படம்: சூரகன்
நடிப்பு: வி.கார்த்திகேயன், சுபிக்ஷா.கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர்.அலிகான், வினோதினி பாண்டியராஜன், வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி டேஞ்சர் மணி கே. எஸ். ஜி வெங்கடேஷ்,
தயாரிப்பு: வி.கார்த்திகேயன்
இசை: அச்சு ராஜாமணி
ஒளிப்பதிவு: சதீஷ் கீதா குமார், ஜேசன் வில்லியம்ஸ்
இயக்கம்: .சதீஷ் கீதா குமார்
பி ஆர் ஒ: சதீஷ் (AIM), சிவா
விபத்தொன்றில் பார்வை பாதிக் கப்பட்டு எல்லாமே தலைகீழாக தெரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈகன் (வி.கார்த்திகேயன்) தவறு தலாக ஒரு.பெண்ணை சுட்டுவிடு கிறார். இதில் சஸ்பென்ட் ஆகிறார். இந்நிலையில் ரோட்டில் அடிபட்டு கிடக்கும் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார் அந்த பெண்ணும் இறந்து விட அவரை யாரோ கொலை செய்தி ருக்கிறார்கள் என்று அறிந்து கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். அவரால் அதைக் கண்டு பிடிக்க.முடிந்ததா ? சஸ்பென்ட் ஆன போலீஸ் வேலை திரும்ப கிடைத்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
கற்ற வித்தைகளை காட்ட வேண்டும் என்ற ஆர்வம் ஹீரோ வி.கார்த்திகேயன் நடிப்பில் தெரிகிறது. ஆக்ஷன், நடனம், நடிப்பு என சிறப்பு காட்டி இருக்கி றார். இவரே தயாரிப்பாளர் என்றாலும் படத்தில் சபிக்ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர்.அலிகான், வினோதினி பாண்டியராஜன், வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி டேஞ்சர் மணி கே. எஸ். ஜி வெங்கடேஷ், என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே துணைக்கு அழைத்து வந்திருக் கிறார்.
நடு ரோட்டில் ஒரு.பெண் அடிபட்டு கிடக்க அவரை காப்பாற்ற கார்த்தி கேயன் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் மனிதாபிமானம் இருந்தாலும் அவரை எதற்காக கொன்றார்கள் என்ற துப்பு துலக்கும் வேலையெல்லாம் எதற்காக.இவர் ரிஸ்க் எடுத்து செய்கிறார் என்பதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை. அதேபோல் விபத்தில்.பார்வை நரம்பு பாதிக்கப்பட்ட விஷயம் புதுசாக இருந்தாலும் அதை படத் திற்கு பொருத்தி பார்க்க முடியாத ளவுக்கு காட்சிகள் எல்லாமே வழக்கமான கோணத்திலேயே படமாக்கப்பட்டிருப்பதால் வித்தி யாசமாக யோசித்த பார்வை பாதிப்பு குறைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காததால் திடீரென்று கிளைமாக்சில் வின்சென்ட் அசோகனை. சுடுவதற்கு ஹீரோ கிரேனில் தலைகீழாக தொங்கும்போது மட்டும் தலைகீழ் குறைபாடு பயன்படுத்தப்படுவது ஆடியன்சுக்கு மறந்தே போய் விடுகிறது.
நிழல்கள் ரவி இதுவரை இவ்வளவு பெரிய.மிஷின் கன்னை எந்த படத்திலும் அவர் பயன்படுத்தியது போல் தெரியவில்லை. மன்சூர் அலிகான் ஹீரோவுக்கு உதவும மற்றொரு வில்லனாக வருகிறார். ஹீரோயின் சுபிக்ஷா கிருஷ்ணன் காட்சி பொருளாகி இருக்கிறார்.
பெரிய நட்சத்திர பட்டாளத்தை திரையில்.காட்டி இருக்கும் இயக்குனர் சதீஷ் கீதா குமார் அவர்களை சரியாக பயன்படுத்தி னாரா என்றால் இல்லையென்றே தோன்றுகிறது.
சிங்கம் பட பாணியில் படத்தை தர.வேண்டும் என்ற எண்ணத்தில் கார் சேசிங் காட்சிகளை வேக மாக படமாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர்.
கதையை கோர்வையாக தரத் தவறியிருக்கிறது எடிட்டிங் டேபிள். காட்சிகள் சில இடங்களில் ஜம்ப் ஆகிறது.
அச்சு ராஜாமணி இசை பாடல் களை மெலடியாகவும் குத்தாட்ட மாகவும் தந்திருக்கிறார்.
சூரகன் ,- B and C க்கான ஆக்ஷன் மசாலா.
