Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விடா முயற்சி பட விமர்சனம்

படம்: விடா முயற்சி

நடிப்பு: அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் , ரெஜினா, ஆரவ்

தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன்

தயாரிப்பு தலைமை நிர்வாகம்: ஜி கே எம்.தமிழ்குமரன்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

இயக்கம்: மகிழ் திருமேனி

பட வெளியீடு: ரெட் ஜெயன்ட்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்

அஜித் நடிப்பில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான படம் விடா முயற்சி. பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திடீரென்று ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 6ம் தேதி 2025 வெளியாகி இருக்கிறது.

அஜர்பைஜான் நாட்டில் வேலை செய்யும் அஜித் சில வருடங்களுக்கு முன்பு திரிஷாவை காதலித்து திருமணம் செய்கிறார். 12 வருடங்கள் கழித்து இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு  பிரிய நேர்கிறது. விவாகரத்துக்கு  மனு செய்துவிட்டு தன் தாய் வீட்டில் இருக்கப் போவதாக திரிஷா கூற அவரை தானே காரில் அழைத்துச் சென்று தாய் வீட்டில் விடுவதாக அஜித் சொல்ல அதற்கு திரிஷா சம்மதித்து அவருடன் காரில் செல்கிறார்.  நீண்ட சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று பிரேக் டவுன் ஆகிறது. அப்போது அங்கு வரும் சிலர் அஜித்திடம் வம்பிழுக்கின்றனர். இந்நிலையில் அப்பக்கம் அர்ஜுன், ரெஜினா ஓட்டி வரும் டிரக்கில் பாதுகாப்பாக திரிஷாவை அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்க அனுப்பி வைக்கிறார். இதற்கிடையில் காரை சரி செய்து திரிஷாவை அழைத்துச் செல்ல குறிப்பிட்ட ஓட்டலுக்கு அஜித் வருகிறார். ஆனால் அங்கு திரிஷா வரவில்லை என்று ஹோட்டலில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். அப்படி என்றால் திரிஷாவை அர்ஜுன்  கடத்திச் சென்றுவிட்டார் என்று அவரை தேடத் தொடங்குகிறார் . அதன் பிறகு நடப்பது என்ன என்பது  ஒரு சேசிங் கதையாக கிளைமாக்ஸ் வரை செல்கிறது.

வழக்கமான அஜித் குமாரின் கமர்ஷியல் படத்திலிருந்து சற்று மாறுபட்ட கதையாக உருவாகி இருக்கிறது படம். அமெரிக்கன் படமான பிரேக் டவுன் என்ற பட கதையை தழுவி இப்படத்தை இயக்கி இருக்கிறார் மகிழ்திருமேனி.
தொடக்கத்தில் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அஜித்தின் இளமை தோற்ற கெட்டப்கள் கண்களுக்கு  விருந்தாக்குகிறது.

அஜித் – திரிஷா காதல் காட்சிகள் கசாமுசா காதலாக இல்லாமல் ரொம்பவும் ஜென்டிலாக நகர்கிறது. திரிஷா முன் மண்டியிட்டு அவரது விரலில் அஜித் மோதிரம் மாட்டி காதலை சொல்வது மேற்கத்திய பாணியாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

திடீரென்று அஜித் – திரிஷா கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக கூறியவுடன் இது கோர்ட்டில் சென்று முடியும் கதையாக இருக்கும் என்று எண்ணினால் கதையோ வேறு திசையில் பயணிக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு செல்லும் பாதையில் திரிஷாவை அமர்த்திக்கொண்டு அஜித் காரில் அழைத்து செல்லும்போது எதிரே வரும் கார் மீது மோதாமல் இருக்க அஜித் காரை படு வேகமாக திருப்பி ஜெர்க் தருவது நிமிர வைக்கிறது

அர்ஜுன், ஆரவ் இருவரும் செய்யும் அட்டூழியத்துக்கு  பின்னர் ஆக்ஷன் அதிரடி காட்டி.அஜீத் பதிலடி தரும்போது  அரங்கு அதிர்கிறது. ரசிகர்களின் விசில் சத்தத்தையும், , கைதட்டல் சத்தத்தையும்  பொங்கி  எழச் செய்கிறது. குறிப்பாக காருக்குள் நடக்கும் அஜித்தின் அதிரடி ஆக்ஷன் செம. ஒரு சின்ன இடத்தில் இப்படியொரு ஆக்ஷன் காட்சியை எப்படி படமாக்கினார்கள்  என்று  வியப்பு ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் அஜித்தை கடத்துச் சொன்னது திரிஷா தான் என்று அர்ஜுன்,  ரெஜினா கூட்டம் ஒரு குண்டை தூக்கி போடுவது எதிர்பாராத ஷாக்.  இது போன்ற ட்விஸ்ட்டுகள் படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.

மங்காத்தாவில் இணைந்த அஜித்-  அர்ஜுன் த்ரிஷா  காம்பினேஷன் இப்பபடத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரெஜினா கொஞ்சம்  ரஃப் அண்ட் டப்பாக வருகிறார்.

இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தை இயக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை ஒரு ஆக்ஷன் படம் என்றில்லாமல் அஜீத்திற்குள் இருக்கும்.நடிப்பை பிரவாகமாக கொட்ட வைத்திருக்கிறது.

அஜித் தனது ஹீரோ ஹிசத்தை மறந்து  ஒரு  சராசரி கணவனால் என்ன  முடியுமோ அதை எதார்த்தமாக செய்து ஒரு ஆசிட் டெஸ்ட் நடத்தி இருக்கிறார். அது அவரது மறுபக்கத்தை காட்டி இருப்பதுடன் விஜய் ரசிகர்களும் பாராட்டும் அளவுக்கு புதிய டிரெண்டை உருவாக்கி இருக்கிறது.

அனிருத் பின்னணி இசை தரம்.

படத்தில் பாராட்டு பெரும் மற்றொரு அம்சம்   என்பதைவிட சம்பவம் செய்திருப்பது எதுவென்றால்  ஓம்  பிரகாஷின் ஒளிப்பதிவு . ஹாலிவுட்டை மிஞ்சி விட்டார்.
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ் கரன் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஜி கே எம். தமிழக்குமரன் தயாரிப்பு தலைமை நிர்வாகம் செய்துள்ளார்.

விடாமுயற்சி – ஒரு ஹாலிவுட் ஃபிலிம் பார்த்த அனுபவம்

Related posts

Destiny or Love? Which will win? Prabhas Radhe shyam has answers

Jai Chandran

யுவன் தயாரிப்பில் ரியோ நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் டிரெய்லர் விழா

Jai Chandran

இணையத்தை தெறிக்கவிடும் தனுஷின் “நானே வருவேன்” டீஸர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend