Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஐஸ்வார்யாராயுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த அனுபவம்: சரத்குமார் விளக்கம்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர் சரத்குமார்.

இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது:

பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணி ரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கி ணைத்து இந்த படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள் ளார்கள். முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங் களாக போகும். மணிரத்னம் அதை சரியாக சுருக்கி, ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், நந்தினியின் மனம் புரியாத கணவன் என்ற பல அம்சங்கள் நிறைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத் தற்கு நான் நன்றி கூறிகொள்கி றேன். மணிரத்னம் உடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறோம் என்று நினைக்கி றேன். வரலாற்றில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில், இந்த படத்தில் நடித்த எங்களை இனிமேல் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரியவரும். இனிவரும் காலங் களில் சோழர்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழலை இந்த திரைப் படம் ஏற்படுத்தும். இந்தியாவில் தாஜ்மகாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் வந்து பார்க்க வேண்டும். இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த லைகா புரொடக்‌ஷனுக்கும், தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ்க்கும் நன்றி.

பழுவேட்டரையர் 64 விழுப்புண் களை பெற்ற மாவீரர். பொன்னி யின் செல்வன் கதையை படிக்கும் போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத் துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப் பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன், அவர் நடித்திருந்தால் அந்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருப்பார். இப்போது நான் வில்லனாக நடிப்பது குறித்து கேட்கிறார்கள்
நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத் திரங்கள் தான். அதில் சிறப்பாக நடிப்பவர்கள் தான் நல்ல நடிகராக இருக்க முடியும்.

தற்போது 21 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனா கவும், முதன்மை கதாபாத்திர மாகவும், வில்லனாகவும் பல பாத்திரங்களில் நடித்து வருகி றேன். எப்போதும் போல் படத் திற்கும் எனக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்.

பிறகு சரத்குமாரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது, ‘ஐஸ்வர்யாராய் உலக அழகி நான் மிஸ்டர் மெட்ராஸ். அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க  முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. பிறகு மணிரத்னம் சார், என்ன சரத் ரொமான்ஸ் பண்ண தெரியாதா பண்ணுங்க என்றார். அதன் பிறகு ரொமான்ஸ் காட்சி நன்றாக வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்த போது நான் நடந்துவரும் காட்சி யில்  தவறி விழுந்து விட்டேன்  காலில் பலத்த அடிபட்டுவிட்டது. ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு வலியுடனே காட்சியை நடித்து முடித்தேன். பொன்னியின் செல்வன் பெரிய வெற்றிபெறும்” என்றார்.

Related posts

டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தந்த திருமண விருந்து

Jai Chandran

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ஆப்ரகாமின் பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

Jai Chandran

“Marandhaye” from Arya ‘s “Teddy”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend