Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

ஹைக்கூ (பட விமர்சனம்)

படம்: ஹைக்கூ

நடிப்பு: ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ்

தயாரிப்பு:விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து

இசை: சித்துகுமார்

ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசாமி

இயக்கம்: யுவராஜ் சின்னசாமி

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’ One), அப்துல் ஏ நாசர்

கதை:  பெண்கள் கல்லூரியில் ஒரே மாணவனாக சேர்கிறான் மனோ  (ஏகன்). அதே கல்லூரியில் படிக்கும் கொடி (ஸ்ரீதேவி ) உடன் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த காதல் காணாமல் போகிறது. காலம் கடக்கிறது மனோ நிறுவனத்தில் வேலை செய்கிறான்  அங்கு  நிவேதா (ஃபெமினா ஜார்ஜ்)  என்ற பெண்ணுடன் ஒரு காதல் மலர்கிறது. அந்த காதலும் காணாமல் போகும் சூழல் ஏற்படுகிறது. காதல் சிறையில் சிக்கி தவிக்கும் மனோ என்ன முடிவு எடுக்கிறான் என்பது தான் கிளைமாக்ஸ்.

. புதுமுக ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ஏகன்  கல்லூரி மாணவன் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பதுடன் அந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தியிருக்கிறார்.  ஹீரோ என்றவுடன் ஆக்ஷன் அதிரடி என்றெல்லாம் முதல் படத்திலேயே அலட்டிக் கொள்ளாமல்  கதாபாத்திரம் என்ன? எந்த அளவுக்கு நடிக்க வேண்டும்? என்ற மீட்டரை சரியாகப் புரிந்து கொண்டு நடித்திருப்பதுதான் அவரை ஏற்றுக் கொள்ள வைக்கிறது..

நடிப்பில் எவ்வளவு நிதானமும் பொறுமையும் காட்டியிருக்கிறாரோ வசனம் பேசுவதிலும் அவ்வளவு தெளிவும் உச்சரிப்பும் காட்டி இருப்பது ஏகனுக்கு இந்த கதாபாத்திரத்திற்கான புதிய உயிரோட்டத்தை தருகிறது. ஆனால் இதுவே  அவரது ஸ்டைலாக அடுத்தடுத்து வரும் படங்களிலும் இருந்துவிடக் கூடாது. மாறுபட்ட நடிப்பும் கதாபாத்திமும்தான் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும்..

ஏகன், ஸ்ரீதேவி காதல்  ஜென்சி காதலை கொண்டதாக இருந்தாலும் 90ஸ் காதலும் பின்னிப் பிணைந்திருப்பது  காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.  அவர் வேறு ஜாதி,  இவர் வேறு ஜாதி என்பதால் இந்த கதை ஒரு ஆணவ கொலை கதையாக மாறிவிடுமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு திருப்பத்தை இயக்குனர் வைத்து எதற்காக இவர்களின் காதல் பிரிகிறது என்பதை கிளைமாக்ஸ் நெருக்கத்தில்  ஓபன் செய்யும்போது… பல இளைஞர்கள், ஏன்? இன்னும் சொல்லப் போனால் இளைஞிகள் கூட தங்களின் காதல் முறிவுக்கு என்ன காரணம் என்பதை மனதார உணர்வார்கள். அப்படி உணர்ந்து பிரிந்த ஒரு காதல் ஜோடியாவது ஒன்று சேர்ந்தால்  அதுதான் இந்த கதைக்கு கிடைக்கும் மிகப்பெரிய  வெற்றியாக இருக்கும்.

ஈகோ, பொசசிவ்னஸ்  எதார்த்தமான காதலுக்கு கூட எவ்வளவு எதிரிகளாக இருக்கிறது என்பதை மையப்படுத்தி இருப்பது தான் இந்த முப்பரிமான காதல் கதையின் மையக்கரு.

கொடியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி  வலியச் சென்று ஏகனிடம் காதலை வளர்த்துக் கொண்டாலும் தனக்கென ஒரு செல்ப் ரெஸ்பெக்ட்  எதிர்பார்ப்பது எல்லா பெண்களிடம் உள்ள இயல்பு. அந்த இயல்பை இரண்டாவது காதலி ஃபெமினா ஜார்ஜ் காதலிலும் எதிரொலிப்பது   சில காதலர்கள் காதலியிடமிருந்து புரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்.

ஃபெமினா ஜார்ஜ் இரண்டாம் பாதி முழுக்க ஆக்கிரமித்தாலும்  நடிப்பில் பல்வேறு பரிமாணங்களை காட்டி அசத்தி இருக்கிறார்.

படத்தில் இன்னும் பலர் நடித்திருந்தாலும் அவர்கள் எல்லோருமே அந்தந்த பாத்திரங்களாக வந்து செல்வது கதையை திசை மாற்றாமல் கொண்டு செல்ல உதவுகிறது.

ஒரு ஆணை ஒரு பெண் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அவள் காலில் அந்த ஆண் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் அவனை மீண்டும் அவள் ஏற்கமாட்டாள்  போன்ற வசனங்களில் உண்மை ஒளிந்திருக்கிறது

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து   படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் தனது காதல் சித்து விளையாட்டு விளையாடி இருக்கிறார்.

பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு கண்களை திரையில் கட்டி போட்டு விடுகிறது.

இயக்குனர் யுவராஜ் சின்னசாமி  காதலில்  என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறார்  என்ற எண்ணத்தில்தான் தொடக்க காட்சிகள் நகர்கின்றன ஆனால்  காதலின் உள்ளார்ந்த ரகசியத்தை ஒன்றுக்கு இரண்டு முறை இந்த படத்தில் சூத்திரமாக கையாண்டிருப்பது வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும். அதேசமயம் இன்னும் கூட ஐந்து அல்லது பத்து நிமிட காட்சிகள் குறைத்தால்  விறுவிறுப்பு அதிகரிக்கும்

ஹைக்கூ –  காதல் வெற்றிக்கான சீக்ரெட்.

Review by

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

 

.

 

 

 

 

Related posts

ஸ்கந்தா’ பட ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் இசை தரவரிசையில் முதலிடம்

Jai Chandran

பதக்கம் வென்றவர்களுக்கு மநீம பாராட்டு.

Jai Chandran

‘பாரடைஸ்’ படப்பிடிப்பில் இணைந்த நானி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend