Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நாடு (பட விமர்சனம்)

படம்: நாடு

நடிப்பு: பிக் பாஸ் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம் புலி ஆர்.எஸ்.சிவாஜி மற்றும்  பலர்

தயாரிப்பு: சக்கரா.மற்றும் ராஜ்

ஒளிப்பதிவு: சக்தி

இயக்கம்: சரவணன்

பி ஆர் ஓ:  கே எஸ் கே செல்வா

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கியி ருக்கும் படம் நாடு.

கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் வாழும்.கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையமிருந்தும் அப்பகுதிக்கு பணியாற்ற டாக்டர்கள் யாரும் முன்வர. வில்லை. இதனால் அங்கு மக்கள் உடல் பாதிப்பு ஏற்பட்டால் போதிய சிகிச்சை இல்லாமல்  இறக்கின் றனர். மாரி (தர்ஷன்) யின் தங்கை திடீரென்று தூக்கு மாட்டிக் கொள் கிறார். அவரை தாமதமாக டவுன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் காப்பாற்ற முடியாமல் போகிறது.  இதனால் போராடி ஒரு டாக்டரை. ( மகிமா) வரவழைக்கின் றனர். அங்கு வரும் பெண் டாக்டர் ஒரே வாரத்தில்.அங்கிருந்து சென்று விடுவேன் என்கிறார் அவரை ஊரிலேயே தங்க வைக்க ஊர் மக்கள் எண்ணுகின்றனர். இதனால் அவருக்கு பிடித்தபடி எல்லோரும் நடக்கின்றனர். அவர் எதைக் கேட்டாலும் அதை செய்து தருகின்றனர். ஊர் மக்களின் அன்பு அவரை நெகிழ வைக்கிறது  ஒரு கட்டத்தில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவர் இந்த ஊரிலேயே தங்கி விடுவார்  என்று ஊர் தலைவர் தரும் ஐடியாவும் வீணாகிறது. இந்நிலையில் அவருக்கு குடும்பத்தார்  வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கின்றனர். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு   கிளைமாக்ஸ் எதார்த்தமான பதில் அளிக்கிறது.

சமீபத்தில் இப்படியொரு பொது நலன் வலியுறுத்தி எந்த படமும் வந்ததாக நினைவில்லை. படத்தின் தொடக்கத்திலேயே கொல்லி மலையின் அழகையும் கம்பீரத்தையும்  கேமராமேன் காட்டி வியப்பில் ஆழ்த்தும் அதே வேளையில் இயக்குனர் சரவணன் எந்த மேற்பூச்சும் இல்லாமல் மலைக்கிராம மக்களின் பாதிப்பை எதார்த்தத்துடன் கண்முன் விரியச் செய்கிறார்.

தூக்கு மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடும் தங்கையை காப்பாற்ற தர்ஷன் அவரை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு மலைப்பாதையில் ஓடி வரும்போது மனம் பதறுகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு உயிரை காப்பாற்ற.ஊர் மக்கள் போராடியும் அவரை காப்பாற்ற முடியாமல் போகும்போது இந்த மலைக் கிராமத்துக்கு  ஏன் மருத்துவரே இல்லை என்ற கேள்வியை எல்லோர் மனதிலும் எழ வைக்கிறார் இயக்குனர் சரவணன்.  அதையே படத்தின் கருவாக்கி இருப்பது புத்திசாலித் தனம் .

ஊர் மக்கள் போராட்டத்துக்கு பிறகு அங்கு மருத்துவராக பணியாற்ற மகிமா நம்பியார் வந்ததும் அவர் மனதை கவர ஊர் மக்கள் கொட்டும் அன்பு ஈடு இணையிலாதது.  ஊர் மக்களின் அன்பில் உருகிப் போகும் மகிமா பதிலுக்கு வெறுப்பு எதுவும் காட்டாமல் அன்பையே பொழிவது மனதில் இருக்கை போட்டு அமரும் காட்சிகள்..

மகிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவர் இந்த ஊரிலேயே தங்கிவிடுவார்  என்று ஊர் தலைவர் சிங்கம்புலி தரும் ஐடியாவை கேட்டு சில இளவட்டங் களை தர்ஷன் தயார் படுத்துவதும்  அவர்கள் காதலிப்பதாக சொல்லி சொதப்புவதும் காமெடி சிதறல்கள்.

பலரும் எதிர்ப்பதுபோல் இல்லாமல் கிளைமாக்சை சினிமாத்தனமாக்காமல் எதார்தத்தின் பிரதிபலிப்பாக இயக்குனர் சரவணன் அமைத் திருப்பது படத்தின் உண்மைத் தன்மைக்கு காரண்ட்டி தருகிறது. மலைக்கிராம   இளைஞனாகவே  தர்ஷன் மாறியிருப்பதும் ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி வழக்கமான தனது சேட்டைகளை  சுருட்டி வைத்து விட்டு கதாபாத் திரத்தோடு ஒன்றியிருப்பதும்  எல்லோருக்கும் மேலாக தர்ஷன் தந்தையாக வரும் ஆர் எஸ்.சிவாஜி தான் ஒரு சிறந்த  நடிகன் என்பதையும் உறுதிபடுத்தி யிருப்பது படத்தின் வெற்றிக்கு கைகொடுக்கும்.

புதிதாக வந்த நீட் தேர்வால்  பள்ளி இறுதி தேர்தலில் அதிக மதிப் பெண் பெற்றும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் போவதையும் அதனால் ஒரு பெண்ணின் மரணம், ஊர் மக்களுக்கு டாக்டர் கிடைக்காமல் உயிர் பலிகள் ஆவதை இதைவிட  உண்மைத் தன்மையுடன்  யாராலும்  சொல்லிவிட முடியாது.

படம் எடுப்பதற்கும் இயக்குவதற்கு ஒரு அர்த்தமிருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணமாக உருவாகி இருக்கிறது நாடு திரைப்படம்.

இயக்குனர் சரவணன் போலவே ஒளிப்பதிவாளர் சக்தி, இசை அமைப்பாளர் சத்யா  என எல்லோரும் உழைப்பை உண்மை யாக வழங்கி இருக்கின்றனர்.

நாடு – நீட்டை விரட்டும் இன்னொரு போராளி.

 

 

 

 

Related posts

5 million+ views for the magical teaser of Aalambana.

Jai Chandran

பிக்பாசில் அதிரடி காட்டிய விஜய் சேதுபதி

Jai Chandran

Suriya presents Karthi starrer Meiyazhagan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend