Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிறந்தநாள்: விஜய சேதுபதி பட்டாகத்தியில் கேக் வெட்டியதற்கு விளக்கம்

விஜய் சேதுபதி தனது பிறந்த நாளில்  பட்டாகத்தியில் கேக் வெட்டியது சர்ச்சையானது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு  விஜய் சேதுபதி தெரிவித்தார்.

Related posts

“யாமம்” ஷூட்டிங்கில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் !!

Jai Chandran

விஜய் பிறந்தநாளையொட்டி  ரூ. 9,25,000 நலத்திட்ட உதவிகள்

Jai Chandran

Thamankumar Starrer Oru Nodi Movie Audio launch event

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend