Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒரே நேரத்தில் 3 தெலுங்கு படங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா மேனன்

தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த, நாயகி ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

யு வி கிரியேஷன்ஸ்  தயாரிப்பில், தமிழில் “வலிமை” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து இளம் நடிகர் நிகில் நடிக்க இடி என்டர்டெயின் மென்ரட்  ( Ed entertainment) தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், தற்போது முன்னணி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வுள்ளது.

தமிழில் ரசிகர்களின் இதய நாயகியாக கோலோச்சியவர், தற்போது தெலுங்கு ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொள்ளவுள்ளார். இது தவிர தற்போது சில தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Related posts

Make Reels with AmmaSong & share it with the hashtag

Jai Chandran

பிரபாஸ் படத்தில் இணைந்த அனுபம் கெர்

Jai Chandran

மறைந்த விவேக் நினைவாக ஆத்மிகா வீட்டில் நட்ட மரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend