Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பகாசூரன் (பட விமர்சனம்)

படம்: பகாசூரன்

நடிப்பு: செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராட்சி, மன்சூர் அலிகான், பி. எல்.,தேனப்பன், குணானிதி, ராம்ஸ், சசி லையா, ரிச்சா, கூல் ஜெயந்த், அருணோ தயன், குட்டி கோபி, தேவதேஷினி,

தயாரிப்பு: ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன்

இசை: சாம் டி எஸ்.

ஒளிப்பதிவு: பருக் ஜே பாட்ஷா

இயக்கம்: மோகன் ஜி.

பி ஆர் ஒ: மணவை புவன்

ஒரு வரி கதைதான். தன் மகளின் சாவுக்கு காரண மானவர்களை தந்தை ஒருவர் பழிக்கு பழி வாங்குகிறார்.

கடலூர் மாவட்டம் தியாகவள்ளி கிராமத் தை பீமன் கூத்து காட்டு பவர் பீமராசு ( செல்வராகவன்). தன் மகள் பட்ட படிப்பு முடித்தவுடன் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட அதற்கு சம்மதித்து கல்லூரியில் சேர்த்து விடுகிறார். அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் கிடைக்க அவனுடன் ஒருநாள் முத்தம் தரும் சூழல் ஏற்பட அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு வாட்ச்மேன், வார்டன், பேராசிரியர் இன்னும் சொல்லாப்போனால் கல்லூரி தலைவரே அந்த பெண்ணை சூரையாடுகின்றனர். உண்மை அறிந்த பீமராசு ஒவ்வொருவரை யும் எப்படி பழி வாங்குகிறார் என்பதே கிளைமாக்ஸ்.

சிவனடியார் பரதேசியாக வரும் செல்வராகவன் ஒரு சஸ்பென்ஸ் கேரக்டராகவே அறிமுகமாகிறார். என் அப்பன் அல்லவா என்ற முதல் பாடல் செல்வராகவனின் ஈடுபாடான நடிப்பை வெளிப் படுத்துகிறது. எந்த அலட்டலும் இல்லாமல் தன் வேடத்துக்கு எந்தளவு ஆக்ரோஷம், எந்தளவு கோபம் காட்ட முடியுமோ அதை காட்டியிருக்கிறார்.

ஒதுக்குபுறமாக அழைத்து வந்து மாணவியை கெடுக்க முயலும் ஆசிரியரை துரத்தி துரத்தி கொல்லும் செல்வா பின்னர் பெண் வார்டனை பின் தொடர்ந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு கொள்வது பரபரப்பு.

பீமன் வேடம் போட்டு கூத்தாடும் செல்வாவின் கையில் தண்டாயுதத்துக்கு பதில் கத்தியை கொடுத்து ஆட விட்டது ஏனோ புரியவில்லை. பீமன் என்றாலே அவரது ஆயுதம் தண்டாயுதம் தானே.

ரிடயர்ட் மிலிட்டரி மேனாக வரும் நட்டி கொலை வழக்கில் துப்பு கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக் கைகள் கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது.

ராதாரவி கல்லூரி தலைவராக யாரோ ஒரு கல்வி தந்தையை நினைவுபடுத்துவது போல் வேடமிட்டிருக்கிறார்.

செல்வராகவனின் தந்தையாக இயல்பான நடிப்பில் மனதில் பதிகிறார் கே.ராஜன்.

திரவுபதி, ருத்ரதாண்டவம் என 2 படங்களில் வேகம் காட்டிய மோகன் ஜி பகாசூரனில் தன் பாலிசியை மாற்றிக் கொண்டாரோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு ஒரே டிராக்கில் கதையை நகர்த்திச் சென்றிருக் கிறார்.

புராண கதைகள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் கருட புராணம் போன்றவைகள்தான் இயக்குநர் மணிரத்னத்துக்கு தளபதி, இராவணன் படங்களையும், ஷங்கருக்கு அந்நியன் படத்தையும் இயக்க கைகொடுத்தன அதேபோல் தற்போது பகாசூரன் படம் இயக்க மோகன் ஜிக்கு மகாபாரத பீமன் கதாபாத்திரம் தான் கைகொடுத்திருக்கிறது. கதைக்கரு எங்கிருந்து எடுக்கப்பட் டாலும் அது நியாயத்தை சொல் கிறதா என்பதுதான் முக்கியம். அந்தவகையில் பகாசூரன் தன் தரப்பு நியாத்தை சொல்லியிருக் கிறது.

செல்போன் பயன்படுத்தும் மகள்கள் தீய வழியில் செல்லாமல் பாதுகாக்க அவர்களது பெற்றோர் கள் மகள்களை கண்காணிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்கிறது படம்.

“என் அப்பன் அல்லவா “பாடல் ஒன்றே போதும் இசை அமைப் பாளர் சாம் சி எஸ் உச்சாணிக் கொம்பில் ஏறிகொள்கிறார். அப்பாடலுக்கு இசை அமைத்த துடன் அவரே சொந்த குரலில் அப்பபாடலையும் பாடியி ருக்கிறார் என்பது பிளஸ்.

பருக் ஜே பாட்ஷா எதார்த்தம் மாறாமல் ஒளிப்பதிவு செய்துள் ளார்.

பகாசூரன் – செல்போன் ஆபத்து.

Related posts

எனக்கு முக்கியமான படம் நடிகை அபிராமி.பேச்சு

Jai Chandran

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய படம் தொடக்கம்..

Jai Chandran

JailTeaser marching towards 2 MILLION VIEWS!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend