Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சீன் (பட விமர்சனம் )

படம்: சீன் (SCENE )

நடிப்பு: சூர்யா, நஸ்ரியா நாசிம் , நஸ்லன், ஆனந்தராஜ், லால்

தயாரிப்பு: ஜகாரம் ஸ்டுடியோஸ், 2 D என்டர்டெய்ன்மென்ட்
ஜோதிகா- சூர்யா

இசை: சுசின் ஷியாம்

ஒளிப்பதிவு: வினித் அகஸ்டியன்

இயக்கம்: ஜித்து மாதவன்

பிஆர்ஓ : சதீஷ்குமார் (S2)

கதை: திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரி டி எஸ் பி இன்பராஜ் (சூர்யா) சைக்கோ கொலைகாரன் ஒருவனை சிறையில் அடைக்கிறார். ஆனாலும் அடுத்தடுத்து நகரில் சைக்கோ கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அந்த கொலைகளை செய்வது யார் என்பதை துப்பு துலக்க மீண்டும் இன்ப ராஜிடம் உயர் அதிகாரிகள் பொறுப்பை ஒப்படைக்க முயல்கின்றனர். ஆனால் தான் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக கூறுகிறார் இன்பராஜ் . அவர் ராஜினாமா முடிவு எடுப்பதற்கு என்ன காரணம்? அதிகாரிகளின் கோரிக்கையை  ஏற்கிறாரா என்பதற்கு அண்டர் கரண்ட் ஆக்சன் பாய்ச்சலுடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

சூர்யா அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று ஒரு புதுப் பாதையை நோக்கி படு வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே காக்க காக்க சிங்கம் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்திருப்பது ஷாக்கோ ஷாக்.

போலீஸ் நிலையத்துக்குள் சூர்யா நுழைந்தாலே அங்கிருக்கும் சக போலீசார் எழுந்து நின்று அவருக்கு சல்யூட் அடித்து ராஜ வரவேற்பு கொடுக்கும் காட்சிமுதல் அடுத்தடுத்து அவருக்கு தரப்படும் பில்டப்கள்  ஏன் இந்த பந்தா என எண்ணும் நிலையில் அவரை பற்றிய உண்மையை போட்டுடைக்கும் போது அரங்கே ஒரு நிமிடம் ஸ்டன் ஆகி விடுகிறது.

ஒரு போலீஸ் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். அதில் ஒரு சீக்ரெட் இதுவரை வெளியில் கசியாமல் இருந்த நிலையில் முதல் காட்சி முடிந்த உடனே அந்த சீக்ரெட் பரவினாலும் இவர் எப்படி சைக்கோ கொலைகாரனையும், அடுத்தடுத்து கொலைகள் நடத்தும் புது கொலைகாரனையும் கண்டுபிடிக்கிறார் என்ற கேள்விக்கு கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில் வித்தியாசமான நடிப்பின் மூலம் பதிலளித்திருக்கிறார்.

சூர்யா இந்தசீனில் மிஸ் செய்து விட்டார் என்று சொல்ல முடியாதபடி மிகக் கவனமாக தனது கதாபாத்திரத்தை  கையாண்டிருப்பது ரசிக்க வைப்பதுடன், அரசியலுக்கு வரப்போகிறேன் என்று ஒரு குண்டையும் போட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி விடுகிறார்.
(சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு தானே நல்லது.. வசனத்தோடு நிறுத்தி விடாமல் சூர்யா அடுத்து தேர்தலில் குதித்தால் வெற்றி நிச்சயம்)

படத்தில் சூர்யாவின் கண்ணுக்கு கண்ணாக நஸ்ரியா நாசிம் நடித்திருக்கிறார். அது எப்படி அவர் சூர்யாவின் கண் ஆகிறார் என்ற சஸ்பென்சை ரசிகர்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

நடிப்பிலிருந்து பல வருடங்களாக ஒதுங்கி இருந்த நஸ்ரியா நாசிமை எப்படித்தான் இந்த படத்தில் நடிக்க வைத்தார்களோ என்ற ஆச்சரியம் அதிகரிக்கிறது. இடைப்பட்ட ஆண்டுகள் அவரைத் தேடாத கண்கள் இல்லை. அது மட்டுமல்ல ரீஎன்ட்ரி கொடுத்தால் மாஸாகத்தான் கொடுப்பேன் என்று சொன்னாரோ என்னவோ? அசத்தலான ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறார். அவரது சண்டைக்காட்சியை பார்த்து சூர்யாவே அசந்து விடுகிறார்.

இளம் புது வில்லன் ஒருவருக்கு சூர்யா கொஞ்சம் அதிகப்படியாகவே படத்தில் இடம் கொடுத்திருக்கிறார்.. அவரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி வில்லத்தனத்தில் வெளுத்திருக்கிறார்.

ஜகாரம் ஸ்டுடியோஸ், 2 D என்டர்டெய்ன்மென்ட்
ஜோதிகா- சூர்யா படத்தை தயாரித்திருக்கின்றனர்.

சுசின் ஷியாம் இசையும்
வினித் அகஸ்டியன் ஒளிப்பதிவும் சம விகிதத்தில் கை கொடுத்திருக்கிறது.

இயக்குனர் ஜித்து மாதவன் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களுக்கு ஏற்ற ஒரு கிரைம் திரில்லர் கதையை உருவாக்கினால் எப்படி பர்பெக்சனாக உருவாக்குவாரோ அதுபோல் சூர்யாவுக்கு டிஎஸ்பி இன்பராஜ் கதாபாத்திரத்தை இயக்குனர் சிந்தித்து எழுதி இருப்பதே அவரது மாறுபட்ட கதைக் களத்துக்கு சான்று. படத்தை வித்தியாசமான கோணத்தில் பார்க்க வைத்திருக்கிறார்.

சீன்- சூர்யாவின் மாறுபட்ட ஆக்சன் அவதாரம்.

Review by
K Jayachandhiran
www.trendingcinemasnow.com

Related posts

சூர்யா வழங்க கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்”

Jai Chandran

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்புமனு தாக்கல்..

Jai Chandran

கொரில்லா போல் மாறிய ஹீரோ தருண் விஜய்யால் பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend