையும் எப்படியெல்லாம்  சிதைக்கிறது என்பதை கல்நெஞ்சும் கரையும் விதமாகவும் தாய் மண்ணால் கிடைக்கும் நிம்மதியை மனம் நெகிழவும் சொல்லி கண்கலங்க வைக்கிறார்.

டங்கி ,-  ஆங்கிலேயே. ஆதிக்கத் தினருக்கு 200  ஆண்டுக்கு பிறகு எழுப்பப்பட்டிருக்கும் சவுக்கடி கேள்வி

 

 

 

 

 

Related posts

கிஷோருடன் மோதிய குங்ஃபூ மாஸ்டர்

Jai Chandran

Actress Nidhi Agarwal Donated 1lakh To CM Covit 19 Relief Fund

Jai Chandran

தளபதி விஜய் 46வது பிறந்ததினம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend