Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

டிசம்பர் 24ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா

திரையுலகின் மற்ற சங்கங்  களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர்  ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர்-கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24.12 .2023 ( ஞாயிறு) அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள் ளோம்.

கலைஞர் மு. கருணாநிதி திரையுலகில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக அவர் எழுபத்து ஐந்து படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்துள் ளார்.

நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் படத்தலைப்பு வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து உதவினார். அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் பாதி கட்டணம் என்று அறிவித்தார். மேலும், திரைப்பட மானிய தொகையினை வருடந்தோறும் வழங்கினார். ஐந்து முறை அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார்.

தனது வசனத்தால் மக்களின் சிந்தனையை தூண்டிவிட்டார். அவர் வசனம் எழுதிய ஒவ்வொரு படத்தின் துவக்கத்திலும் அவர் பேசும் பேச்சை கேக்கவே திரையங்கு நோக்கி ஏராளமான மக்கள் வந்தார்கள்.

அகில இந்திய அளவில் தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி மராத்தி, ஒரியா, குஜராத்தி, என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.

கலைஞர் வசனம் எழுதிய படங் களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கலைஞானி கமலஹாசன் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , இசைஞானி இளையராஜா கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள்

மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35000 பேர் இந்த விழாவி னை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது.

இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற் கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியா சமான நிகழ்ச்சிகள் பார்வையா ளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.

இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலை ஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது.

இந்த மாபெரும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்,  விளையாட்டுத்துறை அமைச்சர் செய்தித்துறை அமைச்சர், மற்றும் மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.இந்த மாபெரும் விழா குறித்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் அனைத்தும் திரை உலகினருக்கும், பொது மக்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படும்.” என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ்
இணைச் செயலாளர்
எஸ்.சவுந்தர பாண்டியன்
மற்றும் கலைப்புலி எஸ். தாணு, ஆர்.கே.செல்வமணி, பேரரசு, அருள்பதி, கே ராஜன்‌‌, டி.ஜி.தியாகராஜன்டி சிவா, லதா, லலிதகுமாரி, பசுபதி, பிரேம், சிவசக்தி பாண்டியன், சித்ரா லட்சுமணன், தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, கே.எஸ்.சீனிவாசன்
அன்பாலயா பிரபாகரன்‌‌, ஞானவேல்,‌ஹே மசந்திரன்சௌ, ந்தர் நடிகர்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள்

ஹெச் முரளி, , கபார், திருமலை, ஜே.சுரேஷ், பிரவீன் காந்தி,=பெப்சி விஜயன்,0பழனிவேல்,0அண்புதுரை, ஏ.எல்.உதயா,=ராமச்சந்திரன்,0
கமலக்கன்ணன், ஜி.எஸ். முரளி, .சாலை சகாதேவன், ரஞ்சித்குமார், ராஜா

பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தலைவர் என்.விஜயமுரளி, டைமண்ட் பாபு,
ஜான்,

 

Related posts

சீரடி சாய்பாபா மகிமை: பிரியா பாலு இயக்குகிறார்

Jai Chandran

ஒ டி டி தளத்தில் நேரடியாக ரிலீசான டியர் ஜீவா

Jai Chandran

Prabhas, Rana Daggubati Landed In The USA For Project K

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend