Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆர் ஆர் ஆர் படத்தின் ஆன்மாவே ஆக்‌ஷன் காட்சிகள்தான்: இயக்குனர் ராஜமவுலி

 

லைகா புரடக்ஷன் (Lyca Productions) சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா & டி விவி எண்டர்டெயின் மெண்ட்  (DVV Entertainment) சார்பில்தானய்யா இணைந்து வழங்கும், இந்திய திரைத்துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர் களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப் பிரமாண்ட படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத் திரம்) திரைப்படம் ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜ மௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளி யாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்டத்தி  ரங்கள் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத் திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. இன்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின், பிரமாண்ட விழாவில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் இயக்குநர் எஸ்.  எஸ்.   ராஜமௌலி Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் NV பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் Lyca Productions சார்பில் தமிழ்குமரன் பேசியதாவது..

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் நிறுவனம் இணைவது எங்களுக்கு பெருமை. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரமாண்ட படைப்பாக RRR இருக் கிறது. இது நட்பு ரீதியி லான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடருமென நம்புகிறோம். நன்றி.

டி விவி எண்டர்டெயின்மெண்ட்  சார்பில் தயாரிப்பாளர் தானய்யா பேசியதாவது..

இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறோம், நன்றி.

இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி பேசியதாவது…

சில வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப் பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவின ருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். அதற்கு மிகப்பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்து கேள்வி களுக்கும் பதிலளிக்கி றோம்.
RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக் கிறது. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்கு பின்னும் பெரிய எமோஷன் இருக்கும், அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல். அண்ணன் மரகதமண தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசைய மைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். அப்படி RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்கி இந்தப்பாடல் கேட்ட போதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரிகளை தந்திருக் கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

இப்படத்தின் தொழில்நுட்ப குழு: விவரம் வருமாறு:

திரைக்கதை, இயக்கம்  எஸ். எஸ். ராஜமௌலி. கதை  விஜயேந்திர பிரசாத். வசனம்  கார்கி.= இசை  எம் எம். மரகதமணி. ஒளிப்பதிவு  கே கே. செந்தில்குமார். படத்தொகுப்பு  ஶ்ரீகர் பிரசாத். மக்கள் தொடர்பு – நிகில்முருகன்.

Related posts

Hiphop Adhi has made a documentary titled ‘Thee Veeran’,

Jai Chandran

Varun Tej’s Matka Releasing On November 14th..

Jai Chandran

சின்னத்திரை சங்க தலைவருக்கு “சாஹிப் ஜாதா” விருது.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend