Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

418 (பட விமர்சனம் )

படம்: 418

நடிப்பு: சைத்ரா ஜே ஆச்சார், ரமேஷ் இந்திரா, சூரியராஜ் வீரபத்ணி, சரண் லக்க ராஜு, ப்ரீத்தி பகடாலா,  ஸ்ரீ வைஷ்ணவ், ஷஷாங்  பட்டேல்,

தயாரிப்பு நவீன் எர்ணேணி, ரவிசங்கர் எளமஞ்சலி,

இசை : வெங்கி ஜி ஜி

ஒளிப்பதிவு: தினேஷ் திவாகரன்

இயக்கம்: கிர்டன் நடகவுடா

வழங்குபவர் : பிரசாந்த் நீல்

பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

கதை : ஒரே மகனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சொத்துக்களை விற்று மகனை வேதகிரி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கின்றனர். அங்குள்ள மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் அவன் தங்குகிறான்.  418 என்ற எண் கொண்ட அவனது பக்கத்து அறை எந்நேரமும் பூட்டி கிடக்கிறது. அதற்குள் ஆளை கொள்ளும் பேய் இருப்பதாக கூறப்படுகிறது  ஆண்கள் ஹாஸ்டலான அதனுள் பெண்கள் வந்தால் அங்கே அமானுஷ்ய பயங்கரம் நிலவுகிறது. அது ஏன் என்பதை தெரிந்து கொள்வதற்காக துப்பறிய தொடங்குகிறான் மாணவன். அதன் விளைவு படு பயங்கரமாக மாறுகிறது. சக தோழி ஒருவர் 418 அறைக்குள் சென்றே தீருவேன் என சவால் விடுகிறாள். உயிருக்கு உலை வைக்கும் இந்த சவாலின் முடிவு என்ன? பேய் படுத்தும்பாடு என்ன? என்பதை திடுக்கிடும் காட்சிகளுடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் சைத்ரா ஜே ஆச்சார் இப்படத்தில் பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். பிரதான  பாத்திரமென்றால் அவர் தான் படத்தில் பேய்.

சைத்ரா பேயாக மாறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது  அது என்ன என்பதை இடைவேளைக்கு  பிறகு தான் தெரிய வருகிறது.

படத்தில் ரமேஷ் இந்திரா, சூரியராஜ் வீரபத்ணி, சரண் லக்க ராஜு, ப்ரீத்தி பகடாலா,  ஸ்ரீ வைஷ்ணவ், ஷஷாங்  பட்டேல் என பலர் நடித்திருக்கிறார்கள்.

பேய் குடியிருக்கும் ஹாஸ்டல் என்று சொல்லும் அளவுக்கு ஒரு நான்கு மாடி கட்டிடத்தை லொகேஷன் ஸ்பாட்டாக  பயன்படுத்தி அந்த பகுதியையே மங்கலான ஒளி, இருள் சூழ்ந்த இரவு என பயமுறுத்தும் காட்சிகளை படமாக்குவதற்கான அத்தனை வேலைகளையும் பார்த்திருக்கிறார்கள்

418 எண் கொண்ட அறைக்குள்  ஒரு பெண் நுழைய முயல்வதும் அப்போது நடக்கும் பயங்கரமும் கிளைமாகஸின் அந்த  20 நிமிட காட்சி அரங்கில் இருப்பவர்களை உறைய வைக்கிறது.

நவீன் எர்ணேணி, ரவிசங்கர் எளமஞ்சலி படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

வெங்கி ஜி ஜி அதிர வைக்கும் இசை,  தினேஷ் திவாகரனின் பயமுறுத்தும் ஒளிப்பதிவு படத்திற்கு முதுகெலும்பு.

இயக்குனர் கிர்டன் நடகவுடா ஏதோ ஒரு பேய் கதை  என்றில்லாமல் கம்சன் புராண கதையை  கதாபாத்திரத்தோடு முடிச்சு போட்டிருப்பது எதிர்பார்க்காத திருப்பம். எத்தனையோ பேய்க்கதைகள் வந்திருக்கின்றன ஆனால் புராண கதாபாத்திரத்தோடு முடிச்சு போட்டு வந்திருக்கும் கதை இதுவாகத்தான் இருக்கும்..

கே ஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இப்படத்தை வழங்கி இருக்கிறார்.

418  – ஹாரர் பேய் கதை பிரியர்களுக்கு  குருதி விருந்து.

 

Review by

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

Related posts

TheNight” movie Dubbing started..

Jai Chandran

Suriya presents Karthi starrer Meiyazhagan

Jai Chandran

Kichcha Sudeep’s ‘Vikrant Rona: RECORD BREAKER OVERSEAS DISTRIBUTION

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend