Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை ஜமுனா காலமானார்

நடிகை ஜமுனா தமிழில் 1954ம் ஆண்டு  பணம் படுத்தும் பாடு மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெனாலிராமன், திருட்டு ராமன், மிஸ்யம்மா, தங்கமலை ரகசியம் போன்ற ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி கன்னட மொழிப் படங்களில்  நடித்திருக்கிறார். உடல்நலமில்லால் இருந்து வந்த ஜமுனா இன்று ஐதராபாத்தில் காலமானார் அவருக்கு வயது 86.

கர்நாடக மாநிலம் ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாசராவ்-கவுசல்யா தேவி தம்பதிக்கு மகளாக 30 ஆகஸ்ட் 1930ல் பிறந்தவர் ஜமுனா. இவர் சிறு வயதாக இருந்த போதே அவரது தந்தை ஆந்திர மாநிலம் தெனாலிக்கு அருகில் உள்ள துக்கிரலா என்ற ஊருக்கு குடிபெயர்ந் தார். பள்ளி நாட்களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜமுனா, தமிழ், கன்னடம், மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ஜூலுரி  ராமனராவ் என்பவரை மணந்து ஆந்திராவில் வாழ்ந்து வந்தார்.  இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.  ஜமுனா ஆந்திர அரசியலில் குதித்து பணியாற்றி உள்ளார்
.இவரது கணவர் கடந்த  2014ம் ஆண்டு காலமானார்.

Related posts

வெளியானது “வலிமை” மோஷன் போஸ்டர்

Jai Chandran

மியூசிக் ஸ்கூல் ( பட விமர்சனம்)

Jai Chandran

Jithan Ramesh chosen perfect Route: celebrities wishes

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend