Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இம்மோர்டல் (பட விமர்சனம் )

படம்: இம்மோர்ட்டல்

நடிப்பு: ஜிவி பிரகாஷ் குமார்,  கயாடு  லோஹர், டி எம் கார்த்திக்,  குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அரசு மகாராஜன், பீமா சாம்சோ, சுனிதா செரஸ்தா

தயாரிப்பு: அருண்குமார் தனசேகரன்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு : அருண் ராதாகிருஷ்ணன்

இயக்கம்: மாரியப்பன் சின்னா

பி ஆர் ஓ : சதீஷ் (AIM )

கதை : ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடக்கிறது பின்னர் கதை தற்போதைய காலகட்டத்திற்கு நகர்கிறது. பிரின்ட்டிங் பிரஸில் வேலை செய்யும்  மகி (ஜிவி பிரகாஷ் குமார் ) வாடகைக்கு வீடு தேடி அலைகிறார் அப்போது . ஒரு போன் அழைப்பு வருகிறது அதில் பேசும் பெண் குரல் என் வீட்டில் வந்து தங்கலாம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வாடகை என்கிறது. அதை ஏற்று அங்கு தங்கச் செல்லும் மகி ஒரு மாய வலையில் சிக்குகிறார் அது என்ன? அதிலிருந்து அவரால் தப்ப முடிந்ததா என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

இம்மோர்டல் என்ற டைட்டில் பார்க்கும்போது இது ஏதோ  வித்தியாசமான கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழலாம்.. அந்த சந்தேகம் உண்மைதான். ஜிவி பிரகாஷுக்கும் டார்லிங் பட பாணியில் இதுவொரு வித்தியாசமான படம்தான்.

ஹீரோயின் கயாடு லோஹர் கொள்ளை அழகுடன் வருகிறார் அவரது அழகை இயக்குனரும் கேமராமேனும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல போனால் இவர் ஒரு அழகிய  ராட்சசி.

கயாடு மீது காதல் கொண்டு அவரை அடைய நினைக்கும் ஜிவி பிரகாஷ் ஒரு கட்டத்தில் அவர்  அழகிய உருவம் கொண்ட அபூர்வ பிறவி .. சொல்ல போனால் ரத்த காட்டேரி என்ற உண்மை தெரிய வரும்போது படத்தின் கதையே தலைகீழாக மாறிவிடுகிறது.

கயாடுவிடமிருந்து தப்பித்து செல்ல ஜிவி பிரகாஷ் முயலும்போதெல்லாம் அவரால் அது முடியாத சூழல் வருவதும், இவர் எப்படித்தான் எஸ்கேப் ஆகப் போகிறாரோ என்ற பரபரப்பு அரங்கை ஆக்கிரமிக்கிறது.

இதற்கு மேல் இந்தப் படம் பற்றி பேசினால் சீக்ரெட்டெல்லாம் வெளி வந்துவிடும். எனவே இத்துடன் இதற்கு ஃபுல் ஸ்டாப் வைத்துவிடலாம்.

படத்தை அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கிறார்.

பின்னணி இசையில் எப்போதுமே மிரட்டலாக அசத்தும் சாம் சி எஸ்  இப்படத்திலும் அந்த மிரட்டலை ஏற்படுத்தும் தருணங்கள் காட்சிகளை சம்பவம் செய்கிறது.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு அழகு. குறிப்பாக நாயகி கயாடு காட்சிகளை அணு அணுவாக ரசித்து படமாக்கி இருப்பது கண்களுக்கு விருந்து படைக்கிறது.

ஹாலிவுட் பாணியில் ரத்த காட்டேரி படத்தை தமிழில் இயக்கி அளித்திருக்கிறார் இயக்குனர் மாரியப்பன் சின்னா.  நம்ப முடியாத விஷயமென்றாலும் நம்பும்படி திரைக்கதை அமைத்திருப்பத பிளஸ்.

இம்மோர்டல்  –  கயாடுவின்  அழகிய பேயாட்டம்.

Review by

K.Jayachandhiran

Trending cinemas now.com

 

 

Related posts

பிறந்தநாள்: விஜய சேதுபதி பட்டாகத்தியில் கேக் வெட்டியதற்கு விளக்கம்

Jai Chandran

மூச்சு திணறல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Jai Chandran

எம்.ஜி.ஆரின் கனவு நனவாகிறது: சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend