தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலி னுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி. தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு திரையரங் குகளில் நூறு சதவிகித இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்த்து கண்டு களிக்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டு கோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று இன்று தமிழக முதல்வர் அவர்கள் திரையரங்குகளில் நூறு சதவிகித இருக்கைகளில் அமர்ந்து படம் பார்க்க ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கம் சார்பில் இருகரம் குவித்து நன்றி யினை தெரிவித்துக்கொள் கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
