Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராவ் பகதூர் (தெலுங்கு பட விமர்சனம்)

படம்:: ராவ் பகதூர்  (தெலுங்கு படம்)

நடிப்பு: சத்திய தேவ், விகாஸ் முபாலா, தீபா தாமஸ்,, ஆனந்த் பாரதி, பிரனாய் வாகா, மாஸ்டர் கிரண்

தயாரிப்பு: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, சரத் சந்திரா ஈஸ்வரன், விஜய் ராகவன்

இசை: சமரன் சாய்

ஒளிப்பதிவு : கார்த்திக் பர்மர்

இயக்கம்: வெங்கடேஷ் மகா

பி ஆர் ஓ : சதீஷ்குமார்  S2 மீடியா

கதை : மர்மங்கள் நிறைந்த சமஸ்தானம் ஒன்றில் அந்த சமஸ்தானத்தின் ராஜா   ராமப்பா ராவ் பகதூர் (சத்திய தேவ் ) தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனக்கு பிறந்த குழந்தை இல்லை என்று எண்ணுகிறார்   அதற்கு காரணம் அந்த குழந்தை பிறப்பிலேயே கருப்பாக இருப்பதுதான், தங்கள் ராஜ வாரிசுகள் எல்லோருமே சிவப்பாக இருக்கும் போது இந்த குழந்தை மட்டும் எப்படி கருப்பாக பிறந்தது என்ற சந்தேகம் தான் ராமப்பாவுக்கு.  அதுவே அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி குடும்பத்தையே சிதைக்கிறது. பைத்தியம் பிடித்தது போல் இருக்கும் அவரை  தனி அறையில் தங்க வைக்கின்றனர். அவ்வப்போது ஒரு டாக்டர் வந்து  சிகிச்சை அளித்துவிட்டு செல்கிறார். ஒரு கட்டத்தில் கருப்பு குழந்தை இறந்து விட  பிற்காலத்தில் அது கொலை வழக்கமாக பதிவு செய்யப்படுகிறது  ராவ் பகதூரை போலீஸ் நேரடியாக விசாரிக்க வர  அதன் பிறகு பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. அது எங்க போய் முடிகிறது என்பது தான் கிளைமாக்ஸ்

படத்தின் கதையை கேட்டாலே  இது ராஜ பரம்பரை  வாரிசுகளின் கதை என்பது. புரியும். படத்தில்  நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அந்த காலகட்டத்து ராஜா உடை அணிந்து உலா வருகிறார்கள். சமஸ்தானத்தின் ராஜா ராவ் பகதூராக வரும் சத்யதேவ்  படம் முழுவதும் ஆக்கிரமித்து நிற்கிறார்.

தனி  அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சத்யதேவ் மனநிலை பாதித்தவர் போல்  தனக்குத்தானே பேசிக் கொள்வதும்,, வேறு யாரிடமும் பேசுவது போலவும், இறந்த மகனை நினைத்து பயப்படுவது போலவும்  என பல வித உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

ஹீரோயின் தீபா தாமஸ் நர்சாக வரும்போது  சமஸ்தானத்தில் படுக்கையில் இருக்கும்  பெரிய ராஜாவை  கவனித்துக் கொள்ள வருகிறார். அப்போது அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் சத்ய தேவை கவர்வதும், தீபா மீது அவர் ஆசை கொள்வதும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிப்பது எல்லாமே ஏதோ ஒரு வில்லங்கத்தில் முடியப் போகிறது என்ற ஒரு பதட்டத்தை உணர்த்துகிறது.  தீபா அவர் காதலை ஏற்க மறுப்பது வேறு கோணத்தில் கதையை திருப்பி விடுகிறது.

கருப்பாக பிறந்திருக்கும் வாரிசு எனக்கு பிறந்த மகன் இல்லை என்று சத்யதேவ் சொல்வதும் அதன் பிறகு நடப்பதெல்லாம் அமானுஷ்ய காட்சிகளாக படபடப்பை ஏற்படுத்துகிறது. கிளைமாக்சில் திடீரென்று போலீஸ் என்ட்ரி மற்றொரு டிவிஸ்ட்.

ரெண்டு மணி நேரம் முன்னதாகவே தற்போதைய படங்கள் முடிக்கப்பட்டு வரும் நிலையில் 3 மணி நேரம் சுமார் இந்த படத்தை இயக்குனர் வெங்கடேஷ் மகா  படமாக்கி இருப்பது கொஞ்சம் ஓவர் தான். ரிப்பீட் காட்சிகளை குறைத்து கொஞ்சம் வேகத்தை அறிமுகப்படுத்தினால்  பிளஸ் ஆக இருக்கும்.

1960 க்கு முந்தைய காலகட்ட கதை என்பதால் அதற்கேற்ற பழமையான  கலர் டோனில்   ஒளிப்பதிவாளர் கார்த்திக் பர்மர் படமாக்கி இருக்கிறார். படத்தில் இசையமைப்பாளர் அமரன் சாய் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வழங்கி இருக்கிறார்.

ராவ் பகதூர் – வித்தியாசமான கதை ப்ரியவர்களுக்கு..

Review by

K. Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

 

 

 

 

Related posts

ஷாமின் ‘அஸ்திரம் ‘ மே 9 முதல் ஆஹா தமிழ் ஒ டி டி யில் காணலாம்

Jai Chandran

முதன்முறையாக டைம் லூப் பாணி படம் ஜாங்கோ: இன்று பாடல் வெளியீடு

Jai Chandran

Veeramae Vaagai Soodum On Feb 4 th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend