படம்: ஜீவி2
நடிப்பு: வெற்றி, கருணாகரன், அஸ்வினி, ரோகிணி, முசாபிர், மைம்கோபி, ஜவஹர்
தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்.
ஒளிப்பதிவு : பிரவின் குமார்.டி.
இயக்கம்: வி.ஜே.கோபிநாத்
பி ஆர் ஒ: ஏ.ஜான்
ரிலீஸ்: ஆஹா தமிழ் ஒ டி டி
தொடர்பியல், முக்கோண விதி, மைப்புள்ளி என்ற கோட்பாடு களால் ஒரு மனிதனின் வாழ்வில் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது ஜீவி முதல் பாகத்தில் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜீ வி 2ம் பாகம் உருவாகியிருக்கிறது.
வாடகை கார் ஓட்டும் சரவணன் (வெற்றி) தனது பார்வையற்ற மனைவி கவிதா (அஸ்வினி) மற்றும் அவளது குடும்பத்துடன் வசிக்கிறான். முதல் பாகத்தில் காணாமல் போன சரவணனின் நண்பன் மணி (கருணாகரன்) மீண்டும் வந்து சேர்கிறான். சரவணனுக்கு குடும்பம் நடத்த போதுமான வருமானம் கிடைக் காத நிலையில் புதிய நண்பன் ஹரி(முசாபிர்) வீட்டில் திருட சரவணன் திட்டமிடுகிறான். திட்டப்படி நகையை திருடி வருகிறான். அதேசமயம் ஹரி கொல்லப்படுகிறான். இந்த பழி சரவணன் அவனது நண்பன் மணி இருவர் மீதும் விழுகிறது. இருவரையும் போலீஸ் விசாரிக்கி றது. ஆனால் ஹரியை யார் கொன் றார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. கொலைகாரன் என்ற சஸ்பென்ஸ் கிளைமாக்ஸில் உடை கிறது.
வெற்றியின் எதார்த்த நடிப்பு காட்சி களை நம்பும்படி செய்வது மாஜிக். தன் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவம்போல் தனது மனைவி யின் குடும்பத்திலும் நடப்பதை அறிந்து அதிர்ச்சி அடையும் வெற்றி அதற்கான காரணத்தை தேடி மனநல மருத்துவர் ஒய் .ஜி . மகேந்திரனை பார்த்து ஆலோசனை கேட்பதும் அவரிடம் பாதி உண்மையை மறைத்துப் பேச “இந்த தொடர்பியல் பற்றி அறிய உன் மனத்துக்குத் தான் நீ என்ன செய்தாய் என்பது தெரியும் அங்கு போய் தேடு ” என்று பதில் அளிப்பது உண்மையிலும் உண்மை.
நண்பன் முசாபிரை கொன்ற கொலையாளியை தேடிச் செல்லும் வெற்றி திருச்சியில் இருக்கும் முசாபிரின் நண்பரை சந்தித்து விசாரிப்பதும் அப்போது மற்றொரு தொடர்பியலாக காணாமல்போன நகைகள் கிடைப்பதும், பின்னர் சிறுமி ஒருவரை தத்தெடுக்கச் செல்லும்போது அந்த சிறுமியும் தொடர்பியல் இணைப்பில் அவருக்கு கிடைப்பதும் காட்சி களை ஒன்றுக்கொன்று இணைக்கும் சங்கிலி தொடர்போல் அமைவது ஆச்சர்யம்.
ஏற்கனவே சொன்னதுபோல் வெற்றியின் நடிப்பில் நல்ல முன்னேற்றம். அறையில் கருணாகரனுடன் குத்தட்டம் போடுமபோது எனர்ஜியாக ஆடுகிறார் . எந்நேரமும் முகத்தில் ஒரு சோக ரேகையுடன் இருப்பதையும் மாற்றிக் கொண்டால் நடிப்பில் மெருகு கூடும்.
கருணாகரன் வெற்றியின் உற்ற நண்பராக வருகிறார். வெற்றி வாழ்வில் விதி செய்யும் விபரீதங்கள் தன் வாழ்விலும் நடக்குமோ என்று பயப்படுவது கலகலப்பு.
வெற்றிக்கு ஜோடியாக பார்வை யற்றவராக நடித்திருக்கும் அஸ்வினியும் கிடைத்த சந்தர்ப் பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு குடும்பபாங்கான நடிகை என பேச வைக்கிறார்.
குடிகார. இன்ஸ்பெக்டர் ஜவஹர் , மைம்கோபி, ரோகிணி, முசாபிர் ஆகியோரும் நடிப்பில் பங்களிப்பு செய்திருக்கின்றனர்.
மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.
சுந்தரமூர்த்தி கே.எஸ். பின்னணி இசையும் பிரவின் குமார்.டி. ஒளிப்பதிவும் ஏமாற்றவில்லை
வி.ஜே.கோபிநாத் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு ஜீவி 2 படம் இயக்கி உள்ளார். ஜீவி முதல்பாகத்தைவிட ஜீவி 2ம் பாகம் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக் கிறது.
ஆஹா தமிழ் ஒ டி டியில் இது வெளியாகி உள்ளது.
ஜீ வி 2 -விதியின் பாதைகள்.