படம்: சட்டமும் நீதியும் 2ம் பாகம் (வெப் சீரிஸ் )
நடிப்பு: சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, பிரேம்குமார், சிவின், கல்லூரி வினோத், ஆறு பாலா, கவிதா பாரதி, பீட்டர் ஜெ சந்திரன், பருல் சம்பாரியா, பவன், அக்ஷயா வி, பிரியங்கா ரோபோ சங்கர், அபர்ணா சுந்தர்ராமன்
தயாரிப்பு: சசிகலா பிரபாகரன்
ஒளிப்பதிவு: கோகுல கிருஷ்ணன்
இசை: விபின் பாஸ்கர்
இயக்கம்: பாலாஜி செல்வராஜ்
வெளியீடு: ZEE5 OTT
பிஆர்ஓ : சதீஷ்குமார் (AIM)
குறிப்பு :சட்டமும் நீதியும் முதல் பாகம் zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சட்டமும் நீதியும் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது.
கதை: போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகவேல் (பிரேம்குமார்) மர்மமான முறையில் சாகிறார். அவரை சில போலீசாரே முன்பகை காரணமாக சுட்டுக்கொன்றனர் என்றும், இல்லை அவர் மன உளைச்சலால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் பெரிய குழப்பம் ஏற்பட இறந்தவரின் மனைவி (வரலட்சுமி சரத்குமார் ) கோர்ட்டில் வழக்கு தொடர்வதுடன் அவரே வழக்கறிஞராக ஆஜராகிறார். இந்த வழக்கில் நான்கு போலீசார் குற்றவாளிகளாக கோர்ட்டில் நிறுத்தப்படுகின்றனர். அவருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் வாதாட முன்வராத நிலையில் நோட்டரி வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி (சரவணன்) குற்றம் சுமத்தப்பட்ட போலீசாருக்கு ஆதரவாக வாதாட முன்வருகிறார். நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையில் என்னென்ன திருப்பங்கள் நடக்கிறது என்பதுதான் விறுவிறுப்பான எபிசோட்களாக பறக்கிறது.
சட்டமும் நீதியும் முதல் பாகத்தில் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக எதார்த்தமாக வாதாடி . அகத்தலான தீர்ப்பை பெற்ற சரவணன் அதே கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்திலும் அதைவிட மெருகு சேர்த்து நடித்திருக்கிறார்.
யாருமே வாதாட முடியா
து என்று கைவிட்ட வழக்கை சரவணன் வழக்கறிஞர் சங்கத்தின் எதிர்ப்பை மீறி வாதாட ஒப்புக் கொள்ளும் போது அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது காட்டும் பரிவையும், எப்படியும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையும் வெளிப்படுத்துவதாக அவரது முகபாவமும் நடவடிக்கைகளும் பிரதிபலிக்கிறது.
ரொம்பவே இழுக்காமல் உடனடியாக கோர்ட் விசாரணை காட்சி தொடங்கப்படுவதால் முதல் எபிசோடில் இருந்தே ஆர்வமும் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு எபிசோடு முடியும்போதும் ஒரு கேள்வியை முன் நிறுத்தும் போது இதை வழக்கறிஞர் சரவணன் எப்படி தனது வாதத்தால் உடைக்க போகிறார் என்ற கேள்வி அடுத்த எபிசோடை உடனடியாக பார்க்கத் தூண்டுகிறது.
சரவணன் வாதமும், அவருக்கு எதிரான வரலட்சுமி சரத்குமாரின் சாட்சி ஆதாரங்களுடன் கூடிய வாதமும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் சரிசம பாத்திரங்களாக நிற்பதுடன் நீயா நானா என்ற போட்டியை இருவருக்குள்ளும் ஏற்படுத்துகிறது
குற்றவாளிகள் மீது சுமத்தப்படும் பழியை சரவணன் ஒவ்வொன்றாக உடைக்கும் போதும் அடுத்தடுத்த ஆதாரங்கள் தந்து குற்றவாளிகளை சிக்கலில் வரலட்சுமி சிக்க விடுவதுமாக
பூனையும் எலியும் துரத்தல் போல் வேகமெடுக்கிறது. கோர்ட் களத்தை சூடாக்குகிறது.
வரலட்சுமி வழக்கமாக ஜெட் ஸ்பீடில் வசனங்கள் உச்சரிப்பவர் அவர் கோர்ட் வாதங்களை வேகமாக உச்சரித்தாலும் தடுமாற்றம் இல்லாமல் புரியும் வகையில் பேசியிருப்பதும், எப்படி இவர் தோற்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்றார் என்ற கேள்விக்கு கிளைமாக்சில் தரும் திருப்பம் சட்டமும் நீதியும் மூன்றாம் பாகத்துக்கு வழி வகுக்கிறது.
லாவண்யா, பிரேம்குமார், சிவின், கல்லூரி வினோத், ஆறு பாலா, கவிதா பாரதி, பீட்டர் ஜெ சந்திரன், பருல் சம்பாரியா, பவன், அக்ஷயா வி, பிரியங்கா ரோபோ சங்கர், அபர்ணா சுந்தர்ராமன் என எந்த கதாபாத்திரமும் வீண் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
குறிப்பாக இன்ஸ்பெக்டராக வரும் பிரேம்குமார் ஒரு சின்ன பாத்திரத்தை ஏன் எடுத்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழும்போது மூன்றாம் பாகத்தில் இவரது அடாவடி தான் அதிகமாக இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சசிகலா பிரபாகரன் பொருட் செலவு பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவிட்டிருப்பது எபிசோடின் பிரம்மாண்டத்துக்கு வழி வகுத்திருக்கிறது.
நான் -லீனியர் எடிட்டிங் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் பாலாஜி செல்வராஜ் ஒரு திரைப்படம் போல் இந்த எபிசோடு ஸ்கிரிப்ட்களை அமைத்திருப்பது எந்த அளவுக்கு அவர் காட்சிகளுக்காக மெனக்கெட்ருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
விபின் இசை, கோகுலகிருஷ்ணன் கேமிரா கைகொடுக்கிறது.
கோர்ட்டு காட்சிக்காக அமைக்கப்பட்டிருக்கும் அரங்கு அதை அமைத்த கலை இயக்குனரை கோலிவுட்டில் பிஸியாக்கிவிடும்.
சட்டமும் நீதியும் இரண்டாம் பாகம் வெப் சீரிஸ் – மின்னல் வேக கிரைம் திரில்லர்.

Review by
k. jayachandhiran
www.trendingcinemasnow.com
