படம்: தி பாரடைஸ்
நடிப்பு: நானி, மோகன் பாபு, சத்யராஜ், கயாடு லோகர், சோனாலி குல்கரனி,, ராகவ் ஜெயால்
தயாரிப்பு சுதாகர் செருகுரி
இசை: அனிருத்
ஒளிப்பதிவு : சி எச் சாய்
இயக்கம்: ஸ்ரீகாந்த் ஓட்லா
பிஆர்ஓ : சதீஷ் குமார் (S2 மீடியா )
கதை : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் சவாரி இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காமல் அதிகாரம் படைத்த மாலிக் பரம்பரைக்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். தங்களது இன மக்களுக்கு சுதந்திரம் பெற்று அடிமை சங்கிலி இல்லாத வாழ்க்கையை தர துடிக்கிறான் வாலிபன் சடையன் (நானி ).. ஆனால் மாலிக் அதிகார பீடம் சடையனையும் அவனது இனத்தையும் அழிக்க போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்துகிறது. அந்த அடக்கு முறையை எதிர்த்து சடையன் இனத்தைச் சேர்ந்த மக்கள் போராடி வெற்றி பெற்றார்களா? தோற்றார்களா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
தி பாரடைஸ், இதுவொரு தனி உலகமாக படைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். மாலிக் அதிகரவர்கம் அங்குள்ள மக்களை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தி சாகடிப்பது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. தொடக்கம் முதல் இறுதி வரை வன்முறை ரத்தம் குத்து வெட்டு துப்பாக்கி சூடு இன்னும் என்னென்ன வன்முறை இருக்கிறதோ அவ்வளவு ம் இந்த படத்தில் இருக்கிறது.
சடையன் கதாபாத்திரத்தில் நானி இரட்டை ஜடை போட்டுக்கொண்டு வந்தாலும் துடிப்புக்க, வீரம் செறிந்த ஆண்மகனாக நடித்திருக்கிறார். அவரது ஆக்சன் காட்சிகள் இதுவரை அவர் படத்தில் காண முடியாத ஒன்று. உச்சபட்ச ஆக்ஷன் காட்சிகளில் நானி நடித்து தானொரு ஆக்சன் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார்.
நடன காட்சிகளிலும் நானி அதிரிபுதிரி செய்திருக்கிறார். இதற்கிடையே கயாடுவுடன் காதல், சோனாலி குல்கர்னியிடம் அம்மா சென்டிமென்ட் என ஏகத்துக்கு செண்டிமெண்ட் நிறைந்து வழிகிறது.
கதையில் சில சஸ்பென்ஸ்கள் இருப்பதை ஓபன் செய்தால் அது படம் பார்க்கும்போது சுவாரசியத்தை குறைக்க விடும் ஆனால் இவ்வளவு வன்முறையையும், இவ்வளவு கொடூர காட்சிகளையும் எதற்காக இயக்குனர் வைத்தார் என்பது தான் கேள்விக்குறி. ஒரு கட்டத்தில் முள்ளங்கி பத்தையை சீவுவது போல் தலைகளையும் கைகளையும் சீவும்போது இதயத்தில் வெட்டு விழுந்தது போல் ஷாக் அடிக்கிறது.

கயாடு லோகர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியாக நடித்து அசரவைக்கிறார். நானியின் தாயாக வரும் சோனாலி குல்கர்னி புரட்சித் தாயாக நடித்திருக்கிறார். அவர் காட்டும் கோபம் தாய் பாசம் எல்லாமே நிஜம் போல் பிரதிபலிக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மோகன்பாபு இப்படத்தில் மாலிக் என்ற அதிகார வர்க்க கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி நடிப்பது அவருக்கு கைவந்த கலை என்பதை ரொம்பவே அசால்டாக நிரூபித்திருக்கிறார். சத்யராஜ் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரத்தில் வருகிறார்.
சுதாகர் செருகுரி படத்தை தயாரித்திருக்கிறார்.
ஒரு நொடி கூட அசராமல் இசைக்கருவிகளை அடித்து நொறுக்கி இருக்கிறார் அனிருத் சி எச் சாய் கேமரா பழங்காலத்துக்கே சென்று ரசிகர்ளுக்கு புதிய அனுபவத்தை தருகிறது.
அடிமைப்பட்டு கிடக்கும் இனம் எப்படி போராளியாக மாறுகிறது என்ற ஒரு வரி கதையை எப்படி எல்லாம் சுழற்றியடிக்க முடியுமோ அப்படி எல்லாம் திரைக்கதையில் பல்வேறு சுழற்சிகளை வைத்து சுழன்றடித்து இயக்கியருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓட்லா.
தி பாரடைஸ் – வன்முறையில் பூக்கும் சுதந்திரம்.

Review by
K. Jayachandhiran
www.trendingcinemasnow.com
