Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேர கட்டாயம்; ராஜ்கிரண் எச்சரிக்கை வாழ்த்து..

நடிகர் ராஜ்கிரன் பொங்க்ல் தின வாழ்த்து மெசேஜ் வெளியிட்டார் அதில் கூறியதாவது:

நம் இந்திய நாடு,
விவசாயப்பொருளாதாரத்தை
அடிப்படையாகக்கொண்டது…

சுதந்திரத்துக்குப்பின்,
நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின்
தவறான கொள்கை முடிவுகளால்,

மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள்,
பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி
என்ற பெயர்களால்,
மிகவும் தந்திரத்துடன்,
உரம், பூச்சிக்கொல்லி,
வீரிய கலப்பினம் என்ற பெயர்களில்
விஷத்தை நம் கைகளாலேயே
போட வைத்து, நம் செல்வங்களை
கொள்ளையடித்ததோடு,
நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்..

அதன் காரணமாக,
இன்று நம் விவசாயப்பெருமக்கள்,
வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு,
தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்…

விவசாயத்தொழிலை
ஆதாரமாக வைத்து இயங்கிய
சிறு, குறு வணிகப்பெருமக்களும்
வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.

இது போக,
விவசாயம் பொய்த்துப்போனால்,
விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு
விலைக்கு வாங்கி,
நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும்,
கனிம வளங்களை,
அரசியல்வாதிகளின் துணையோடு
கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள்
முயன்று கொண்டிருக்கின்றனர்…

நாம் விழித்துக்கொள்ள வேண்டிய
கடைசி நேர கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம்மாழ்வார் ஐயா அவர்கள்,
காட்டிச்சென்ற வழியைப்பின்பற்றி,
இயற்கை விவசாயத்துக்கு மாறி,
நம் மண்ணை உயிர்ப்பித்து, பயிர் செய்து, மதிப்புக்கூட்டு முறையில்
வருமானத்தைப்பெருக்கி,
விவசாயபெருமக்கள் தலை நிமிர்ந்து
மகிழ்ச்சியோடு வாழ,
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன்…

இவ்வொரு அடி, மண்ணும்,
அதனுள் இருக்கும் கனிம வளங்களும்,
நம் மூதாதையரின் கடின உழைப்பால்
நமக்கு கிடைத்த பொக்கிஷம்…

அவற்றை நம் சந்ததியினருக்காக
பேணிப்பாதுகாக்க,
இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம்…

அனைவருக்கும்
என் மனம் கனிந்த
பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்.

வாழ்க வாழ்க.
இவ்வாறு ராஜ்கிரண் கூறி உள்ளார்.

Related posts

இயக்குனர் பாரதிராஜா நன்றி அறிக்கை

Jai Chandran

மம்மூட்டியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்

Jai Chandran

NOISE AND GRAINS ‘Great Music Concert in Madurai “Ilaiyaraja is Music

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend