Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உறுப்பினர்களுக்கு நடிகர் சங்கம் தீபாவளி பரிசு

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு,
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு அன்பு பரிசாக சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்படுகிறது. விருமன் பட வெற்றியை முன்னிட்டு நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின் மென்ட் சார்பாக நடிகர் சங்கத் துக்கு நன்கொடையாக வழங்கி யதில் 10 லட்சம் ரூபாய் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்களிப்பு சுமார் 2.50 லட்சம் ரூபாய் பெற்று இந்த ஆண்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள 1002 உறுப்பினர்களுக்கு 15.10.2022, 16.10.2022 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 1206 உறுப்பினர்களுக்கு 18.10.2022
இன்று காலை 10.00 மணியளவில் நடிகர் சங்க வளாகத்தில் நமது சங்க பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பூச்சி எஸ் .முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, தளபதி தினேஷ், எம்.  ஏ.. பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கினார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனை தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது

Related posts

கணம்’ படத்தில் அம்மா வேடத்தில் நடித்தது பெருமை – அமலா

Jai Chandran

Friendship Movie Team Wishes Harbhajan Singh

Jai Chandran

RRRMovie TRAILER out on DEC 3rd..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend