மின்விசை நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து உருவாகி இருக்கும் படம் சங்கத்தலைவன் . இதில் சமுத்திரக்கனி, கருணாஸ் பிரதான வேடத்தில் நடித்திருக்கின்றனர். காகா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கி உள்ளார். பாரதிநாதன் கதை எழுதி உள்ளார். சோனு லட்சுமி ரம்யா, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படக் குழுவினர் பேட்டி அளித்தனர். அப்போது வெற்றி மாறன் கூறும்போது,’சங்கத் தமிழன் படம் தியேட்டரில் வெளியாவதற்கு தயாரிப் பாளர் தாணு சார் நிறைய உதவி செய்திருக்கிறார். இப்படம் பற்றி மணிகண்டன் என்னிடம் கூறியபோது அதில் நானும் இணைய சம்மதித் தேன், சமுத்திரக்கனி, கருணாஸ் உள்ளிட்ட அனை வரும் தங்களது நடிப்பை சிறப் பாக செய்திருக்கின்றனர். இதில் உழைத்த அனைவ ருக்கும் எனது நன்றி’ என்றார்.
மணிகண்டன்,’இப்படத்தை தயாரிப்பாளர்களிடம் சொன னால் ஓ கே நன்றாக இருக்கிறது செய்யலாம் என்பார்கள். வெற்றி மாறனிடம் கூறும் போது இந்த கதையின் கனம் புரிந்தது. ஏனென்றால் வாசிப் பாளர்களுக்குத்தான் இந்த கதையின் கன்டென்ட் என்ன என்பது தெரியும். இந்த படத்தை தயாரிக்கலாம் என்றார் அப்போது அவருக்கு ஒரு பயம் இருந்தது. இன்று வரை அந்த பயம் அவருக்கு இருக்கிறது. படம் வெளிவரும் வரை அந்த பயம் இருக்கத் தான் செய்யும். கதை ஆசிரியர் பாரதிநாதன் இந்த படம் பார்க்க வருவதாக கூறினார். அப்போது எனக்கு ஒரு பயம் இருந்தது. அவர் இதை ஒரு படைப்பாக எழுதியபோது இருந்த உணர்வு இந்த படம் முழுவதும் இருக்குமா என்ற பயம்தான் எனக்கு இருந்தது. அவர் படத்தை பார்த்துவிட்டு சினிமாவில் எந்தளவுக்கு சொல்ல முடியுமோ அதை சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னபோது திருப்தி யாக இருந்தது’ என்றார்.
சமுத்திரக்கனி பேசும் போது,’இந்த படத்தில் கருணாஸ் கண் கலங்க வைக்கும் வகையில் நடித்தி ருக்கிறார். மற்றவர்களும் நன்கு நடித்துள்ளனர். இப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை ஒரு பரிசாக எண்ணுகிறேன். என் வாழ்க் கையில் இது மறக்க முடியாத படமாக இருக்கும்’ என்றார்.
எழுத்தாளர் பாரதிநாதன் கூறும்போது,’சங்கத்தலைவன் படத்துக்கு சங்கத்தலைவர் என்று பெயர் வைப்பதைவிட சங்கத்தமிழன் என பெயரிட்டதற்கு காரணம் இந்த் பெயர்தான் மக்களுக்கு நெருக்கமானதாக இருக்கும். இது தொழிலாளர்கள் வர்கத்தின் உரிமையை பேசும். நாவாலக நான் எழுதியதை சினிமாவில் எவ்வளவு அளவுக்கு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லி இருக்கிறார்கள்’ என்றார்.
கருணாஸ் பேசியதாவது: வெற்றிமாறன், மணிகண்டன் இருவரும் நண்பர்கள். வெளிப்படையான அவர்களின் நட்புபோல் இன்றைக்கு இருக்கும் சுயநல உலகத்தில் எலோருக்கும் அமைவது மிகவும் கடினம். அவர்களின் நட்ப்புபோல்தான் எனக்கும் பட தயாரிப்பாளர் உதயகுமருக்கும் உள்ள நடபு. இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் அவர் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார்.
இதில் என் நண்பன் மாப்பிள்ளை சமுத்திக்கனி நடித்திருக்கிறார். அவர் நார்மலா பேசினாலே வேறமாதிரி இருக்கும் இந்த படத்தில் அவரது வேடம் உணர்ச்சியை தூண்டும். சேகுவார் சொன்னார், அந்த தலைவர் சொன்னார் என்று வசனம் பேசும்போது படம்பார்த்துக்கொண்டிருந்த எனக்கே டெம்ட் ஆகிறது. இந்த கதாபாத்திரத்தில் ஒன்று சத்யராஜ் நடிக்க வேண்டும் அல்லது சமுத்திரகணி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னார். சமுத்திரகனியிடம் கேட்டபோது நடிக்க ஒப்புக்கொண்டார். நடிக்கும்போது எனக்கும் நிறைய வசன உச்சரிப்பை சமுத்திரக்கனி சொல்லிக்கொடுத்தார். அவர் நடிகர் மட்டுமல்ல ஒரு இயக்குனர்.
நான் தாடி வைத்திருப்பதுபற்றி கேட்கிறார்கள் கோவிலுக்கு போகிறீர்களா என்கிறார்கள். தாடி மீசையுடன் இருந்தால் அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் வேடம் தருவார் என்பதற்காக கத்திருக்கிறேன்.
இவ்வாறு கருணாஸ் பேசினார்.
மேலும் தயாரிப்பாளர் உதய குமார், ஒளிப்பதிவாளர் சீனிவாசன், இசை அமைப் பாளர் சற்குணம், நடிகர் மாரிமுத்து, நடிகைகள் சோனு லட்சுமி, ரம்யா ஆகியோர் பேசினார்கள்.