Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’..

.
.மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ’ தமிழ் காமெடி-டிராமா தொடர் உலகளாவிய வெளியீடு — கலகலப்பான டிரெய்லருடன் அறிவிப்பு.

ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.

<Watch the trailer HERE>

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது தமிழ் ஒரிஜினல் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை மார்ச் 13 அன்று அறிவித்துள்ளது. சிரிக்க வைக்கும் அதே சமயம் மனதை தொடும் டிரெய்லருடன் வெளியிடப்பட்ட இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழைப் பின்னணியாகக் கொண்டது. Anekdotes உருவாக்கிய இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார்; Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரவீன் முத்துரங்கன் எழுதிய இந்த சீரிஸை அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. இணைந்து உருவாக்கியுள்ளனர். ‘லோக்கல் டைம்ஸ்’ மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது.

ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான, ஒரு காலத்தில் பெருமை பெற்ற பிராந்திய பத்திரிகையான ‘நம்ம செய்தி’ பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் போராடுகின்றனர். இந்த நால்வரின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு பலமான எதிரி ஆகியவற்றைச் சுற்றி இத்தொடரின் கதை நகர்கிறது.பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் என்பது உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.

தயாரிப்பாளர் ஜித்தின் துரை கூறுகையில்..,

“லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்..,

“ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.

இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்..,

“லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள். அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ் இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”

இந்த சீரிஸ் மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திய பிரதேசங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும்.

* கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள். அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ் இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”

இந்த சீரிஸ் மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திய பிரதேசங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும்.

Related posts

புகழ், ரவி மரியா நடிக்கும் 4 இடியட்ஸ் பட ஆடியோ வெளியீட்டு விழா..

Jai Chandran

துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை: கமல் கட்சி குரல்

Jai Chandran

First Look and Motion Poster of Tamil Feature Film Ajinomoto

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend