படம்: நூறு கோடி வானவில்
நடிப்பு: ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா சின்னி ஜெயந்த், சம்பத், எம் ரினில், வி ஜே பார்வதி
தயாரிப்பு : பாலாஜி காபா, அருண் அருணாச்சலம்
இசை : சித்து குமார்
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் குமார்
இயக்கம்: சசி
ரிலீஸ்: ZEE5 Original ஓடிடி தளம்
பி ஆர் ஓ : சதீஷ் (AIM )
கதை: டிவியில் நிகழ்ச்சிகள் தயாரித்து தரும் ஹரிஷ் கல்யாண் கோவாவுக்கு மாற்றப்படுகிறார். அங்கு சித்து இத்னானியை பார்த்தவுடன் மனதை பறிகொடுக்கிறார். அவரை காதலிக்க எண்ணும்போது அவர் வேறு ஒருவரை காதலிப்பது தெரிய வருகிறது. ஆனால் அந்த நபர் கோமா நிலையில் இருக்கிறார். இதற்கிடையில் சித்தியை வைத்து டிவி நிகழ்ச்சி தயாரிக்க ஹரிஸ் கல்யாண் முயல்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஆனாலும் ஹரிஷின் காதலை ஏற்க மறுக்கிறார் சித்தி. இந்நிலையில் நடப்பது என்ன? கோமாவில் இருக்கும் காதலன் கதி என்னவானது? என்பதற்கு விவாதத்துடன் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்
சொல்லாமலே, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன் போன்ற படங்களை இயக்கிய சசி கவித்துவமான காதல் கதையாக நூறு கோடி வானவில் படத்தை இயக்கியிருக்கிறார்.
பல ஹீரோக்கள் ஆக்சன் ஹீரோக்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் காதல் இளவரசனாக தனது தோற்றத்தை பராமரித்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு இந்த படத்தில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது.
ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி இருவருக்கு இடையேயான காதல், காதல் சுழலுக்குள் சிக்கிய 2 மனங்களின் போராட்டமாக காட்சிக்கு காட்சி தொடர்வது இவர்களது காதல் எங்கு போய் முடியுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி முடிவு என்னதான் ஆகப் போகிறதோ என்பதை அறிவதற்காக கிளைமாக்ஸ் வரை பார்வையை திருப்ப
முடியாமல் திரையிலேயே பதிய வைத்து விடுகிறார்கள்.
ஹரிஷ் கல்யாண் திடீர் திடீரென்று கோபப்பட்டு சித்தி யை முறைத்துக் கொண்டு டென்ஷன் ஆகும் காட்சிகள் விருப்பமில்லாத ஒரு பெண்ணை எப்படி இவர் காதல் செய்யும்படி வற்புறுத்தலாம் என்ற கேள்வியை கேட்க வைக்கிறது.

அழகு தேவதையாக வருகிறார் சித்தி இதனானி. அவர் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழிகள் இளவட்டங்களை மயக்கும்.
கோவை சரளா, தம்பி ராமையா சின்னி ஜெயந்த், சம்பத், எம் ரினில் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நிறைவு செய்திருக்கிறார்கள்.
கேமரா உமனாக வரும் வி ஜே பார்வதி முணுமுணுத்தபடி மற்றவர்களை நக்கலடிக்கும்போது காமெடி. சிதறுகிறது. இப்படியே முயற்சி செய்தால் நல்ல காமெடி நடிகையாக வர வாய்ப்பிருக்கிறது.
பாலாஜி காபா, அருண் அருணாச்சலம் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
சிந்து குமார் இசையில் காதல் பாடல்கள் மனதை சுண்டி இழுக்கின்றன.
கோவாவின் எழில் மிகுந்த காட்சிகளை பிரசன்னா எஸ் குமார் கேமரா அழகு குறையாமல் படமாக்கியிருக்கிறது.
நூறு கோடி வானவில் – காதல் செய்யத் துடிக்கும் இரு மனங்களின் இதயத்துடிப்பு.

Review by K Jayachandhiran
www.trendingcinemasnow.com
