Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மீசைய முறுக்கு 2 (பட விமர்சனம்)

படம்: மீசைய முறுக்கு 2

நடிப்பு: ஹிப்ஹாப்  தமிழா ஆதி,  சைத்ரா ஜே ஆச்சார்,  கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன்,  ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன்

தயாரிப்பு:குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்

இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஒளிப்பதிவு : பாலாஜி சுப்ரமணியம்

இயக்கம்: ஹிப்ஹாப் தமிழாஆதி

பி ஆர் ஓ : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 Media)

கதை : 70களில் வடசென்னை பகுதியில்  கானா பாடல்கள் பிரசித்தம்   அந்த பாடலைக் கேட்கும் ஆடியோ நிறுவன நிர்வாகி கருணாகரன்  தனது தந்தையின் ஆடியோ கேசட் நிறுவனம் மூலம் ஒளிப்பதிவு செய்து உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப் போவதாக கானா பாடகர் தாசிடம்  (ஹிப்ஹாப் ஆதி ) சொல்கிறார். அது தோல்வியில் முடிய  காலங்கள் உருண்டோடுகிறது  2026 காலகட்டத்தில் கானா இசைக்கலைஞர் ஆதிக்கும், பிரபல இசைக் கலைஞருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கியது போல்  ஆதியே இயக்கி நடித்திருக்கிறார். ஆனால் ஒரு இசை கலைஞரின் போராட்டத்தோடு முதல் பாகம் முடிந்த நிலையில் அந்த இசைக்கலைஞன் வாழ்க்கை பயணத்தை தொடர் வகையில் இரண்டாம் பாகம் அமைக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலும் இப்படம் முற்றிலுமாக முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிய திரைக்கதை அம்சத்துடன் உருவாகி இருக்கிறது. அதுதான் இந்த படத்திற்கு புதிய வடிவத்தை தருகிறது

முதல் பாகத்தில் தனி ஹீரோவாக நடித்திருந்த ஹிப் ஹாப் ஆதி தமிழா இரண்டாம் பாகத்தில் மூன்று வேடத்தில்  நடித்திருப்பது இதுவரை இந்த படத்தில் வைக்கப்பட்டிருந்த சீக்ரெட். அந்த சீக்ரெட் என்ன என்பதை இங்கு சொல்வதை விட படத்தில் ரசிகர்கள் பார்த்தால் இன்னும் கூட ஆச்சரியமாக  ஒரு வகையில் குழப்பமாக கூட இருக்கும். எனவே அந்த சீக்ரெட்டை ரசிகர்கள் படத்தில் பார்ப்பது தான் பொருத்தமாக இருக்கும்

ஹிப் ஹாப் ஆதி வழக்கமான தனது பாணி நடிப்பை  வழங்க தவறவில்லை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அவர் வித்தியாசம் காட்ட முயற்சித்திருந்தாலும் பாடி லாங்குவேஜ் கொடுத்தவரை பெரிதாக மாற்றம் இல்லை.

கானா பாடகர் தாஸ் கதாபாத்திரத்தில் வடசென்னை லோக்கல் பாஷை பேசி நடிக்கும் ஆதி அடுத்தடுத்த இரண்டு பாத்திரங்களில் தன்னை வேறுபடுத்த முயன்றிருக்கிறார். இளமைக்கும் துள்ளலுக்கும்  குறைவில்லை.

குறிப்பாக இசை கலைஞராக வரும் இரண்டாவது கதாபாத்திரத்தில் ரொம்பவே ஜோவியலாக  நடித்திருக்கிறார். கவர்ச்சி நாயகியாக வரும் கேத்திகா சர்மா உடன்  இளமை பொங்க நடித்து இளைஞர்களுக்கு கவர்ச்சி விருந்தும் படைக்கிறார்.

கானா பாடல் பாடும் தாஸ் கதாபாத்திரத்தில் வரும் ஆதிக்கு ஜோடியாக சைத்ரா ஜே ஆச்சார் நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகி  ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரம்  முதல் பாதி வரை சஸ்பெண்ட் ஆகவே விடப்பட்டிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

படத்தின் முதல் பாதியில் வரும் கலாட்டாக்கள் பெரிய அளவில்  ஈர்ப்பை தராவிட்டாலும் படத்தின் இரண்டாம் பாதி அதனை ஈடு செய்யும் வகையில் விறுவிறுப்பு கூடி கவனத்தை ஈர்க்கிறது.

மீசைய முறுக்கு முதல் பாகம் படத்தில் இடம்பெற்ற “தோத்தாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு”   வசனம் இரண்டாம் பாகத்திலும்  ரிப்பீட் ஆகி  இருப்பதால் அந்த வசனத்தை ஆதி சொல்வதற்கு முன்பே அரங்கில் கரவொலி  பறக்கிறது.

நாசர், கருணாஸ், நரேன் பாபா பாஸ்கர், யோகி பாபு, விஜய் வரதராஜ் தங்கள் பாத்திரங்களை நிறைவு செய்கின்றனர் காமெடி நடிகராக வரும்  ஹர்ஷத் கான்  ஓவர் ஆட்டிட்யூட் காட்டி இருந்தாலும் சிரிக்க வைக்க முயல்கிறார்.

கானா பாடல்களுக்கு சில அறிவுறுத்தலங்களோடு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி அதனை அமெரிக்காவில் பாடப்படும் ஹிப் ஹாப் பாடலுக்கு இணையாக ஒப்பிடுவது அதன் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை ஹிப் ஹாப் ஆதி இப்படத்தின் இயக்குனராக கை கொடுத்து உதவி இருக்கிறார்.

இசையமைக்கும் பொறுப்பையும் ஹிப்ஹாப் ஆதி ஏற்றிருக்கிறார் 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெற்றாலும் ஒன்றிரண்டு பாடல்கள் தாளம்  போட வைக்கிறது.

குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

பாலாஜி சுப்ரமணியம் கேமரா மூன்று காலகட்டங்களை வித்தியாசப்படுத்தி காட்ட சில மேஜிக் செய்திருக்கிறது.

மீசைய முறுக்கு 2 – இளவட்ட கலகலப்பு.

Review by K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

 

Related posts

கமலி ஃப்ரம் நடுக்காவேரி (பட விமர்சனம்)

Jai Chandran

அசத்தல் போட்டோ ஷூட்டில் விஜய் சேதுபதி..

Jai Chandran

யுவனின் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ இசை மேடை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend