சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற கூழாங்கல் படத்தை தயாரித்த சாய் தேவானந்த் எஸ், சாய் வெங்கடேஸ்வர் தயாரிக்கும் படம் ஜமா.
பந்தெடுங்காலமாக கிராமத்து பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் திருவிழாக்கள் முக்கிய விழாக்களில் பிரதானமாக நடைபெறுவது வழக்கம் அந்த காலந்தொட்டு இந்த காலம் வரை தெருக்கூத்து நாடக நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. தெருக்கூத்து கலை மற்றும் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை அவர்களது உள்ளார்ந்த மன ஆதங்கங்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் தான் ஜமா.
இப்படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் பாரி இளவழகன். கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். பிரதான வருடத்தில் சேத்தன். நடிக்க இவர்களுடன் ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே வி என் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், ஏ கே இளவழகன், காலா குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் இவர்களுடன் மிக தெருக்கூத்து கலைஞர்களும் நடித்துள்ளனர்.
ஜமா படத்துக்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக் கிறார். கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்
இப்படம் பற்றி இயக்குனரும் நடிகருமான பாரி இளவழகன் கூறியதாவது:
ஜமா உலகம் என்பது தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியதாகும். குறிப்பாக தெருக்கூத்தில் பெண்ணிடம் அணிந்து நடிக்கும் நபரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. தெருக்கூத்து சம்பந்தமாக இதுவரை வந்த குறும்படம் அல்லது திரைப்படம் எதுவாக இருந்தாலும் அது எனது மனதை புண்படுத்தும் விதமாகவே இருந்தது.

என் குடும்பத்தினர் உறவினர்கள் தெருக்கூத்து கலைஞர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி வந்த கதைகள் எல்லாமே அவர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் சிரமப்படுகி றார்கள், இந்தக் கலை அழிந்து வருகிறது என்பதாக இருந்தது. நிஜத்தில் அப்படி அல்ல அவர்கள் எல்லோருமே வருடம் முழுக்க நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தெருக்கூத்தில் பெண் வேடம் போடுபவர்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது கிராமத்தில் உள்ளவர்கள் அவர்களின் புடவை பிடித்து இழுப்பது அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது வேதனைக்குரிய விஷயம். ஜமா என்றால் தெருக்கூத்து நாடக குழு என்று அர்த்தம். அம்பலவாணன் நாடக குழு என்பதை பற்றி இப்படம் பேசுகிறது.
என்னைப் பொறுத்தவரை கடந்த ஐந்தாறு வருடமாக சிறு சிறு வேடங்களில் படங்களில் நடித்திருக்கிறேன் மேலும் உதவி இயக்குனராகவும் பணியா ற்றி இருக்கிறேன். படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் நமக்குத் தெரிந்த ஒரு கலையை மையமாகக் கொண்டு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது தான் ஜமா படத்தின் கதை. இதை வேறு யாராவது கூட இயக்கி இருக்கலாம் ஆனால் தப்பாக சொல்லிவிடக்கூடாது எதையும் சரியாக சொல்ல வேண்டும் என்பதால் இக்கலை பற்றி முழுக்க தெரிந்த நானே படத்தை இயக்க முடிவு செய்து அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இதில் பெண் வேடம் போடுபவர் வாழ்க்கை முழுக்க அவர்கள் பெண்ணாகவே வாழ வேண்டிய நிலை இருப்பதால் அவர்களால் ஜமாவை நிர்வகிக்க கூடிய வாத்தியாராக ஆக முடியாது. ஆண் வேடம் போடுபவர் மட்டும்தான் ஜமாவின் வாத்தியாராக ஆக முடியும். அப்படி ஒதுக்கப்படும் பெண் வேடம் போடுபவர் ஒருவர் வாழ்வில் எடுக்கும் முக்கிய முடிவு தான் இப்படத்தின் கரு.

இப்படத்தில் சேத்தன் பிரதான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் தெருக்கூத்து கலைஞருக்கான பயிற்சியும் அவர்கள் பாடும் பாடலுக்கான பயிற்சியும் எடுத்து 100% தனது நடிப்பை வழங்கி இருக்கிறார். படம் அவருக்கு தேசிய விருது கூட பெற்றுத்தர வாய்ப்பு இருக்கிறது.
இந்த படத்துக்கு தயாரிப்பாளர் முதற்கொண்டு யாரிடமும் கதையை சொல்லவில்லை முன்னதாக இதுகுறித்து எட்டு நிமிஷத்துக்கு ஒரு குறும்படம் அதாவது பைலட் படம் தயாரித்தோம். அதைத்தான் நான் தயாரிப்பாளருக்கு கொடுத்தேன் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கும் கொடுத்தேன. என்னை யார் என்று கூட ராஜா சாருக்கு தெரியாது. பைலட் படத்தை பார்த்தவுடன் அழைத்து இசை அமைக்க ஒப்புதல் அளித்தார். அவர் இந்த படத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்டது இப்படத்திற்கு பெரிய பலம் ஆகும். இப்படத்தில் கிளைமாக்ஸ் பாடல் ஒன்று இருக்கிறது அது பற்றி அவரிடம் பேசியபோது இதை சினிமா பாடல் போல் செய்யாமல் நிஜ தெருக்கூத்து பாடல் போல் அமைக்கலாம் என்று கூறி அமைத்தார். அது படத்திற்கு பெரிய ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் சினிமா பாடலகர்கள் யாரும் இந்த பாடலை பாடவில்லை நிஜ தெருக்கூத்து பாடகர்களை அழைத்து பாட வைத்திருக்கிறார் என்பதுதான் சிறப்பு.
கூழாங்கல் படத்தை தயாரித்த தயாரிப்பாளரிடம் இக்கதையை கூறிய போது அவர் அப்படியே ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஒப்புக்கொண்டனர். படம் முடிந்து ஆகஸ்ட்டில் திரைக்கு வர தயாராக இருக்கிறது.
தெருக்கூத்து நாடகத்தின் போது இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுகிறதே என்கிறார்கள் கிராமங்களில் அது எப்போதும் சகஜமாக பேசப்படும் விஷயம். இரவு முழுவதும் புராண கதை சொல்லும்போது அவர்கள் அங்கிருந்து எழுந்து சென்று விடாமல் அமர்த்தி வைக்க இது போன்ற இரட்டை அர்த்த வசனங்கள் பேசி நகைச்சுவை உண்டாக்குவது இயல்பு. அதை தவிர்க்க முடியாது படத்தில் அத்தகைய காட்சிகளை வைத்தால் படம் சென்சாரை தாண்டி கூட வராது எனவே அது போன்ற வசனங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. அதேசமயம் இது ஒரு கலையைப் பற்றி படமாக இருந்தாலும் டாக்குமென்ட்ரி போல் அல்லாமல் கமர்சியல் பார்வையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு இயக்குனர் பாரி இளவழகன் கூறினார்.
தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் கூறும்போது,,” இப்படத்தின் பைலட் காட்சியை நான் பார்த்து வியந்து விட்டேன். கதையைக் கேட்டு பயிற்சி இல்லாமல் இந்த வேடத்தை நடிக்க முடியாது என்று தோன்றியது. தெருக்கூத்து வாத்தியாரிடம் ஐந்து நாட்கள் முறைப்படி பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தேன். மிகவும் எதார்த்தமாக காட்சிகள் வந்திருக்கின்றன” என்றார்.
தயாரிப்பாளர் சாய் தேவானந்த் கூறும்போது,” நல்ல கதைகளை தர வேண்டும் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூழாங்கல் படத்தை தயாரித்தோம். தற்போது ஜமா கதையை தயாரித்திருக்கி றோம். இப்படத்தின் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கி றது. படத்திற்கும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
