Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

குருமூர்த்தி (படவிமர்சனம்)

படம்:குருமூர்த்தி

நடிப்பு: நட்டி ,பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா

தயாரிப்பு:பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய்

இசை: சத்யதேவ் உதயசங்கர்

ஒளிப்பதிவு : தேவராஜ்

இயக்கம்: கே.பி.தனசசேகர்

பி ஆர் ஒ: சக்தி சரவணன்

கோடீஸ்வரர் ராம்கி தனது சின்ன வீட்டுக்கு பங்களா வாங்கித்தர 5 கோடி ரூபாய் பணத்துடன் காரில் புறப்படுகிறார். வழியில் கடை யொன்றில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்க காரிலிருந்து இறங்கி செல்கிறார் அப்போது காரிலிருக்கும் பணப் பெட்டியை திருடன் திருடி செல்கிறான். திருட்டு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டியிடம் புகார் தருகிறார். பணப்பெட்டியை தேடி எஸ்டேட் முழுவதும் நட்டியும் போலீஸ் டீமும் அலைகிறது. பெட்டி ஒவ்வொருவர் கைமாறி சென்று கொண்டே இருக்கிறது. பலரும் அந்த பணத்தை ஆட்டயபோட முயல்கின்றனர். கடைசியில் பணம் ராம்கிக்கு திரும்பி வருகிறதா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ராம்கியை திரையில் பார்த்தாலும் அதே இளமை மாறாமலிருக்கிறார். ஆனால் அவருக்கு அதிகம் வேலை யில்லை. பணத்தை பறிகொடுத்த பின் அவரது ஆன்மா பணப்பெட்டி எங்கெல்லாம் செல்கிறதோ அதன் பின்னாடி அலையும்போது இது பேய் கதையாக மாறுமோ என்ற சந்தேகம் எழுகிறது. நல்லவேலை யாக அப்படியெதுவும் நடக்க வில்லை.

நட்டி ஸ்டிரிக்ட்டான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் செய்யாமல் நியாயமான நடிப்பை வழங்கி கதாபாத்திரத்தை கச்சிதமாக நிறைவு செய்கிறார்.
ரவுடிகளுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்.
மனைவி பூனம்பாஜ்வாவுடன் பாடல் காட்சி யொன்றில் நெருக்கமாக நடித்து கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறார்.

போலீஸ் ஜீப் டிரைவராக வரும் ரவிமரியா, ஹெட்கான்ஸ்டபிள் மனோபாலா காமெடி அரட்டை அடிக்கின்றனர். ரவிமரியா பாத்திரத்தில் கொஞ்சம் வில்லத் தனமும் கலந்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

சஞ்சனா சிங், அஸ்மிதா கவர்ச்சி ஊறுகாய் பரிமாறுகின்றனர்.

கொடைக்கானல் எஸ்டேட்டை வளைத்து வளைத்து படமாக்கியி ருக்கிறார் ஒளிப்பதிவாளர்  தேவராஜ்.

பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் தயாரித்திருக்கின்றனர்.

சத்யதேவ் உதயசங்கர் இசை ஒ கே.

காமெடியுடன் ஒரு க்ரைம் கதையை கமர்ஷியல் மசாலா தடவி அளித்திருக்கிறார் இயக்குனர்  கே.பி.தனசசேகர்.

குருமூர்த்தி – கமர்ஷியல்  காமெடி மசாலா.

 

 

Related posts

‘Adipurush’ Trailer Drops, Fans Brace for an Epic Blockbuster

Jai Chandran

தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்*

Jai Chandran

DiaryTeaser 500K+views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend