Trending Cinemas Now
தமிழ் செய்திகள் விமர்சனம்

ராமாயணம் (பட விமர்சனம்)

படம்: ராமாயணம்

நடிப்பு: ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரவி துபே, சன்னி தயோல், அருண் கோவி,லாரா தத்தா, அனுபம்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரித் சிங், ஷோபனா

தயாரிப்பு: நமித் மல்ஹோத்ரா, யாஷ்

இசை: ஏ ஆர் ரகுமான்

ஒளிப்பதிவு : பங்கஜ் குமார், மகேஷ் லிமாயே

இயக்கம்: நிதேஷ் திவாரி

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

கதை: ராமாயணம் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் புராணம். நாடக வடிவில், தெருக்கூத்து வடிவில், திரைப்பட வடிவில், டிவி சீரியலாக என பல வடிவத்தில் இதுவரை ராமாயணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதேராமாயண புராணம் தான் இந்த படத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.

கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்ட நிலையில் பரதன் அயோத்திக்கு அரசனாக அரசனாக வேண்டிய ராமர் 14, வருடம் காட்டிற்கு மனைவி சீதா, தம்பி லட்சுமணன் ஆகியோருடன் வனவாசம் செல்கிறார். சீதையை ராவணன் கடத்தி செல்கிறான். அவரை மீட்டு வர ராமன் இலங்கை செல்ல முடிவு செய்கிறார். இந்த கதையுடன் இந்த புராணத்தின் முதல் பாகம் முடிவடைகிறது அடுத்து ஹனுமான் வானர படையுடன் இலங்கைக்கு ராமர் சென்று சீதையை எப்படி மீட்கிறார் என்ற புராணக்கதை இரண்டாம் பாகமாக வெளிவர உள்ளது

இதுவரை ராமாயணம் பல்வேறு விதமாக திரைப்படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் முதல் முறையாக ஸ்டார் அந்தஸ்துள்ள நடிகர், நடிகைகள் நடித்த எண்ணிப் பார்க்க முடியாத பிரம்மாண்ட படமாக உருவாக்கி இருப்பது இதுவே முதல் முறை.

தொடக்க காட்சியிலேயே கிராபிக்ஸ், வி எஃப் எக்ஸ் காட்சிகள் மூலம் ரசிகர்களை நிமிர்த்தி உட்கார வைத்து விடுகிறார்கள்.

ராமர், ராவணன் கதையை செவிவழியே கேட்டவர்களுக்கு அவர்கள் இருவரின் பிறப்பின் ரகசியம் என்ன என்பதற்கான பதிலை படத்தின் தொடக்கத்திலேயே சொல்வதால் இந்த படத்தை தொடக்கம் முதலே பார்ப்பது ராமாயணத்தை தொடக்கம் முதல் அறிந்து கொள்ள உதவும்.

ராமர் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாக அதிரடி காட்டியிருந்தநிலையில் அவரது கையையும் காலையும் கட்டி போட்டு ராமர் கோலத்துக்கு மாற்றி அமைதியாக நடிக்க வைத்திருப்பது முற்றிலுமே பரவசத்தை ஏற்படுத்துகிறத

இவரைப் போய் ராமராக ஏன் தேர்வு செய்தார்கள் என்று யாரும் கேள்வி எழுப்பி விடாத படி ரன்பீர் கபூர் ராமராகவே உருமாறி இருக்கிறார் என்று சொல்லலாம்.. சீதையுடன் காட்டுக்கு சென்ற பிறகு அவரது காஸ்டியூம் என்பது ஒரு காவி வேட்டி, தோளில் அம்பரா தூணி, கையில் வில் என்று எளிமையாக மாறிவிடுவது கதாபாத்திரத்தை உயிரோட்டமாக்கி இருக்கிறது.

ராமர் என்னதான் கடவுளாக வணங்கப்பட்டாலும் அவர் மனித பிறவி தான் என்று படத்தில் சொல்லப்படுகிறது. அவர் மனித பிறவி எடுத்ததற்கான காரணத்தையும் சொல்வது புரியாதவர்களுக்கு உண்மையை புரிய வைக்கும். ராவணன் பிரம்மனிடம் வாங்கிய சாகா வரத்தில் தன்னை கடவுளும் சரி, இயற்கையும் சரி சாகடிக்க முடியாத வரத்தை தர வேண்டும் என்று பெறுகிறான். ஆனால் மனிதன் கையில் சாவது பற்றி ராவணன் வரம் வாங்காது தான் ராம அவதாரத்தின் சூட்சமம் என்பதை எளிமையான வசனம் மூலம் புரிய வைத்திருக்கிறார்கள்.

ராமாயணம் ராமரை பற்றிய காவியம்தான் ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை ராவணனாக கே ஜி எஃப் பட ஹீரோ யாஷ் நடித்திருக்கிறார் என்பதை விட படத்தையே ஆட்சி செய்திருக்கிறார் எனலாம்.

தொடக்கம் முதல் இறுதி வரை யாஷ் நடத்தும் ராவண தர்பார் அவரை நடிப்பு அரக்கனாக மாற்றியிருக்கிறது. அவரது நடிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது படத்தை பார்த்து பிரமித்துப் போங்கள்

சீதையாக சாய் பல்லவி வேட மேற்றிருக்கிறார். ரவுடி பேபி பாடலுக்கு அந்த ஆட்டம் போட்ட சாய் பல்லவியா இது என்று கேட்கும் அளவுக்கு அமைதியின் சொரூபமாக மாறி இருக்கிறார். சீதைக்கு போர்த் தந்திரங்கள், வாள் வீச்சு தெரியும் என்பதெல்லாம் இந்த படத்தை பார்த்தபோது தான் தெரிகிறது.

லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல், தசரதனாக அருண் கோவி, கைகேயியாக லாரா தத்தா, மண்டோதரியாக காஜல் அகர்வால், சூர்ப்பநகையாக ரகுல் பிரித் சிங், வித்யுஜிவாக விவேக் ஓபராய், விபீஷன்னாக ஹரிஸ் உத்தமன் நடித்திருக்கிறார்கள்.

நமித் மல்ஹோத்ரா, யாஷ் படத்தை அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார்கள். பிரமாண்ட படத்திற்கு தனது இசை மூலம் பிரம்மாண்டம் சேர்த்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

பங்கஜ் குமார், மகேஷ் லிமாயே ஒளிப்பதிவாளர்கள் நாங்கள் தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தோம் என்று பெருமை பேசிக் கொள்ளலாம்..

இயக்குனர் நிதேஷ் திவாரி படத்தை ஆன்மீக உணர்வு மேலங்கும் விதத்தில் இயக்கியிருக்கிறார் என்பதை விட பிரம்மாண்டத்தின் வலிமையை ராமாயணம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். முதல் பாகம் கிளைமாக்ஸ் முடிஞ்ச பிறகு கூட ஒரு சில வினாடிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் உருவாக்கி இருக்கிறார் அந்த வினாடியில்தான் அடுத்த பாகத்துக்கான ஹனுமான் வருகை ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை முழங்க வைக்கிறது.

3டி வடிவில் ராமாயணம் படத்தை பார்ப்பது முற்றிலும் புதிய அனுபவம்.

ராமாயணம் – பலரால் பல்வேறு திருத்தங்கள் படத்தில் கூறப்பட்டாலும் படத்தின் பிரம்மாண்டமும் நடிப்பும் குறிப்பாக யாஷின் ராவண தாண்டவமும் எல்லா குறைகளையும் மறக்கடித்து விடுகிறது.

Review by K. jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

“நல்லபடம்” இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு..

Jai Chandran

சீமான் தந்தை காலமானார் : கமல் இரங்கல்

Jai Chandran

சினிமா பாடலாசிரியரான வைரமுத்து ரசிகர் முனைவர் பொன் மனோபன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend