Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டொரண்டோவில் இருந்து வந்த பாடகி விதுசாயினி

கே ஜே எஸ் மீடியா புரோடக்சன்ஸ் கலசா ஜே.செல்வம் தயாரிக்கின்ற திகில் திரைப்படம் “கொத்தங் கோடு பங்களா” இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப் பாளரும் மறறும் நடிகருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த படத்தில், புஷ்பா உட்பட பல திரைப்படங்களில் வெற்றிகரமாக பாடல்களை எழுதிக் கொண்டி ருக்கும் கவிஞர் விவேகா பாடல்கள் அனைத்தும் எழுதுகி றார் என்பது சிறப்பு.

இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பு,இசையமைப்பாளர் விது பாலாஜி கதாநாயகனாக நடிப்பதுதான்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டூயட் பாடலின் ஒளிப்பதிவு சென்னையில் நடை பெற்றது.இப்பாடலை பாட பாடகி விதுசாயினி பரமநாதன் பிரத்தியேகமாக கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டார்.இவர் 2019ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்னைக்கு வரவழைக்கப் பட்டார். இவர் இளைய தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்  படத்தில் ‘மாதரே…’ எனும் பாடலை சின்மயியுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.அதன்பிறகு 2022ஆம் ஆண்டு “கொத்தங்கோடு பங்களா” திரைப்படத்தில் பாடுவதற்காக வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.

இப்பாடல் குறித்து இசையமைப் பாளர் விது பாலாஜியிடம் கேட்டபோது இந்த பாடல் ஒரு வித்தியாசமான காதல் பாடல்.இதற்கு வசீகரமான ஒரு குரல் தேவைப்பட்ட காரணத்தி னால் நானும் இயக்குனரும் கலந்து உரையாடி இவரை கனடாவில் இருந்து வரவழைத்தோம்.

இந்தியாவிலேயே 50க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்கக்கூடிய ஒரே மகத்தான இசைக்கலைஞர் இப்பாடலின் பின்னணி சேர்திருப்பது மற்றும் ஒரு சுவாரசியமான நிகழ்வு.

இத்திரைப்படத்தில் நாயகன் விது பாலாஜிக்கு இரண்டு கதாநாய கிகள். ஒருவர் கொல்கத்தாவில் பிரபலமான மாடலும்,மற்றொருவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை யாக திகழ்ந்து கொண்டிருப்பவர்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கலாச ஜே.செல்வம் அவர்கள் இசைய மைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் 15 ஆண்டுகளாக ஒலிப்பதிவாளராக இருந்  தவர்.அதனால் யுவனின் ஆசி பெற்று இத்திரைப்படத்தை துவங்கியுள்ளது குறிப்பிடத்  தக்கது.

Related posts

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!

Jai Chandran

ஜெயிலர் வெற்றிக்கு காரணம் ரஜினியின் பவர் – இயக்குனர் நெல்சன்

Jai Chandran

Priya Prakash Varrier became an internet sensation

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend